இந்தியாவின் மலிவு விலை மின்சார காருனு இத யாருமே சொல்ல மாட்டாங்க! அந்தளவுக்கு வேற லெவல்ல தயாரிச்சிருக்கு டாடா!

டாடா அறிமுகம் செய்திருக்கும் டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை யாரும் மலிவு வலை மின்சார வாகனம்னு சொல்ல மாட்டங்க. அந்தளவுக்கு அந்த காரு எக்கசக்க சிறப்புகள் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இக்கார் பற்றிய அறிய முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

டாடா மோட்டார்ஸ் யாரும் எதிர்பார்த்திராத மிகக் குறைவான விலையில் டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் அறிமுகம் நேற்றைய (செப்டம்பர் 28) தினமே இந்தியாவில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இக்காரின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் அதனை டாடா விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

அறிமுகமாக ரூ. 8.49 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைவிட குறைவான விலையில் வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

வேரியண்ட் விபரம்:

டாடா டியாகோ இவி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை:

  • எக்ஸ்இ (XE),
  • எக்ஸ்டி (XT),
  • எக்ஸ்இசட் பிளஸ் (XZ+),
  • எக்ஸ்இசட் பிளஸ் டெக் லக்ஸ் (XZ+ Tech LUX)
  • டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

    புக்கிங் நிலவரம்:

    இந்த நான்கு விதமான வேரியண்டுகளிலேயே டியாகோ இவி விற்பனைக்குக் கிடைக்கும். இந்த அனைத்து வேரியண்டுகளுக்குமான புக்கிங் தொடங்கிவிட்டன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. முதல் பத்தாயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் வரும் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி 2023-லேயே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இப்போது டியாகோ இவி-யை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அக்காரை அடுத்த ஆண்டு ஜனவரிலேயே பெறுவர்.

    டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

    பேட்டரி தேர்வு மற்றும் ரேஞ்ஜ் விபரங்கள்:

    புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் டியாகோ இவி-யில் இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 19.2kWh மற்றும் 24kWh ஆகிய இரு பேட்டரி பேக் தேர்வுகளிலேயே டியாகோ இவி கிடைக்கும். 19.2kWh பேட்டரி பேக் ஃபுல் சார்ஜில் 250 கிமீ ரேஞ்ஜையும், 24kWh பேட்டரி பேக் முழு சார்ஜில் 315 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

    டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

    மின் மோட்டாரை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் கார் ஒற்றை மின் மோட்டார் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. 74 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெறும் 5.7 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

    டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

    நான்கு விதமான சார்ஜிங் ஆப்ஷன்களுடன் இக்கார் வந்திருக்கின்றது. அதாவது, டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை 15 A சார்ஜிங் பாயிண்ட், 3.3 kW AC சார்ஜிங் பாயிண்ட், 7.2 kW AC வீட்டு சார்ஜிங் பாயிண்ட் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் என அனைத்திலும் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இத்துடன் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இரு விதமான டிரைவிங் மோட்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

    இவையிரண்டும் வெவ்வேறு டிரைங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை. இதுதவிர நான்கு லெவல் ரீஜென் பிரேக்கிங் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், இசட்-கன்னெக்ட் செயலி வாயிலாக 45க்கும் மேற்பட்ட கார் இணைப்பு அம்சங்கள், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

    டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

    இதுமட்டுமின்றி இன்னும் சிறப்பு தொழில்நுட்பக் கருவிகளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றின் லிஸ்ட் இதோ:

    • எட்டு ஸ்பீக்கர்கள் அடங்கிய ஹர்மன் ஆடியோ சிஸ்டம்
    • ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது 7 அங்குலம் கொண்டது)
    • ஆட்டோ ஹெட்லேம்ப்
    • புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன்
    • ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்
    • புரெஜெக்டர் ஹெட்லைட்
    • க்ரூஸ் கனட்ரோல்
    • ஹில் ஸ்டார்ட் மற்றும் டெசன்ட் அசிஸ்ட்
    • டிஆர்எல்கள்
    • டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம்
    • உள்ளிட்ட அம்சங்கள் டியாகோ இவி-யில் வழங்கப்பட்டிருக்கின்றன.

      டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

      பாதுகாப்பு அம்சங்கள்:

      • ஏர்பேக்குகள்
      • இபிடி உடன் ஏபிஎஸ்
      • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
      • சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

        டாடா அறிமுகம் செய்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை யாருமே மலிவு விலை வாகனம்னு சொல்ல மாட்டாங்க... செம்மையா இருக்கு!

        நிற தேர்வு:

        டாடா மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் காரை ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. டீல் ப்ளூ (Teal Blue), டேடோனா கிரே (Daytona Grey), பிரைஸ்டைன் வெள்ளை (Pristine White), மிட்நைட் பிளம் (Midnight Plum) மற்றும் டிராபிகல் மிஸ்ட் (Tropical Mist) இவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

Most Read Articles
English summary
Here is list of want know about tata tiago ev
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X