Just In
- 19 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 15 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- News
ஆடித்தபசு விழா கோலாகலம்.. கோமதி அம்மனுக்கு காட்சி அளித்த சங்கரநாரயணர்..பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
- Finance
சீனாவிடம் யாரும் கடன் வாங்காதீங்க.... எச்சரிக்கை விடும் வங்கதேச அமைச்சர்!
- Technology
பாச மலர்களுக்கு அன்பு பரிசு: Slim ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) -யின் அதிகம் விற்பனையாகும் 3 கார் மாடல்கள் பற்றிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டாக மாருதி சுஸுகி (Maruti Suzukis) இருக்கின்றது. எப்படியாப்பட்ட பிரியத்தை இந்த பிராண்ட்மீது இந்தியர்கள் செலுத்தி வருகிறார்கள் என்றால், விற்பனையில் எப்போதுமே நம்பர் 1 இடத்தை பிடிக்க வைக்கின்ற அளவிற்கு அதன்மீது இந்தியர்கள் பிரியம் வைத்திருக்கின்றார்கள். இதற்கு ஒவ்வொரு மாத கார் விற்பனை புள்ளி விபரங்களே சான்றாக இருக்கின்றன.

ஏன், கடந்த மே மாத விற்பனையில் கூட மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் மாஸ் காட்டியிருக்கின்றது. இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,24,474 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாத விற்பனையைக் காட்டிலும் 278.31 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு மே மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே 32,903 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

தற்போது இதை விட 91,571 யூனிட்டுகளை மாருதி சுஸுகி கூடுதலாகவே விற்பனைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. நிறுவனம் இத்தகைய பிரமாண்ட விற்பனை வளர்ச்சியைப் பெற்றதில் மூன்று குறிப்பிட்ட கார் மாடல்கள் முக்கிய பங்கினை வகித்திருக்கின்றன.

அவை எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். அதாவது, நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் டாப் 3 மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki Wagon R)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் முதல் இடத்தை வேகன்ஆர் பிடித்திருக்கின்றது. இதுவே நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 2022 மே மாதத்தில் 16,814 யூனிட்டுகள் வேகன்ஆர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

இதே கார் மாடல் 2021ம் ஆண்டின் மே மாதத்தில் வெறும் 2,086 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதைக் காட்டிலும் நடப்பாண்டு மே மாதத்தில் பெற்றிருப்பது 706 சதவீத அதிக விற்பனை வளர்ச்சியாகும். இத்தகைய சூப்பரான விற்பனையை வேகன்ஆர் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இத்தகைய சூப்பரான வரவேற்பை இக்கார் பெறுவதற்கு அதன் மலிவு விலையே காரணமாக உள்ளது. இந்தியாவில் இக்கார் ரூ. 5.47 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இருவிதமான தேர்வுகளில் வேகன்ஆர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 34.5 கிமீ வரை மைலேஜ் தரும். அதேநேரத்தில் இதன் பெட்ரோல் வெர்ஷன் 23.56 கிமீ தொடங்கி 25.19 கிமீ வரை மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)
மாருதி சுஸுகியின் அடுத்து அதிகம் விற்பனையாகும் காராக ஸ்விஃப்ட் இருக்கின்றது. இந்த கார் மாடலும் 2021ம் ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு மே மாதத்தில் நல்ல வளர்ச்சியில் விற்பனையில் கண்டிருக்கின்றது. 2021 மே மாதத்தில் வேகன்ஆர் கார் வெறும் 7,005 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பாண்டு மே மாத்தில் 14,133 யூனிட்டுகள் வரை விற்பனையாகியுள்ளன.

இதுவும் மிக மிக சிறந்த விற்பனை வளர்ச்சியாகும். மிக துள்ளியமாக கூற வேண்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் ஸ்விஃப்ட் 102 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இத்தகைய சூப்பரான விற்பனை வளர்ச்சியின் காரணத்தினால் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மூன்றாவது இடத்தை ஸ்விஃப்ட் பிடித்திருக்கின்றது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்தியாவில் ரூ. 5.91 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.76 கிமீ வரை மைலேஜ் தரும். பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே ஸ்விஃப்ட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno)
மாருதி சுஸுகியின் மூன்றாவது அதிகம் விற்பனையாகும் காராக பலினோ இருக்கின்றது. வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய இரு கார் மாடல்களைப் போலவே பலினோவும் மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியை சென்ற மாதம் பெற்றிருக்கின்றது. அதாவது, 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மே மாதத்தில் 191 சதவீத விற்பனை வளர்ச்சியை பலினோ ஹேட்ச்பேக் பெற்றிருக்கின்றது.

இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இந்த பிரிவில் எப்போதும் அதிகம் விற்பனையாகும் காராக பலினோ இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நடப்பாண்டு மே மாதத்தில் 13,970 பலினோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

அதுவே 2021 மே மாதத்தில் பார்த்தேமேயானால் பலினோவின் 4,803 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. மாருதி சுஸுகி பலினோ இந்தியாவில் ரூ. 6.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் 22 கிமீ முதல் 23 கிமீ வரை மைலேஜ் தரும்.
-
பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!
-
என்ன சொல்றீங்க... விமானங்களுக்குச் சாவியே கிடையாதா? அப்ப எப்படி விமானத்தை ஸ்டார்ட் பண்ணுறாங்க?