Just In
- 11 hrs ago
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- 12 hrs ago
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
- 12 hrs ago
ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!
- 12 hrs ago
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...
Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- News
"மாநிலங்களை ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Movies
இளையராஜாவின் சாதனைக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்...கமல்ஹாசன் வாழ்த்து
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விமானத்தின் டிக்கெட் விலை ஏறி ஏறி இறங்க இதுதான் காரணம்... அடுத்த முறை புக் பண்ணும்போது கவனமா இருங்க!
விமானத்தின் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுவதற்குப் பின்னால் உள்ள விஷயங்கள் என்னென்ன? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமானப்பயணம் என்பது பலருக்குக் கனவு. வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து சென்றுவிட வேண்டும் என நாம் விரும்புவோம். ஆனால் விமானங்களில் டிக்கெட் விலை தாறுமாறாக இருக்கும். சாதாரண மக்களுக்கு விமான பயணம் என்பது இன்றும் எட்டாத கனியாகவே இருக்கிறது.

இந்நிலையில் சிலர் விமானத்தில் குறைந்த விலையில் பயணித்தாக சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஆன்லைனில் சென்று புக் செய்யலாம் என்று பார்த்தால் விலை அதிகமாக இருக்கும்.

இப்படியாக விமான டிக்கெட்டின் விலை ஒரு நிலையற்றதாக மாறிக்கொண்டே இருக்கும். இப்படியாக விமான பயணத்தில் டிக்கெட்டின் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது. எப்படிப்பட்ட விமானங்களில் டிக்கெட் விலை குறைவாக இருக்கும் எப்படிப்பட்ட விமானங்களில் டிக்கெட் விலை கூடுதலாக இருக்கும் என விரிவாகக் காணலாம் வாருங்கள்

தூரம்
விமான டிக்கெட்டின் அடிப்படை விட அது எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதைப் பொருத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. தூரத்தைப் பொருத்து இதன் விலை மாறுபடும். அதிக தூரம் செல்ல வேண்டும் என்றால் அதிக நேரம் பயணிக்க வேண்டும் இதற்கு அதிகமாக டிக்கெட் விலை இருக்கும்.

குறைந்த தூரத்திற்குக் குறைவான டிக்கெட் விலை இப்படியாகத் தூரம் விமான டிக்கெட்டின் ஒரு அடிப்படை விலையை நிர்ணயம் செய்கிறது. ஆனால் இது விமானத்தின் விலையேற்றம் மற்றும் இறக்கத்தைப் பாதிக்காது. இது அடிப்படையை விலை மட்டுமே நிர்ணயம் செய்கிறது.

சீசன்
விமான பயணம் என்பது பெரும்பாலும் முக்கியமான பயணங்களில் போது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து அம்சம். இந்த விமானத்தின் டிக்கெட் எந்த காலகட்டத்தில் இந்த விமானம் பயணிக்கிறது என்பதைப் பொருத்து விலை மாறுபடுகிறது.

உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னையிலிருந்து கோவா செல்லும் விமானங்கள் விடுமுறைக் காலங்களான ஏப்ரல் - மே, மற்றும் புத்தாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை, நீண்ட வார விடுமுறை காலங்களில் மற்ற நேரத்தை ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும். திருப்பதி செல்லும் விமானத்தின் டிக்கெட் புரட்டாசி மாதம் அதிகமாக இருக்கும் இப்படியாக சீசனை பொருத்தும் டிக்கெட் விலை மாறுபடும்.

பயண நேரம்
விமானம் எந்த நேரத்தில் கிளம்புகிறது. எந்த நேரத்தில் தரையிறங்குகிறது என்பதைப் பொருத்தும் அதை விலையில் மாறுபாடு இருக்கும். ஆனால் இதுவும் அதற்கான தேவை இருந்தால் மட்டுமே மாறுபாடு இருக்கும். உதாரணமாகக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குச் செல்லும் வகையில் சரியான நேரத்தில் ஒரு விமானம் அந்த ஊருக்குச் சென்றால் அந்த விமானத்திற்கு டிமாண்ட் அதிகமாகும் அதனாலும் விலை அதிகமாகும்.

பயண முறை
விமான பயண செலவுகளைப் பயண முறைகளும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெரும்பாலும் நெடுந்தூர பயணங்களில் நடக்கும் விஷயம், விளக்கமாகச் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாகச் செல்லும் விமானங்களில் செல்லாமல் வேறு வேறு விமானங்களில் மாறி மாறி சென்றால் விமான பயண செலவு குறையும்.

உதாரணமாக டில்லியிலிருந்து நியூயார்க் செல்லவேண்டும் என்றால் நேரடி விமானம் இருக்கிறது. இது எங்கும் இடை நிற்காமல் பயணிக்கும். ஆனால் இந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் விலை அதிகம். அதுவே இடை நிற்றல் மற்றும் விமானம் மாறி செல்லும் வகையிலான சேவைகளைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் இந்த நேரடி விமானத்தை விட விலை குறைவாக இருக்கும். ஆனால் பயண நேரம் மற்றும் விமான மாற்றத்திற்காகக் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கும்.

போட்டி
விமான டிக்கெட்டின் விலை போட்டியைப் பொருத்தும் மாறுபடும். குறிப்பாகக் குறிப்பிட்ட நாளில் நீங்கள் கிளம்பும் விமான நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய விமான நிலையத்திற்கு ஒரே ஒரு விமானம் தான் இருக்கிறது என்றால் போட்டிக்கு விமானங்கள் இல்லை என்பதால் வழக்கத்தை விட டிக்கெட் விட அதிகமாக இருக்கலாம்.

சில நேரங்களில் போட்டி விமானங்கள் இருப்பது விமானங்களில் டிக்கெட் விலையைக் குறைக்கவும் செய்யும். இது மட்டுமல்ல சில விமானங்கள் கனெக்டிங் விமானத்தைப் பிடிக்கச் சரியான நேரத்தில் செல்லும் விமானமாக இருந்தால் அதன் காரணமாகக் கூட டிக்கெட் விலை அதிகமாக இருக்கும்.

விமான நிலையம்
விமான டிக்கெட்டின் விலை எந்த விமான நிலையத்திற்கு அந்த விமானம் செல்கிறது என்பதைப் பொருத்து அதன் டிக்கெட் விலை மாறுபடலாம். உதாரணமாக மிக குறைவான விமானங்களைக் கையாளும் விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு அதிகமான டிக்கெட் விலையும் அடிக்கடி பல்வேறு விமானங்களைக் கையாளும் விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானத்தின் டிக்கெட் விலை குறைவாக இருக்கும்
-
யாரோ அடிச்சு விட்றத நம்பாதீங்க... விமானம் கிளம்பும் முன் ஏன் புகை வருகிறது தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!
-
தங்கம் அண்ணாவோட ஹெல்மெட் பத்திரமா இருக்கு! ஆனந்த கண்ணீரில் TTF ரசிகர்கள்! உண்மையில் என்ன நடந்துச்சு தெரியுமா?
-
நாளை மறுநாள் டிவிஎஸ் இந்த பைக்கைதான் அறிமுகம் செய்யபோகுது... இணையத்தில் கசிந்த டூ-வீலரின் படம்!