இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

அம்பாசடர் (Ambassador) கார் 2.0 வெர்ஷனில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் அது இந்திய சாலையை வந்தடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

இந்தியர்களின் பிரியமான கார் என அம்பாசடர் (Ambassador)-ஐ கூறலாம். கடந்த காலத்தில் இந்திய சாலைகளை அதிகளவில் ஆட்சி செய்த கார்களில் இதும் ஒன்று. குறிப்பாக இந்த காருக்கு அரசியல்வாதிகளின் மிகவும் பிரியமான காராக இருந்தது. அதிக உறுதியான வாகனம் இது என்பதால் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் தொடங்கி அரசியல் பிரமுகர்கள் பலரின் முதன்மையான வாகனமாக இது பார்க்கப்பட்டது.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

இத்தகைய ஓர் சிறப்பு மிக்க காரே மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வீல்ஸ் ஆஃப் இந்தியா (Wheels of India) என அழைக்கப்பட்ட அக்கார் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிக்க இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

புதிய அவதாரம் மற்றும் புதிய சிறப்பு வசதிகளுடன் இக்கார் இந்திய சந்தையை வந்தடைய இருக்கின்றது. தற்போது இக்காரை உருவாக்கும் பணியில் ஹிந்த் மோட்டார் பைனான்சியல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Hind Motor Financial Corporation of India)வும், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் (Peugeot) ஆகிய இரு நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

ஆம், இவ்விரு நிறுவனங்கள்தான் கூட்டணியின் அடிப்படையில் புதிய அம்பாசடரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வைத்தே புதிய அம்பாசடர் காரின் உற்பத்தி பணிகளை ஹிந்துஸ்தான் மோட்டார் (Hindustan Motors) மேற்கொள்ள இருக்கின்றது. இந்நிறுவனம் ஹிந்த் மோட்டார் பைனான்சியல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் செயல்படும்.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

சிகே பிர்லா குழுமம் இணை நிறுவனமாக செயல்படும். புதிய அம்பாசடர் கார் புதிய மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் டிசைனை பெறும். இதற்கான பணிகள் மேம்பட்டை நிலையை எட்டியிருப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் போஸ் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை ஆலையில் முன்னதாக மிட்சுபிஷி நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. உத்தர்பாரா ஆலையிலேயே அம்பாசடர் கார்கள் தயாரிக்கப்பட்டன. இந்த ஆலையில் கடைசியாக 2014 செப்டம்பரிலேயே அம்பாசடர் கார் தயாரிக்கப்பட்டது.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

இதன் பின்னர் புதிய விதிகள் மற்றும் போட்டிகள் காரணத்தினால் நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. இந்தியாவின் பழைமையான கார் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார் பெரும் வீழ்ச்சியின் காரணத்தினால் வர்த்தக பணிகளை நிறுத்தியது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான சிகே பிர்லா குழுமம் அதன் கார் பிராண்டை ரூ. 80 கோடிக்கு பிரெஞ்சு கார் பிராண்டான பியூஜியோட்டிற்கு விற்பனைச் செய்த நிகழ்வு இன்னும் பல மடங்கு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பிராண்ட் கை மாற்றமானது 2017ம் ஆண்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

தற்போது பியூஜியோட் இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்னர் 1990-களின் நடுப்பகுதியில் நாட்டிற்குள் நுழைந்த முதல் வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனமும் இதுவே ஆகும். ஆகையால், இந்நிறுவனம் இந்தியாவிற்கு புதிது அல்ல என்பது கவனிக்கதகுந்தது.

இந்தியர்களே தயாரா?.. புதிய அவதாரத்தில் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகிறது அம்பாசிடர்...

Source: TOI

அம்பாசடர் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்:

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு. இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றாக சீரிஸ் III விளங்கியது. இந்த காரையே அம்பாசடர் என ரீ-பேட்ஜ் செய்து ஹிந்துஸ்தான் மோட்டார் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த காரில் 1,489 சிசி திறன் கொண்ட பி-சீரிஸ் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டது. ஹிந்துஸ்தான் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கி இரண்டாவது தயாரிப்பாக கொண்டு கார் மாடல் ஹிந்துஸ்தான் 14 அல்லது லேண்ட்மாஸ்டர் ஆகும். இந்த காரை ரீ-பிளேஸ் செய்யும் வகையில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே அம்பாசடர்.

இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்யங்களை இந்த கார் கொண்டிருக்கின்றது. அதுகுறித்த தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
French car maker peugeot is working on new avatar ambassador
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X