இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய Global NCAP!

குளோபல் என்சிஏபி (Global NCAP) அமெரிக்க சந்தைக்காக மெக்ஸிகோவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் அக்சென்ட் (Hyundai Accent) காரையும், மெக்ஸிகோ சந்தைக்காக இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10 sedan (Aura)) காரையும் நேருக்கு நேர் மோத வைத்து கிராஸ் டெஸ்ட் செய்தது. இந்த பரிசோதனையில் எந்த நாட்டின் தயாரிப்பு சிறப்பாக செயல்பட்டது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

பயணிகள் வாகனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆராயும் குளோபல் என்சிஏபி (Global NCAP) அண்மையில் இரு கார்களை நேருக்கு நேர் மோத விட்டு ஆய்வை மேற்கொண்டது. பொதுவாக, குளோபல் என்சிஏபி -ஆனது, காரின் பாதுகாப்பு மற்றும் தரம்குறித்து ஆராய, அந்த வாகனத்தை தடுப்பு ஒன்றின்மீதே மோத வைக்கும். இதன் வாயிலாகவே அவ்வாகனத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு திறன்குறித்து அது ஆராயும். இந்த மாதிரியான சூழலில் கார்-டூ-கார் நேருக்கு நேர் மோதல் ஆய்வை அது செய்திருக்கின்றது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

இதன் வாயிலாக, வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகள் எத்தகைய பாதுகாப்பான வாகனங்களாக உள்ளன என்பதையே அது கண்டறிந்திருக்கின்றது. குளோபல் என்சிஏபி பயன்படுத்திய இரு கார்களும் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். மேலும், இரண்டும் ஆரம்ப நிலை, அதாவது, மலிவு விலை வாகனங்களாகும்.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

இதில், ஒன்று மெக்ஸிகோ சந்தைக்காக இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் கிராண்ட் ஐ10 கார் மாடலாகும். மற்றொன்று, மெக்ஸிகோவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் அக்சென்ட் கார் மாடலாகும். இது அமெரிக்க சந்தைக்கானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டும் என்ட்ரீ லெவல் செடான்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

இவையிரண்டையும் மோத விட்டு பார்த்ததில் பல்வேறு முக்கிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. குறிப்பாக, வெவ்வேறு நாடுகளுக்கு இடையில் வெவ்வேறு விதமான பாதுகாப்பு விதிகள் அமலில் இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. வளர்ந்த நாடுகள் சில அவர்களின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து அமைப்பிற்கு ஏற்ப மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகளை வகுத்திருக்கின்றன. இதனால்தான் நாட்டுக்கு நாடு மாறுபட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகனங்கள் விற்கப்படுகின்றன.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

இதனை தெளிவுப்படுத்திக் காட்டும் வகையிலேயே குளோபல் என்சிஏபி-யின் இந்த கார்-டூ-கார் நேருக்கு நேர் மோதல் ஆய்வு அமைந்திருக்கின்றது. இந்த ஆய்வின் வாயிலாக மெக்ஸிகோவிற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹூண்டாய் கார் மிகக் குறைவான பாதுகாப்பு திறனைக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

காரின் முன்பக்கம் முழுவதுமாக உருகுலையும் வகையில் இந்த விபத்தில் பேரிழப்பை அது சந்தித்திருக்கின்றது. இந்த இழப்புகள் காருக்கு மட்டுமல்ல அதனுள் பயணிப்பவர்களுக்கும் ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, டிரைவருக்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் அது செயல்பட்டிருக்கின்றது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

இதுவே இந்த கார் லத்தீன் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கையை பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தளவிற்கு மிக மோசமான புள்ளிகளை கார்-டூ-கார் மோதல் ஆய்வில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெற்றிருக்கின்றது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

அதேவேலையில், அமெரிக்க சந்தைக்கான அக்சென்ட் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கின்றது. அது கணிசமான பாதுகாப்பை டிரைவர் மற்றும் பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது மோதல் ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. உறுதியான உடற்கூடு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களினாலயே இக்கார் இவ்வளவு சூப்பரான ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

குளோபல் என்சிஏபி உலகெங்கிலும் விற்பனையில் உள்ள வாகனங்களை தரமிக்கதாக (பாதுகாப்பானதாக) மாற்றும் வகையில் பன்முக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, அது 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், விபத்தைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் இன்டலிஜன்ட் ஸ்பீடு அசிஸ்டன்ஸ் ஆகிய அம்சங்களைக் கட்டாயமாக்க செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

வாகனங்களின் வாயிலாக ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கும் பொருட்டு இத்தகைய பணியில் அது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் பொருட்டே தற்போது கார்-டூ-கார் மோதல் ஆய்வை குளோபல் என்சிஏபி நிகழ்த்தியிருக்கின்றது.

இந்திய தயாரிப்பு vs மெக்ஸிகோ தயாரிப்பு... ரெண்டுல எது பெஸ்ட்... கார்-டூ-கார் மோதல் ஆய்வை நடத்திய குளோபல் என்சிஏபி!

அதாவது, இஎஸ்சி மற்றும் ஆறு ஏர் பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட அக்சென்ட் மற்றும் இரண்டே ஏர் பேக்குடன் குறைவான பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கிராண்ட் ஐ10 மாடலையும் அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Global ncap uses made in india aura and made in mexico verna car to car crash test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X