Just In
- 30 min ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 2 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
- 3 hrs ago
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?
- 4 hrs ago
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியீடு... இவ்ளோ சிறப்பு வசதிகள் இருக்கா!..
Don't Miss!
- Sports
டவுசர் போடாதே என கூறியவர்களுக்கு பதிலடி.. குத்துச்சண்டை உலக சாம்பியனான இந்திய பெண்.. சாதனை பயணம்
- Finance
ரஷ்யாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. களத்தில் இறங்கிய புடின் அரசு!
- News
"சொல்றது ஒண்ணு.. செய்றது ஒண்ணா? அவங்களோட கண்ணீர் திமுக ஆட்சியையே அழிச்சிரும்" - ஓபிஎஸ் எச்சரிக்கை!
- Movies
தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது… சகலகலா வில்லி ‘கோவை சரளா‘ .. மிரட்டல் லுக் !
- Lifestyle
இந்த ஈஸியான விசித்திர வழிகள் நீங்க நினைப்பதை விட எடையை வேகமாக குறைக்குமாம்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
- Technology
முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை உயர்வானதோ, குறைவானதோ அனைத்து கார்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கருவிகள்... பட்டியல்ல 10 இருக்குங்க!
அனைத்து விதமான கார்களிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய கருவிகள் 10 பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

இருசக்கர வாகனத்தில் பயணிப்பது மிகவும் ஜாலியானதாக இருந்தாலும், மிகவும் சொகுசான பயண அனுபவத்தை நம்மால் கார்களில் மட்டுமே பெற முடியும். இதனால்தான் பெரும்பாலான மக்கள் காரில் பயணிக்க விரும்புகின்றனர். வசதி மட்டுமின்றி பல நிலைகளில் சிறப்பானதாகவும் கார் பயணங்கள் காட்சியளிக்கின்றன.

குறிப்பாக, மிகவும் அமைதியான பயண உணர்வு, முதுகு, கழுத்து, கை மற்றும் கால் என அனைத்திற்கும் ஓய்வளிக்கும் அமைப்பு என பல வகைகளில் கார்கள் மிக சிறந்ததாக காட்சியளிக்கின்றன. இத்தகைய கார்களில் இருக்க வேண்டிய பத்து அத்தியாவசிய கருவிகள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

டயர் இன்ஃப்ளேட்டர் (Tyre Inflator)
இந்த கருவி காரின் டயரில் காற்றை நிரப்ப உதவும். கார் டயரில் போதுமான அளவு காற்று எப்போதும் இருப்பது கட்டாயம். இது இல்லை எனில் மைலேஜ் அடி வாங்குதல், இழுவை திறன் குறைதல் மற்றும் கட்டுப்பாடு குறைவு உள்ளிட்ட சிக்கல் ஏற்படும். ஆகையால், நம்முடைய பயணம் நெடியதோ அல்லது சிறியதோ எப்போதும் காரின் அனைத்து டயர்களிலும் போதுமான காற்று இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது போதுமானதாக இல்லை என்றால் இந்த இன்ஃப்ளேட்டர்கள் தேவையான காற்ற நிரப்ப உதவும். குறிப்பாக, காற்று அடிக்கும் நிலையங்கள் இல்லாத நேரம் அல்லது ரிமோட் கிராமங்களில் நாம் மாட்டிக் கொள்ளும் நேரங்களில் இது பன் மடங்கு உதவும்.

டயர் பஞ்சர் சரிசெய்யும் கிட் (Tyre Puncture Repair Kit)
டயர்கள் எப்போது, எந்த நேரத்தில் பஞ்சர் ஆகும் என்பது யாரும் அறியாத ஒன்று. ஒரு வேலை நெடுஞ்சாலைகளில் நாம் சென்றுக் கொண்டிருக்கும் டயர் பஞ்சராக நேர்ந்தால், அங்கு உதவி கிடைப்பது மிகவும் அரியது. குறிப்பாக, கிராமப்புறங்களில் டயர் பஞ்சரை நீக்க வேண்டுமானால் பல கிமீ கடந்து சென்று மெக்கானிக்கை அழைத்து வர வேண்டியிருக்கும்.

இதுமாதிரியான அவல நிலையை போக்க நாமே பஞ்சர் கிட் ஒன்றை வைத்திருக்க வேண்டும். இது மிக சுலபமாக ஆன்லைன் மற்றும் மெக்கானிக்குகளிடத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதனைக் கொண்டு ட்யூப் அல்லா டயர்களை பஞ்சர் ரிப்பேர் செய்வது மிக சுலபம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஜம்ப் ஸ்டார்டர் கிட் (Jumpstarter Kit)
பேட்டரியில் மின்சார திறன் முழுமையாக தீர்ந்துவிடுமானால் காரை ஸ்டார்ட் செய்வது மிக மிக கடினமானதாக மாறிவிடும். இந்த மாதிரியான சூழ்நிலையைக் கையாள ஜம்ப் ஸ்டார்டர் கிட் பெரும் உதவியாக இருக்கும். இது பவர் பேங்க் போன்று செயல்பட்டு காரை ஸ்டார்ட் செய்யும். இது அனைத்து கார் உரிமையாளர்களும் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.

