பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை

வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்தமா ஐந்து புதிய கார்கள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

நடப்பு 2021-2022 நிதியாண்டிற்குள் இந்திய வாகன சந்தையை புதுமுக வாகனங்களால் அலங்கரிக்க சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அந்தவகையில், வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஐந்து முக்கிய கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம்.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

கியா கேரன்ஸ் (Kia Carens):

கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம் அதன் புதுமுக எம்பிவி ரக காரான கேரன்ஸ் 7 சீட்டர் காரை வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டன.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

இப்பணிகள் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 7 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் தொடங்கின. இது மிக சிறப்பான வரவேற்பிற்கான அறிகுறியாகும். கியா நிறுவனம் கேரன்ஸ் காரை எஸ்பி2 பிளாட்பாரத்தின்கீழே கட்டமைத்திருக்கின்றது. இது மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே கேரன்ஸ் எம்பிவி விற்பனைக்குக் கிடைக்கும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களிலும் இதே மாதிரியான எஞ்ஜினே வழங்கப்படுகின்றது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

கியா கேரன்ஸ் எம்பிவி கார் ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி மற்றும் லக்சூரி ப்ளஸ் ஆகிய தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், எட்டு விதமான நிற தேர்வுகளும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

ஃபேஸ்லிஃப்ட் மாருதி பலினோ (Maruti Suzuki Baleno)

மாருதி சுசுகி நிறுவனம் அதன் பலினோ ஹேட்ச்பேக் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் பிப்ரவரி மாதம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே புதிய பலினோவும் தயாரிக்கப்பட இருக்கின்றன.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

ஆனால், தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஸ்ட்ராங்கான பலினோவாக புதிய ஒன்று உருவாக இருக்கின்றது. இதற்காக அதிக உறுதியான ஸ்டீல் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதேபோல், அதிக குவாலிட்டியான பாடி பேனல்களும் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

இதுமட்டுமின்றி, பெரிய மற்றும் ஃப்ரீ ஸ்டாண்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற இருக்கின்றது. இது ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதி மற்றும் இ-சிம் வசதியுடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், கூடுதல் சிறப்பு வசதியாக ஹெட்ஸ்-அப்-டிஸ்ப்ளே, ஆறு ஏர் பேக்குகள் மற்றும் புதிய உட்புறம் உள்ளிட்டவையும் பேஸ்ஃலிப்ட் பலினோவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia)

நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் ஸ்லேவியா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய செக் நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன், மார்ச் மாதத்திற்குள் டெலிவரி பணிகளை தொடங்க இருப்பதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் மிக சமீபத்திலேயே தொடங்கப்பட்டது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏஓ ஐஎன் பிளாட்பாரத்தை பயன்படுத்தி கட்டமைத்திருக்கின்றது. இதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த கார்களை தழுவிய ஓர் வாகனமாக ஸ்லேவியா காட்சியளிக்கின்றது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ட்ரிம்களில் ஸ்கோடா ஸ்லேவியா எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக்டீவ், ஆம்பிசன் மற்றும் ஸ்டைல் ஆகிய தேர்வுகளிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

ஃபேஸ்லிஃப்ட் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)

இந்தியாவின் பிரபலமான மின்சார கார் மாடல்களில் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி காரும் ஒன்று. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு புதிய அம்சங்கள் இக்காரில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

அந்தவகையில் புதிய அம்சமாக 51 kWh பேட்டரி பேக், ஒற்றை சார்ஜில் 480 ரேஞ்ஜ் வழங்கும் வகையில் வழங்கப்பட இருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் எம்ஜி இசட்எஸ் இவி காரில் 44.5 kWh பேட்டரி பேக் மற்றும் 419 கிமீ ரேஞ்ஜ் திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

பேட்டரி பேக் மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களையும் மாற்றியமைக்க எம்ஜி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், புதிய 10.1 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களே இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், அஸ்டர் காரில் வழங்கப்பட்டிருப்பதைப் போன்று ஏஐ அசிஸ்டண்ட் மற்றும் அடாஸ் தொழில்நுட்ப அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux)

உலக அளவில் மிகவும் ஃபேமஸாக காட்சியளிக்கும் காராக டொயோட்டாவின் ஹைலக்ஸ் இருக்கின்றது. பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளுதல் என இரு விதமான பயன்பாட்டு வசதிகளைக் கொண்டதே இக்காரின் தனி சிறப்பு. இத்தகைய வாகனத்தையே டொயோட்டா நிறுவனம் மிக சமீபத்தில் இந்தியாவில் வெளியீடு செய்தது.

பிப்ரவரி-மார்ச் மாசத்துல மொத்தமா 5 கார்கள் அறிமுகமாக இருக்குது... அதிக உறுதியான பலினோ தொடங்கி கியா கேரன்ஸ் வரை!

வெளியீட்டைத் தொடர்ந்து புக்கிங் பணிகளையும் நிறுவனம் விற்பனையாளர்கள் வாயிலாக தொடங்கியிருக்கின்றது. இதன் டெலிவரி பணிகளை வரும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவும் திட்டமிட்டிருக்கின்றது. இந்த மாதமே டொயோட்டா ஹைலக்ஸ் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் பின்னரே இக்காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கப்படும்.

Most Read Articles
English summary
Here is list of 5 new cars that will launch in coming february and march 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X