எமன் நேருக்கு நேரா வந்தாலும் உயிரை எடுக்க முடியாது... கார்களில் இனிமேல் இப்படி ஒரு வசதியை குடுக்க போறாங்களா!

உலகம் முழுவதும் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான கார் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இந்த விபத்துக்களில் பலர் உயிரிழக்கின்றனர். எனினும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விபத்துக்களில் சிக்கிய பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது என்பது நிம்மதி கொள்ள வேண்டிய விஷயம்.

கார்களில் வழங்கப்படும் ஏர்பேக்குகள் (Airbags) போன்ற பாதுகாப்பு வசதிகளை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். ஏர்பேக் தொழில்நுட்பம் பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டாலும், தொடர்ச்சியாக அதில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு கொண்டே வருகிறது. இந்த வரிசையில் ஏர்பேக் தொழில்நுட்பத்தில் தற்போது குறிப்பிடத்தகுந்த மற்றொரு வளர்ச்சி ஏற்பட தொடங்கியுள்ளது.

எமன் நேருக்கு நேரா வந்தாலும் உயிரை எடுக்க முடியாது... கார்களில் இனிமேல் இப்படி ஒரு வசதியை குடுக்க போறாங்களா!

பயணிகளின் பாதுகாப்பிற்காக கார்களின் பல்வேறு இடங்களில் ஏர்பேக்குகள் இருந்தாலும் கூட, மேற்கூரையில் ஏர்பேக்குகள் இருக்காது. ஆனால் கார்களின் மேற்கூரையில் பொருத்தக்கூடிய வகையிலான ஏர்பேக்குகளை (Roof-mounted Airbags) உருவாக்கும் பணிகளில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஃபோர்டு (Ford) நிறுவமும் ஒன்று. வாகனங்களின் மேற்கூரையில் பொருத்தக்கூடிய ஏர்பேக் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை (Patent) கேட்டு ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெயருக்கு ஏற்றபடியே, விபத்தில் சிக்கும் பட்சத்தில், வாகனங்களின் மேற்கூரையில் இருந்து இந்த ஏர்பேக்குகள் விரிவடையும். எனவே பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

ஃபோர்டு நிறுவனம் தனது மேற்கூரையில் பொருத்தக்கூடிய வகையிலான ஏர்பேக்குகளுக்கு காப்புரிமை கேட்டு, அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் ட்ரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஃபோர்டு நிறுவனம் வாகனத்தில் உள்ள ஒவ்வொரு இருக்கைக்கும் மேலே ஏர்பேக்குகளை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. மேற்கூரையில் வட்ட வடிவிலான அறைகளில், இந்த ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டு வரும் வழக்கமான ஏர்பேக்குகளில் இருந்து இந்த ஏர்பேக்குகள் சற்று வித்தியாசமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

எமன் நேருக்கு நேரா வந்தாலும் உயிரை எடுக்க முடியாது... கார்களில் இனிமேல் இப்படி ஒரு வசதியை குடுக்க போறாங்களா!

அத்துடன் ஃபோர்டு நிறுவனத்தின் இந்த புதிய மேற்கூரையில் பொருத்தப்படும் ஏர்பேக்குகள், அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஏற்றதாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது செடான் ரக கார்கள், கூபே ரக கார்கள், எஸ்யூவி ரக கார்கள், மினி வேன்கள் மற்றும் பிக் அப் டிரக்குகள் என பலதரப்பட்ட வாகனங்களிலும் பயன்படுத்த கூடிய வகையில், இந்த ஏர்பேக்குகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் லாரிகள் போன்ற மற்ற வாகனங்களிலும் இந்த புதிய வகை ஏர்பேக் தொழில்நுட்பத்தை உபயோகிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த புதிய வகை ஏர்பேக்குகளின் டிசைன் விஷயத்தை கவனத்தில் கொண்டு பார்த்தால், அதிக ஹெட்ரூம் (Headroom) உடைய வாகனங்களுக்கு மட்டுமே மிகவும் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களின் மேற்கூரைக்கும், அதில் பயணம் செய்யும் பயணிகளின் தலைக்கும் இடையே உள்ள இடைவெளிதான் ஹெட்ரூம் என கூறப்படுகிறது.

இதன்படி பார்த்தால் பயணிகளின் தலையில் இருந்து மேற்கூரை சற்று உயரமாக இருக்க கூடிய வாகனங்களுக்கு மட்டுமே இது மிகவும் உகந்ததாக இருக்கலாம். ஆனால் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வாகனங்கள் மட்டுமல்லாது, அட்டானமஸ் வாகனங்கள் (Autonomous Vehicles) எனப்படும் தானியங்கி வாகனங்களுக்கும் இது ஏற்றதாக இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது அட்டானமஸ் வாகனங்கள் மிகவும் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அட்டானமஸ் வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. ஃபோர்டு நிறுவனமும் தானியங்கி வாகனங்களை அதிகளவில் அறிமுகம் செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் தானியங்கி வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே தானியங்கி கார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மேற்கூரையில் பொருத்தக்கூடிய வகையிலான ஏர்பேக்குகளுக்கு காப்புரிமை கேட்டு ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்திருக்கலாம் எனவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒரு நிறுவனம் காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்து விட்டால், அந்த தயாரிப்பை சந்தைக்கு கொண்டு வந்து விடும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒருவேளை தங்களது திட்டத்தை கிடப்பிலும் போடலாம். அல்லது சற்று தாமதமாகவும் கூட அறிமுகம் செய்யலாம். எனவே ஃபோர்டு நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பத்தை நாம் எப்போது கார்களில் பார்க்க முடியும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford files roof mounted airbag patent for autonomous car report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X