கார்களே தோத்துடுச்சேப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

15 நிமிஷத்தில் முழுமையாக சார்ஜாக கூடிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை (ஆட்டோ ரிக்ஷாவை) எக்ஸ்போனென்ட் எனர்ஜி (Exponent Energy) நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த மின்சார ஆட்டோ குறித்த கூடுதல் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

எக்ஸ்போனென்ட் எனர்ஜி (Exponent Energy) நிறுவனம் தான் உருவாக்கியிருக்கும் உலகின் அதிக வேகமாக சார்ஜாகும் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் முடியாத வேகத்தில் இந்த ஆட்டோ சார்ஜாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, முழுமையாக சார்ஜை இழந்த பூஜ்ஜிய நிலையில் இருந்து 100 சதவீத சார்ஜை எட்ட இந்த ஆட்டோவிற்கு வெறும் 15 நிமிடங்களே போதும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

ஆனால், இந்த அதிக வேக சார்ஜை நிறுவனத்தின் இ-பம்ப் சார்ஜிங் மையத்தால் மட்டுமே சாத்தியம் என்ற ஓர் ட்விஸ்டையும் நிறுவனம் முன் வைத்துள்ளது. ஆமாங்க, இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ உற்பத்தியாளர் ஓர் இ-பம்ப் சார்ஜிங் மையத்தையும் உருவாக்கியிருக்கின்றது. இதுவே, ஆட்டோவை அதிக வேகத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள உதவியாக இருக்கின்றது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் 8.19 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் வழக்கமான எல்பிஎஃப் செல் கெமிஸ்ட்ரியைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பேட்டரி பேக்காகும். இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

நிறுவனத்தின் இ-பம்ப் சார்ஜிங் மையத்தைக் கொண்டு தங்களுடைய எலெக்ட்ரிக் ஆட்டோவை மட்டுமல்ல பிற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களையும் மிக அதி வேகத்தில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், அனைத்து நிறுவனங்களின் மின்சார வாகனத்தையும் சில நிமிடங்களில் இங்கு முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது தெரிகின்றது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

அதாவது, 15 மடங்கு அதி வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். எக்ஸ்போனென்ட் எனர்ஜி நிறுவனம் இந்த அதிக வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் ஆட்டோவை வரும் அக்டோபர் மாதம் டெலிவரி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது நிறுவனத்தின் இந்திய தயாரிப்பிற்கு ஆட்டோ பிரியர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பு நிலவி வருவதாகவும் இந்த வரவேற்பை முன்னிட்டு இ-ஆட்டோவை விரைவில் டெலிவரி கொடுப்பதற்கான பணியை நிறுவனம் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

இத்துடன், நிறுவனத்தின் இ-பம்புகளுக்கு அமைப்பதற்கு சுமார் 100 ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும், நிதியாண்டு 2023 முடிவடைவதற்குள் அவை அனைத்தையும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் பெரும்பாலான ஆர்டர்கள் பெங்களூருவில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

சமீப காலமாக மின்சார வாகனங்கள் தீ விபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு நிறுவனம் எலெக்ட்ரிக் ஆட்டோவில் பயன்படுத்தியிருக்கும் பேட்டரியை உருவாக்கியிருக்கின்றது. 50 உயர் வெப்பநிலையை கூட அது தாக்கு பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

இது நீண்ட ஆயுட் காலம் மற்றும் அதிக பயன்பாட்டு வசதியையும் கொண்டிருப்பதாக எக்ஸ்போனென்ட் எனெர்ஜி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, வழக்கமான ஆட்டோக்களில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை முழு கவர்ச்சியான வாகனமாக உருவாக்கியிருக்கின்றது.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

இத்தகைய சூப்பரான ஆட்டோவையே எகஸ்போனென்ட் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வெளியீட்டு நிகழ்வின் வாயிலாக அல்டிகிரீன் ப்ரொபல்சன் லேப் உடனான கூட்டணியையும் அது வெளிப்படுத்தியுள்ளது. மின்சார வாகனம், பேட்டரி மற்றம் இ-பம்ப் உள்ளிட்ட கருவிகளை கூடுதல் சிறப்புமிக்கதாக மாற்ற இந்த இணைப்பு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்களே தோத்துடுச்சுப்பா... 15 நிமிஷத்துல ஃபுல் சார்ஜாகும் திறனில் எலெக்ட்ரிக் ஆட்டோ... இதையே வாங்கிடலாம்போல!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், அவை அதிக நேரங்களை முழுமையாக சார்ஜடைய எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. இந்த அவலநிலையை தவிர்க்கக் கூடிய ஓர் தயாரிப்பாகவே இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறன் தற்போது விற்பனையில் அதி-நவீன எலெக்ட்ரிக் கார்களையே ஓரங்கட்ட வைக்கின்ற அளவிற்கு இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: உதாரணத்திற்காக எக்ஸ்போனென்ட் எனர்ஜி நிறுவனத்தின் பிற தயாரிப்புகளின் படம் மற்றும் அல்டிகிரீன் ஆட்டோ படம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Exponent energy unveils world s fastest charging e auto
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X