டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் பிரபலமான டெஸ்லா, விற்பனை செய்யப்பட்ட அதன் கார்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ளவுள்ளது. எதற்காக டெஸ்லா கார்கள் மீண்டும் திரும்ப அழைக்கப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் டெஸ்லா பிராண்டை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். இந்தியாவில் கார்களை அறிமுகப்படுத்த கடந்த பல மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டுவந்த டெஸ்லா நமது அண்டை நாடான சீனாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

இவ்வாறு பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் கோலோச்சி வந்தாலும், ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே டெஸ்லாவை ஏகப்பட்ட பிரச்சனைகள் சுற்றி வந்துள்ளன. இந்த வகையில் சமீப காலமாக சிறுசிறு பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்பட்ட டெஸ்லா கார்கள் பழுது பார்ப்பிற்காக திரும்ப அழைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

அவற்றின் தொடர்ச்சியாக, தற்போது விற்பனை செய்யப்பட்ட தனது சுமார் 11 லட்ச வாகனங்களை திரும்ப அழைக்க டெஸ்லா முடிவெத்துள்ளது. இந்த 11 லட்ச டெஸ்லா வாகனங்களில் 2017ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 கார்களும், 2020-2021இல் தயாரிக்கப்பட்ட மாடல் ஒய் கார்களும், 2021-2022இல் தயாரிக்கப்பட்ட மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களும் அடங்குகின்றன.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

திரும்ப அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் கார்களில் இரு சரிப்பார்ப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒன்று, கார்களின் ஜன்னல் ரிவர்ஸல் சிஸ்டத்தில் பழுது ஏற்படுகிறதா என்பதும், மற்றொன்று, ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை கண்டறியும் விதத்தில் ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளதும் ஆகும்.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

இதில் விண்டோ ரிவர்ஸல் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சனையினால் ஜன்னல் கண்ணாடிகள் ஆட்டோமேட்டிக்காக மேலேறும் போது ஏதேனும் இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதில் சரியாக செயல்படுவதில்லையாம். இத்தகைய பழுதினால் சிறிய பிரச்சனைகளில் இருந்து மிகவும் மோசமான பெரிய அளவிலான பிரச்சனைகள் வரையில் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக டெஸ்லா கருதுகிறது.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

ஆட்டோமேட்டிக் விண்டோ ரோல் அப் வசதி ஆனது தற்போதைய மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்படும் ஒன்றாக மாறி வருகிறது. இந்த வசதியினால் பயணிகள் அவ்வப்போது ஜன்னல் கண்ணாடிகளை கீழிறக்கி, மேலேற்ற வேண்டிய தேவை இருக்காது. ஜன்னல் கண்ணாடியை மேலேற்றும் போது இடையில் பயணிகளின் கை, விரல்கள் அல்லது வேறு ஏதேனும் பொருள் வந்தால் அதற்கேற்ப செயல்படும் வகையில் இந்த வசதி ஆனது வடிவமைக்கப்படுகிறது.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

ஆனால் இந்த தொழிற்நுட்ப வசதி மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தனது எலக்ட்ரிக் கார்களில் முறையாக செயல்படுவதில்லை என்பதை டெஸ்லா சில பல சோதனைகளின் மூலம் கண்டறிந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்யவே இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கை ஆகும். இந்த பிரச்சனையை சாஃப்ட்வேர் அப்டேட்டின் மூலம் தீர்க்க முடியும் என டெஸ்லா நம்புகிறது.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த மாதங்களில் இதேபோன்று சில திரும்ப அழைப்பு நடவடிக்கைகளை டெஸ்லா மேற்கொண்டு இருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் ஏற்படும் பிரச்சனைகளாகவே இருந்தன. ஆனால் தற்போது சாஃப்ட்வேர் அப்டேட்டாக இல்லாதததை அறிந்து விற்பனை செய்யப்பட்ட தனது கார்களை டெஸ்லா திரும்ப அழைக்கிறது.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

இதுகுறித்த டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் கருத்து தெரிவிக்கையில், எங்களது பெரும்பாலான திரும்ப அழைப்புகள் திரும்ப அழைப்புகளே கிடையாது. இது சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்டே ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த பிரச்சனையினால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றார்.

டெஸ்லா கார்களுக்கு என்ன தான் ஆச்சு... ஒன்னு பின்னாடி ஒன்னா பிரச்சனை வருதே!! சுமார் 11 லட்ச கார்களில் பிரச்சனை

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நமது அரசாங்கம் டெஸ்லாவை இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட கூறியது எலான் மஸ்க்கிற்கு ஏற்றதாக விளங்கவில்லை. ஆனால், கனடாவில் புதிய மெகா தொழிற்சாலையை நிறுவ டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Fault in window reversal system tesla recalls over 1 1 million evs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X