3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

இந்தியாவில் 3 வரிசை இருக்கைகள் அமைப்புடன் அதிக வசதியை வழங்கும் டாப் 7 கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

குடும்பத்தோடு பயணம் செய்வதற்கு ஏதுவாக அதிக வசதிகளுடன், மூன்று வரிசை இருக்கைகள் அமைப்புக் கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக காரை வாங்கலாம்னு பல கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்திட்டோம். ஆனா, மூனாவது வரிசை இருக்கை அவ்வளவு கம்ஃபோர்டாவே இல்ல. நம்ம இந்திய சந்தையில் அதிக இடம் மற்றும் வசதியான அமைப்புடன் ஏதாச்சும் மூன்று வரிசைகள் அமைப்புக் கொண்ட எஸ்யூவி கார்கள் இருந்த அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என பலர் கேட்டு வருகின்றனர்.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவில், நாட்டில் மிக சிறப்பான வசதிகளுடன், மூன்று வரிசை இருக்கைகள் அமைப்புடன் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta)

இந்தியாவில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இன்னோவா க்ரிஸ்டா இருக்கின்றது. இந்த கார் 2005ம் ஆண்டில் இருந்தே நாட்டில் விற்பனையில் உள்ளது. 7 பேர் வரை இக்காரில் தாரளமான இட வசதியுடன் அமர்ந்து பயணிக்க முடியும். இதற்கேற்ப மூன்று வரிசைகள் இருக்கை அமைப்பு இன்னோவாவில் வழங்கப்பட்டுள்ளது. கடைசி (மூன்றாவது) வரிசை இருக்கைகள் கூட அதிக இட வசதியைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

ஆகையால், பெரியவர்களாலும் அசௌகரியமான அனுபவம் இன்றி இக்காரில் பயணிக்க முடியும். இக்கார் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. விரைவில் இக்காரை உலக சந்தையில் மின்சார வெர்ஷனிலும் டொயோட்டா விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ரூ. 17.45 லட்சம் தொடங்கி ரூ. 25.68 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)

மாருதி சுஸுகி அதிக இருக்கைகள் வசதியுடன் நாட்டில் விற்பனைக்கு வழங்கும் கார் மாடல்களில் எர்டிகாவும் ஒன்று. இன்னோவா க்ரிஸ்டா அளவிற்கு இல்லையென்றாலும் இக்காரின் கடைசி மூன்றாவது வரிசை இருக்கை சற்றே தாராளமான இட வசதியைக் கொண்டிருக்கின்றது. நடுத்தரமான உடல் தோற்றம் கொண்டவர்கள் அல்லது மெல்லிய தேகம் உள்ளவர்களுக்கு கடைசி இருக்கை ஏதுவானதாக இருக்கின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

நிறுவனம் மிக சமீபத்திலேயே இக்காரின் அப்டேட் வெர்ஷனை அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக இக்காருக்கு காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

மாருதி சுஸுகி எர்டிகா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 8.35 லட்சம் ஆகும். உச்சபட்ச தேர்வு ரூ. 12.79 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo)

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் இதுவும் ஒன்று. பிரமாண்ட தோற்றம் கொண்ட இக்காருக்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த காரில் 8 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். அதிக இருக்கைகளைக் கொண்டிருப்பதால் இது பெரிய குடும்பங்கள் மத்தியில் ஃபேமஸான காராக இருக்கின்றது. இதன் தோற்றம் சுறா மீனைப் போன்றிருப்பது அதற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் இருக்கின்றது. மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 13.17 லட்சம் ஆகும்.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

டாடா சஃபாரி (Tata Safari)

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக கவர்ச்சியான கார் மாடல்களில் சஃபாரியும் ஒன்று. இந்த எஸ்யூவி கார் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆறு இருக்கைகள் தேர்வு மிக தாரளமான இட வசதிக் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், ஆறு பேர் அடங்கிய குடும்பத்திற்கு மிக சிறந்த காராக டாடா சஃபாரி காட்சியளிக்கின்றது. சஃபாரி எஸ்யூவி சென்னையில் ரூ. 15.24 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)

இந்திய அரசியல்வாதிகள் பலரின் விருப்பமான கார் மாடலாக ஸ்கார்பியோ இருக்கின்றது. நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனையைப் பெறும் காராகவும் ஸ்கார்பியோ காட்சியளிக்கின்றது. அதிக இட வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ற காராக இது காட்சியளிக்கின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

இதை இன்னும் பல மடங்கு சிறந்த வாகனமாக வழங்கும் பொருட்டு மஹிந்திரா ஸ்கார்பியோவின் அப்டேட் வெர்ஷனை வெகு விரைவில் நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது இந்த கார் ரூ. 13.30 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)

மஹிந்திரா ஸ்கார்பியோ தற்போது அவுட்டேட் காராக மாறியிருப்பதால் பல அரசியல்வாதிகள் தங்களின் சொகுசான பயணங்களுக்கு ஃபார்ச்சூனர் காரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்காரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

அதிக இட வசதிக்கு ஏற்ப இக்கார் மிகவும் பிரமாண்டமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இக்கார் அதிகபட்சமாக பெட்ரோலில் இரு விதமான தேர்வுகளிலும், டீசலில் ஐந்து விதமான தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 31.79 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூ. 48.43 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது.

3வது வரிசை இருக்கைகளிலும் அதிக வசதியை எதிர்பார்ப்பவரா நீங்க?.. இந்த 7 கார்கள்ல அது ரொம்ப தாராளமாகவே இருக்கு!

எம்ஜி குளோஸ்டர் (MG Gloster)

மிக பெரிய குடும்பங்களுக்கும், அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்புவோர்களுக்கும் ஏற்ற எஸ்யூவி காராக எம்ஜி குளோஸ்டர் இருக்கின்றது. இதில் அதிக பாதுகாப்பு வசதிக்காக தானியங்கி பிரேக்கிங் போன்ற சூப்பரான நவீன அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சத்துடன் சந்தைக்கு வந்த முதல் எஸ்யூவி கார் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. குடும்பத்துடன் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் இந்த காரை பரிசீலிக்கலாம். இது ஆறு மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ரூ. 31.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Here is a list of cars that have comfortable 3rd row seats
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X