போடுற காசுக்கு உகந்த கார்களின் லிஸ்ட்.. தீபாவளிக்கு புது கார் வாங்குற பிளான்ல இருந்தீங்கனா இந்த லிஸ்ட பாருங்க!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுசா கார் வாங்கும் பிளானில் இருந்தீங்கனா, உங்களுக்கான டாப் ஐந்து பெஸ்ட் மணி வேல்யூ கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

இந்த தீபாவளி பண்டிகையை புதிய வாகனத்துடன் கொண்டாட விரும்புறீங்களா?, அதாவது, இந்த தீபாவளிக்கு புது கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா, உங்களுக்கு சின்ன வழிக்காட்டுதலை வழங்கும் வகையில், தற்போது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சில கார்களின் பட்டியலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இது நீங்கள் செலவு செய்யும் தொகைக்கான மதிப்புமிக்க காராக இருக்கும். இத்தகைய வாகனங்களையே தேர்ந்தெடுத்து இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)

மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாக்கிய காரே கிராண்ட் விட்டாரா. மிக சிறந்த வாகனமாக இதனை இந்நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. இதன் ஆரம்ப நிலை வேரியண்டான சிக்மா (Sigma)வே அதிக சிறப்பு வசதிகள் கொண்ட தேர்வாகக் காட்சியளிக்கின்றது. இக்காரின் ஆரம்ப விலை ரூ. 10.45 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா இந்தியாவில் ஐந்து இருக்கைகள் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி இந்த காரில் மைல்டு மற்றும் ஸ்ட்ராங் என இருவிதமான ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் மைல்டு ஹைபிரிட் மோட்டார் 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாரே ஆரம்ப நிலை தேர்வான சிக்மாவில் பயன்படுத்தப்படுகின்றது.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

கிராண்ட் விட்டாராவில் கூடுதல் சிறப்பு வசதிகளாக 60:40 ஆக மடித்துக் கொள்ளக் கூடிய இருக்கைகள்,டெலிஸ்கோபிக் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் விங் மிரர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மும்முனை சீட் பெல்டுகள், ரியர் ஸ்பாய்லர், 17 அங்குல ஸ்டீல் வீலகள், 4.2 அங்குல டிஎஃப்டி திரை, சாவியில்லாமல் நுழையும் வசதிகளும் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Hyryder)

மாருதி சுஸுகி - டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டதே டொயோட்டாவிற்கான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காராகும். இந்த காரும் மேலே நாம் பார்த்த மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவை போல் மிக சிறந்த தொழில்நுட்ப வசதிகளான மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

இதில், டொயோட்டா விற்பனைக்கு வழங்கும் ஹைரைடரின் பேஸ் வேரியண்டான 'இ' எனும் தேர்வே நாம் செலவு செய்யும் தொகைக்கான மதிப்புமிக்க காராக காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 10.48 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பன்முக சிறப்பு வசதிகள் இந்த காரிலும் இடம் பெற்றிருக்கின்றது.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

அந்தவகையில், புரஜெக்டர் ஹெட்லேம்ப் எல்இடி டேடைம் லைட்டுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், எல்இடி டெயில் லேம்ப், 17 அங்குல ஸ்டீல் வீல், 4.2 அங்குல டிஎஃப்டி எம்ஐடி திரை, டூயல் ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

கியா கேரன்ஸ் (Kia Carens)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலையிலான் பிரீமியம் தர எம்பிவி காரே கியா கேரன்ஸ். இந்த காருக்கு ஏற்கனவே இந்தியர்கள் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. எர்டிகா, எக்ஸ்எல் 6 உள்ளிட்ட எம்பிவி கார் மாடல்களுக்கு அடுத்தபடியாக இந்த எம்பிவிக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டான பிரீமியத்தின் விலை 9.59 லட்சமாக இருக்கின்றது.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

இதிலேயே எக்கசக்க வசதிகளை கியா வழங்கியிருக்கின்றது. எனவேதான் இந்த காருக்ககு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் பேஸ் வேரியண்டிலேயே கியா நிறுவனம் ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்பி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, ரூஃப் மவுண்டட் ஏசி வெண்டுகள், அனைத்து வீண்டோக்களும் பவர் ஆப்ஷன், ஐந்து யுஎஸ்பி டைப் சி சார்ஜர் போர்ட் மற்றும் லெதர் இருக்கை போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N)

மஹிந்திரா நிறுவனம் மிக சமீபத்திலயே ஸ்கார்பியோ என் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் ஒட்டுமொத்தமாக ஐந்து ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகியவையே அவை ஆகும். இதன் பேஸ் வேரியண்டான இசட்2-வில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

இதில், பெட்ரோல் மோட்டார் தேர்விற்கு விலை ரூ. 11.99 லட்சமும், டீசலுக்கு ரூ. 12.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களும் இந்த ஆரம்ப நிலை வேரியண்டில் மிக அதகம். பன்மகு கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், இரண்டாம் வரிசை இருக்கையாளர்களுக்கும் ஏசி வெண்டுகள், எல்இடி லைட் என பல சிறப்பம்சங்கள் ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. சில அம்சங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மோட்டார் தேர்வுகளுக்கு ஏற்ப வெவ்வேறானதாகக் காட்சியளிக்கின்றது.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta)

ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவின் மிக சிறந்த விற்பனையாகும் எஸ்யூவி காராக இருக்கின்றது. பல ஆண்டுகளாக இந்த கார் பிரிவின் பெஸ்ட் செல்லிங் காராகவும் இது இருக்கின்றது. செலவு செய்யும் தொகைக்கான மதிப்புமிக்க காராக இது இருப்பதனாலயே இந்தியர்களின் ஃபேவரிட் காராக கிரெட்டா இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்டான இஎக்ஸ்-லேயே சிறப்பு வசதிகள் மிக ஏராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

தீபாவளிக்கு புதுசா கார் வாங்க இருக்கீங்கனா இந்த கார்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சுட்டு போங்க... பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க கார்கள்!

இதன் பெட்ரோல் தேர்வு ரூ. 11.38 லட்சத்திற்கும், டீசல் வேரியண்ட் ரூ. 12.32 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஹூண்டாய் கிரெட்டாவில் சிறப்பு வசதிகளாக 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஆடியோ சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, ரிமோட் லாக்கிங், பவர் விண்டோக்கள், டை/ நைட் ஐஆர்விஎம், ஹாலோஜென் புரஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Here is list of top 5 cars that value for money
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X