அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ லபின் எல்சி (Alto Lapin LC) கார் பற்றிய வெளிவந்திருக்கும் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் தனது ஆல்டோவின் அடுத்த தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்பாரத்தின் வாயிலாக உருவாக்கத்தைப் பெற்று வரும் புதிய தலைமுறை ஆல்டோ தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்டோவைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கணிசமான டிசைன் மாற்றத்துடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் சுஸுகி நிறுவனம் இந்த ஆல்டோவை வேற லெவல் ரெட்ரோ தோற்றம் கொண்ட காராக உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரெட்ரோ தோற்றம் கொண்ட ஆல்டோவை சுஸுகி நிறுவனம் ஆல்டோ லபின் எல்சி (Suzuki Alto Lapin LC) என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றது.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

ஜப்பான் சந்தைக்கு ஏற்பவாறு இக்காரை கீ (Kei) ரக, அதாவது, அல்ட்ரா மைக்ரோ ரக காராக சுஸுகி உருவாக்கியிருக்கின்றது. மைக்ரோ ரக கார் என்றாலே மிக சிறியதாக இருக்கும். இது அதைவிட சிறியதாக இருக்கும் என்றே இதன் வாயிலாக தெரிகின்றது. ஜப்பானிய அரசு தன் நாட்டின் குறுகலான சாலைகளுக்கு ஏற்ற வாகனங்களாக கீ ரக வாகனங்களை பார்க்கின்றன. எனவே, அவற்றின் பயன்பாட்டை அது ஊக்குவிக்கவும் செய்கின்றது.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

உருவத்தில் மட்டுமின்றி எஞ்ஜின் மற்றும் பிற அடிப்படை வசதிகளிலும் கடுமையானக் கட்டுப்பாடுகளுடன் இந்த ரக கார்கள் வருகின்றன. இத்தகைய ஓர் ரக வாகனமாகவே ஆல்டோ லபின் எல்சி உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆல்டோவிற்கும் இதற்கும் சிறிதளவும் தொடர்பில்லாத வகையிலான டிசைனை அது பெற்றிருக்கின்றது.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

ஆல்டோ லபின் எல்சி காரில் வழங்கப்பட்டிருக்கும் கருவிகளால் மட்டுமே அக்காருக்கு ரெட்ரோ தோற்றம் கிடைத்துவிடவில்லை. அதன் வடிவமைப்பு விஷயத்திலும் ரெட்ரோ கூறுகள் பல சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாடி பேனல்கள் இதன் ரெட்ரோ தோற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக காரின் முகப்பு பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய க்ரில், குரோம் அக்செண்டுகள் உள்ளிட்டவை ஆல்டோ லபின் எல்சி-யின் ரெட்ரோ தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

இதுதவிர, வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஏர் இன்டேக் உள்ளிட்டவையும் ரெட்ரோ தோற்றத்தை இரட்டிப்பாக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதியிலும் இதற்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், வெள்ளை நிற ஸ்டீல் வீல் மற்றும் வாகனத்தை சுற்றிலும் கிளாடிங் வழங்கப்பட்டிருக்கின்றது. பின்பக்கத்திலும், இதுபோன்று சிறப்பு சேர்க்கும் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

பன்முக சிறப்பம்சங்கள் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், ஆல்டோ லபின் எல்சி தோற்றத்தில் சிறியதாகக் காணப்பட்டாலும் அதில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் அக்காரை பரந்தளவிலான வாகனமாக காட்சிப்படுத்துகின்றது. ஃபேப்ரிக்கால் உருவாக்கப்பட்ட அதிக மிருதுவான புதிய இருக்கைகள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. இது சாக்கலேட் ஷேடில் இருக்கும்.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

பிரீமியம் தோற்றத்திற்கு வித்திடும் அம்சமாக இது உள்ளது. அதேநேரத்தில் இதன் ஹெட்லைனர் மற்றும் டூர் பேட்களுக்கு பீஜ் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மிக்ஸ் செய்யப்பட்ட வண்ணங்களுடனேயே காரின் உட்பகுதி காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஹீட்டட் இருக்கைகள் உள்ளிட்ட சிறப்பு கருவிகள் மற்றும் வசதிகளும் இந்த ரெட்ரோ ஆல்டோவில் வழங்கப்பட்டுள்ளன.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

காரின் வெளிப்புற ரெட்ரோ தோற்றத்திற்கு ஏற்ப உட்புறத்தில் உள்ள டேஷ்போர்டும் ரெட்ரோ ஸ்டைலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரத்தினால் உருவாக்கப்பட்டதைப் போன்று அது காட்சியளிக்கின்றது. இத்துடன், டார்க் கிரே பியர்ல் ஷேட் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. டேஷ்போர்டில் கியர் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக முன்பக்க இருக்கையாளர்கள் அதிக இடவசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

கார் என்னதான் சிறியதாக இருந்தாலும் நான்கு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தில் 660 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. டிரான்ஸ்மிஷன் வசதியாக சிவிடி வழங்கப்படுகின்றது.

அட்டகாசமான தோற்றத்தில் சுஸுகி ஆல்டோ... இது மட்டும் இந்தியா வந்துச்சு எல்லா சிறிய காரும் காலியாயிடும்!!

இத்துடன் 4வீல் டிரைவ் மற்றும் ஆல் டிரைவ் ஆப்ஷனும் இக்காருக்கு வழங்கப்படுகின்றது. இந்திய மதிப்பில் ரூ. 8.08 லட்சம் தொடங்கி ரூ. 9.44 லட்சம் வரையிலான விலையில் ஜப்பானில் இந்த ரெட்ரோ ஆல்டோ கார் விற்கப்பட இருக்கின்றது. இந்தியாவிலும் இதுமாதிரியான ரெட்ரோ கார்களுக்கு மிக சூப்பரான வரவேற்பு உண்டு. ஆனால், இந்த காரை சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான எந்தவிதமான சாத்தியக் கூறுகளும் இதுவரை தென்படவில்லை.

Most Read Articles
English summary
Here is full details about suzuki alto lapin lc
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X