குப்பை தொட்டி (Dust Bin/Trash Bin)
வீடு, நகர்ப்புற சாலைகளில் குப்பை தொட்டி இருப்பதைப் போலவே அனைத்து கார்களிலும் குப்பை தொட்டி இருப்பது அவசியம். நம்மில் பலர் கார்களில் பயணிக்கும் சிற்றுண்டி அல்லது பிற உணவு பொருட்களை உண்ணும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதன் கவர்களை எங்கு போடுவது என தெரியாமல் காரில் அப்படியே போட்டுவிடுகின்றனர். இது நாளடைவில் காருக்குள் சிறிய பூச்சு வகைகளை உருவாக்க நேரிடுகின்றது. இந்த மாதிரியான நிலையைக் களைய காருக்குள் சிறிய குப்பை தொட்டி வைத்திருப்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.

வேக்யூம் க்ளீனர் (Vaccum Cleaner)
கார்களுக்கான வேக்யூம் க்ளீனர் பல வித ஸ்டைல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டயர் மற்றும் மிக மிக சிறிய துளைகளைக் கூட க்ளீன் செய்யும் வகையில் அவை விற்பனக்குக் கிடைக்கின்றன. இவை காரை சுத்தமானதாகவும், தேவையில்லா கிரிமிகளின் உருவாக்கத்தையும் குறைக்க உதவும். இதுமட்டுமின்றி உட்பகுதியை புதிது போல் வைத்திருக்கவும் இது உதவும்.

செல்போன் ஹோல்டர் (Mobile Phone Holder)
தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் பெரும்பாலான கார்களில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த இணைப்பு வசதி எல்லா கார்களிலும் கிடைத்துவிடுவதில்லை. ஆகையால், இந்த வசதி இல்லாத கார்களைக் கொண்டிருப்போர் தற்போதும் அவர்களின் செல்போன் வாயிலாகவே கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றனர். இத்தகையோருக்கு செல்போன் ஹோல்டர் அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

காந்தகம் வசதிக் கொண்ட அவசர கால எல்இடி மின் விளக்கு (Small LED Torch with Magnetic Attachment)
கார்களில் எப்போது பழுது ஏற்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. வெளிச்சமில்லா நேரத்தில் கார் பழுதடையுமானால் அதனை சரி செய்வது சற்றே சிரமமானது. இந்த மாதிரியான நேரத்தில் உற்ற தோழனாக எமர்ஜென்சி எல்இடி மின் விளக்குகள் செயல்படும். இது காந்தகம் கொண்டதாக இருந்தால், தனியாக ஓர் நபர் அதைக் கையில் தாங்கியிருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. மேலும், வேலையையும் சுலபமாக முடித்துவிடலாம்.

மைக்ரோ ஃபைபர் துணி (Microfiber Cloth)
இந்த துணிகள் காரை சுத்தம் செய்ய மட்டுமல்ல கீரல்கள் ஏற்படாமலும் தவிர்க்கும். எனவேதான் எந்த வாகனமாக இருந்தாலும் அதனை சுத்தம் செய்ய எப்போதும் ஓர் மைக்ரோ ஃபைபர் துணியையே பயன்படுத்த வேண்டும் என வாகன துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

டூல்ஸ் கிட் (Tools Kit)
குறைந்த பட்ச அளவாவது டூல்ஸ்களை கார் உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டும். "நம்மால் இந்த பழுதை நீக்க முடியும், ஆனால், அதற்கான டூல்ஸ் மட்டும் இல்லை" என கூறுவோர் பலர் இங்கு இருக்கின்றனர். இந்த ஒற்றை காரணத்திற்காக மெக்கானிக்கிடம் சென்று 100-200 என பணத்தை விரையமாக்காமல், அதே தொகை உடன் இன்னும் சில தொகையைச் சேர்த்து நமக்கான டூல்ஸை நாமே வாங்கி செல்வது மிக சிறந்தது.

முதலுதவி பெட்டி (First Aid Kit)
கார்களில் இருக்க வேண்டிய மிக அத்தியாவசியமான பொருட்களில் இதுவும் ஒன்று. சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் முக்கியமான டூல்ஸ்களுடன் சேர்த்து முதலுதவி பெட்டியையும் வழங்குகின்றன. இவை அவசர காலங்களில் பெரும் உதவியாக இருக்கும். மருத்துவமனை செல்லும் முன் நம்மை நாமே முன் கூட்டியே பாதுகாத்துக் கொள்ளவும் இது உதவும்.
-
கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
-
கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!
-
இந்தியாவில் பெட்ரோல் விலை "ரொம்ப சீப்" தான்... மற்ற நாடுகளில் எவ்வளவு விலைன்னு இங்க பாருங்க...