சொகுசு கார்களை மிஞ்சும் உட்பக்கம்... வேற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா!

தென்கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கியா (Kia) நிறுவனம் அதன் புகழ்பெற்ற செல்டோஸ் (Seltos) காரின் அப்டேட் வெர்ஷனை வெகு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் கார் குறித்த பிற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

கியா (Kia) நிறுவனம் அதன் பிரபல எஸ்யூவி கார் செல்டோஸ் (Seltos)-ஐ அப்டேட் செய்துள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட காரையே தற்போது முதல் முறையாக அந்நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. வெகு விரைவில் இக்காரை இந்தியா போன்ற உலக சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

புதுப்பித்தல் நடவடிக்கையின்கீழ் பல்வேறு மாற்றங்களை செல்டோஸ் காரில் கியா செய்திருக்கின்றது. குறிப்பாக, காரின் முகப்பு பகுதி மற்றும் கேபின் பகுதியில் மாற்றங்கள் மிக அதிகளவில் செய்யப்பட்டுள்ளன. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி கியா நிறுவனம் காரின் முகப்பு பகுதியைக் காட்டிலும் கேபின் பகுதியில் ஹெவியாக மாற்றியமைப்பை செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

ஒரு சில மாற்றங்களை மட்டுமே வெளியில் செய்துவிட்டு நிறுவனம் பெரும்பாலான மாற்றங்களை காரின் உட்பகுதியில் வழங்கியிருக்கின்றது. இத்தகைய செயலால் காரின் உட்பக்கம் இன்னும் பல மடங்கு அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்டதாக மாறியிருக்கின்றது. அப்படி என்ன மாதிரியான அம்சங்களை கியா வழங்கியிருக்கு என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

காரின் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன?

கியா நிறுவனம் செல்டோஸின் முகப்பு பகுதியை முழுமையாக ரீ-ஒர்க் செய்திருக்கின்றது. அந்தவகையில், காரின் பகல் நேர மின் விளக்கு மற்றும் பனி மின் விளக்கு உள்ளிட்டவை மாற்றப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக அவை புதிய ஸ்டைலுக்கு மாறியிருக்கின்றன. இதுமட்டுமின்றி, காரின் முன் பக்க ஸ்கிட் பிளேட், க்ரில் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. க்ரில்லை கியா சற்று பெரியதாக்கி இருக்கின்றது. இந்த மாதிரியான மாற்றங்களினால் காரின் வெளிப்புற தோற்றம் கூடுதல் கவர்ச்சியானதாக மாறியிருக்கின்றது.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

இதேபோல் கணிசமான மாற்றங்கள் காரின் பின் பகுதியிலும் செய்யப்பட்டுள்ளன. பின் பக்கத்தில் அகன்ற தோற்றத்திலான லைட் பார் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல், கூடுதல் ஷார்ப்பான தோற்றத்தில் டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சிவப்பு ரெஃப்ளெக்டர்கள் பிளாஸ்டிக் கிளாடிங்கில் இடம் பெறும் வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களையே கியா நிறுவனம் செல்டோஸ் காரின் வெளிப்புறத்தில் மேற்கொண்டிருக்கின்றது.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

காரின் கேபின் பகுதியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள்:

கியா நிறுவனம் செல்டோஸின் கேபின் பகுதிக்குள் செய்திருக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக டேஷ்போர்டு அப்டேட் உள்ளது. 10.25 அங்குல அளவிலான இரு திரைகள் சைடு-பை-சைடு பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, இதன் ரோடரி டயல் கியர் லிவர் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை அடுத்து ஸ்போர்ட்ஸ் அப்டேட்டாக எச்விஏசி கன்ட்ரோல்கள் புதிதாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளை புதிய செல்டோஸில் கியா வாரி வழங்கியிருக்கின்றது. ஆனால், என்ன மாதிரியான அம்சங்களை வழங்கியிருக்கின்றோம் என்கிற முழுமையான தகவலை அது வெளியிடவில்லை. தன்னுடைய வாடிக்கையாளர்கள் சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தில் நிறுவனம் சற்றே மூடி மறைத்தலைக் கடைபிடிக்கின்றது.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

அதேநேரத்தில் இந்த மூடி மறைத்தல் வெகு நாட்களுக்கு நீடிக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வெகு விரைவிலேயே கியா நிறுவனம் இந்த சூப்பரான அப்டேட்டைப் பெற்ற செல்டோஸை அறிமுகப்படுத்த இருக்கின்றது. பூஷன் மோட்டார் ஷோவில் இக்கார் பொதுபார்வைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களே தயாரா இருங்க... வெற லெவலில் அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை களமிறக்கும் பணியில் கியா... இன்டீரியர் அட்டகாசமா இருக்கு!

கியா நிறுவனத்தின் முன்னணி கார் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இந்த காரே நிறுவனத்தின் இந்திய இருப்பை மிக ஆழமாக பதியச் செய்த தயாரிப்பாகும். இத்தகைய ஓர் தயாரிப்பை சிறப்பிக்கும் விதமாகவே நிறுவனம் இக்காரை வேற லெவலுக்கு தற்போது அப்டேட் செய்திருக்கின்றது.

குறிப்பு: 6 முதல் 9 வரையிலான படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்ட தற்போது விற்பனையில் உள்ள செல்டோஸ் எஸ்யூவியின் படங்கள் ஆகும்.

Most Read Articles
English summary
Here is full details about 2022 kia seltos facelift suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X