சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் நாட்டை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்! இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பாக்கல!

பிரபல சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் இந்திய நுழைவு பணிகளை பின்பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

மிகவும் பிரமாண்டமான திட்டத்துடன் இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க திட்டமிட்ட நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors). இது சீனாவை தலைமையமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படுவதற்கு அதிரடியாக திட்டங்களை வகுத்திருந்தது. மேலும், சுமார் 1 பில்லியன் டாலர்களை முதலீட்டில் இந்திய நுழைவு மேற்கொள்ளவும் அது திட்டத்தை வகுத்து வைத்திருந்தது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

இந்த நுழைவை முன்னிட்டு இந்தியாவில் அலுவலகம் அமைத்தல், பணியாளர்களை நியமித்தல் என பல்வேறு பணிகளை அது மும்மரமாக மேற்கொண்டது. இந்த நிலையிலேயே இந்தியா-சீனா எல்லையில் சில திடுக்கிடும் நிகழ்வுகள் அரங்கேறின. இரு நாட்டின் எல்லையில் சீன வீரர்கள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த அத்துமீறலில் சில இந்திய வீரர்கள் கடுமையான காயங்களையும், சிலர் வீர மரணமும் அடைந்தனர்.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

சீன வீரர்களின் இந்த செயல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்திய அரசை, அனைத்து சீன தயாரிப்புகள் மற்றும் சீன நிறுவனங்களின் இந்திய நுழைவிற்கு முற்று புள்ளி வைக்கத் தூண்டியது. இதன் ஆரம்ப புள்ளியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விறுவிறுப்பாக செயல்பட்டு சீன செல்போன் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

இத்துடன், மேட்-இன்-சீன தயாரிப்புகளை தவிர்க்க மக்களைத் தூண்டியது. இதுமாதிரியான நடவடிக்கையால் இந்திய மக்கள் அனைவரும் சீனாவிற்கு எதிராக திரும்பத் தொடங்கினர். இந்த நிலையிலேயே அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசாங்கம் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய நுழைதலுக்கு தடை விதித்தது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

மிக தெளிவாக கூற வேண்டுமானால் கிரேட் வால் மோட்டார்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட அனைத்து அனுமதிகளுக்கான விண்ணப்பங்களையும் மஹாராஷ்டிரா ஒதுக்கி வைத்தது. மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கிரேட் வால் மோட்டார்ஸுக்கு பேரிடியாக அமைந்தது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

அதேநேரத்தில், இந்த நடவடிக்கையைக் கண்டு சற்றும் மன தளராமல் அந்நிறுவனம் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் நுழைவிற்கான கோரிக்கையை முன் வைத்த வண்ணமே இருந்தது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது மஹாராஷ்டிராவில் அரசாங்கமும் மாறிவிட்டது. அதிருப்பதி சட்டமன்ற உறுப்பினர்களால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கலைந்து, தற்போது ஆட்சி தலைமை மாறியிருக்கின்றது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

இந்த மாதிரியான சூழலிலேயே கிரேட் வால் மோட்டார்ஸின் ஜிஎம் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்துவதும் முயற்சியும் தோல்வியைத் தழுவியது. ஜிஎம் தலேகான் ஆலையைக் கையகப்படுத்தும் விண்ணப்பத்தின் காலக்கெடு 2022 ஜூன் 30 உடன் காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவை விட்டு முழுமையாக வெளியேறும் முடிவை அது எடுத்துள்ளது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

இரண்டரை ஆண்டுகள் தொடர் முயற்சியை மேற்கொண்டு வந்தநிலையில் தற்போது இந்த முடிவை கிரேட் வால் மோட்டார்ஸ் எடுத்துள்ளது. இதனால், நிறுவனத்தின் 1 பில்லியன் முதலீடு வேறு நாட்டிற்கு கை மாறும் சூழல் உருவாகியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் முடிவை நிறுவனத்தின் மூத்த சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

அவர்கள், அதிகாரப்பூர்வமாக இந்திய ஊழியர்களுக்கு தகவலைத் தெரிவிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. மார்க்கெட்டிங், நெட்வொர்க், திட்டமிடுதல், ஃபைனான்ஸ், தயாரிப்பு, எச்ஆர் மற்றும் ஆர்&டி உள்ளிட்ட பிரிவுகளுக்கு கிரேட் வால் மோட்டார்ஸ் ஊழியர்களை பணியமர்த்தியிருந்தது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

அவர்களை தற்போது நிறுவனம் பணியில் இருந்து விடுவித்துக் கொண்டிருக்கின்றது. பணி விடுதலையைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு உண்டான சம்பளம் மற்றும் பிற சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க இருப்பதாக நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

தற்போது இந்தியாவை விட்டு வெளியேறும் திட்டத்தில் களமிறங்கியிருந்தாலும், எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவில் நுழைவதற்கான பணிகளை தங்கள் நிறுவனம் மேற்கொள்ளும் என கிரேட் வால் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் நுழைய விருப்பப்பட்டு தோல்வியைக் காணும் முதல் நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிங்கிள் யூனிட்டைகூட விற்காமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சீன கார் நிறுவனம்... இப்படி ஒரு அடிய யாருமே எதிர்பார்க்கல!

ஏற்கனவே சங்கன், ஹைமா, மற்றும் செர்ரி ஆகிய நிறுவனங்களும் இதுபோன்று இந்தியாவில் நுழையும் பணியில் களமிறங்கி அவை தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. இந்த சீன நிறுவனங்களின் வரிசையிலேயே தற்போது கிரேட் வால் மோட்டார்சும் ஒன்றாக இணைந்துள்ளது. இந்நிறுவனம் உலகளவில் எஸ்யூவி கார் உற்பத்தியில் தலை சிறந்த நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு பல மடங்கு டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

Source: economictimes

Most Read Articles
English summary
Great wall motors drops india entry plan here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X