மாருதிக்கு யோகம் உச்சத்துல இருக்கு! ஒத்த காருக்கு ஈ போல மொய்க்கும் இந்தியர்கள்! மைலேஜை வாரிகொடுத்த விட்றுவோமா!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதுமுக கார் மாடல் ஒன்றிற்கு மிக அமோகமான வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரான கிராண்ட் விட்டாரா-வை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. டொயோட்டா உடனான கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதே இந்த எஸ்யூவி காராகும்.

இந்த காருக்கே இந்தியர்கள் மத்தியில் தற்போது மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி 87,953 புக்கிங்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, 55,505 ஆர்டர்கள் டெலிவரிக்காக பெண்டிங் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இரண்டும் மிகப் பெரிய அளவு எண்கள் ஆகும். இந்த எண்கள் கிராண்ட் விட்டாரா மிகப் பெரிய டிமாண்ட் இந்தியாவில் நிலவிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விட்டாரா

நிறுவனத்தின் இந்த கார் மாடலுக்கு மட்டுமில்லைங்க பிற கார் மாடல்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி சஷாங்க் ஸ்ரீவஸ்தவா இப்போதையே நிலவரப்படி 3.75 லட்சம் ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆகையால், ஒட்டுமொத்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் சிறப்பான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருப்பது மிக தெளிவாகத் தெரிகின்றது. இருப்பினும், நிறுவனத்தின் புது கார் மாடலான கிராண்ட் விட்டாராவிற்கு சற்று அமோகமான வரவேற்பே கிடைத்துக் கொண்டிருக்கின்றது என வெளியாகியிருக்கும் புதிய தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா கார் மாடலை ஒட்டுமொத்தமாக 11 வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா, ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஆகியவையே அந்த ட்ரிம்கள் ஆகும். இதுதவிர, மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இருவிதமான ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமானது சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய ட்ரிம்களிலும், ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமானது ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஆகிய ட்ரிம்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதனால்தான் பிற ட்ரிம்களைக் காட்டிலும் இந்த ட்ரிம்களின் விலை மட்டும் சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. ரூ. 17.99 லட்சம் மற்றும் ரூ. 19.49 லட்சம் இவற்றின் விலை ஆகும். இது இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரின் பிற ட்ரிம்கள் ரூ. 10.45 லட்சம் தொடங்கி ரூ. 16.89 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த ஆப்ஷன்கள் மட்டுமின்றி கூடுதலாக டூயல் டோன் நிற தேர்வும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ற இரு விதமான மோட்டார் தேர்விலும் கிராண்ட் விட்டாரா விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மைல்டு ஹைபிரிட் கிராண்ட விட்டாராவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், மோட்டார் அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரையும், 117 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் முன்பக்க இரு வீல் டிரைவ் சிஸ்டம் என இரு விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதன் மைலேஜ் திறன் ஒரு லிட்டருக்கு 21.1 கிமீ ஆகும். இதைவிட பல மடங்கு அதிக மைலேஜ் தரக் கூடியதாக ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாரா இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த அதிக மைலேஜ் திறனுக்கு இந்த வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் காரணமாக உள்ளது. இதற்காக தனியாக மின் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும்.

இந்த பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. காரின் இயக்கத்தின் வாயிலாக அதுவே தானாக சார்ஜ் செய்து கொள்ளும். இதன்படி முழுமையாக சார்ஜாகும்பட்சத்தில் 25 கிமீ வரை பெட்ரோல் செலவில்லாமல் அது பயணிக்கும். ஆகையால், கணிசமான அளவு எரிபொருளை சிக்கனம் செய்ய முடியும். இதேபோல், இதன் மின் மோட்டார் மட்டும் 79 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும். இதுபோன்ற எக்கசக்க அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Grand vitara gathered 87953 bookings
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X