இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கா!.. லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்கேப்பா!

இந்தியாவில் களமிறங்க வரிசைக் கட்டி காத்துக் கொண்டிருக்கும் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

இந்தியாவில் மின்சாரம் மற்றும் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மின்சார வாகனத்தை விரும்பாதவர்கள் இப்போதும் பலர் உள்ளனர். இவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய வாகனமாக ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்கள் இருக்கின்றன. இந்த ஹைபிரிட் கார்கள் பெட்ரோல் மற்றும் மின்சார மோட்டார் என இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

இது இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளுதல் மற்றும் மின்சார வாகனங்களைப் போல் தனியாக பிளக்-இன் முறையில் சார்ஜேற்றுதல் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வசதிக் கொண்ட ஹைபிரிட் கார்கள் அதிக மைலேஜ் தரக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

அதாவது, ஒரு லிட்டருக்கே 28 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடியதாக ஹைபிரிட் கார்கள் உள்ளன. எனவேதான் இந்த ரக கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு டிமாண்ட் அதிகம் என்பதால் வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் ஹைபிரிட் கார்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

சில நிறுவனங்கள் விரைவில் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களைக் களமிறக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர். ஆகையால், இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறுவதற்கான வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பட்டியலையும், இவற்றைப் போலவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகவாவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் மின்சார கார்களின் பட்டியலையும்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV)

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் இவி, நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரிசையில் இன்னும் சில எலெக்ட்ரிக் கார்களையும் டாடா விற்பனைக்கு இணைக்க இருக்கின்றது. அந்த வரிசையில் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் அல்ட்ராஸ் இவி-யே முன்னணி இடத்தில் இருக்கின்றது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

இதன் அறிமுகம் இன்னும் ஒரு சில மாதங்களில் அரங்கேறிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதன் வருகைக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் கவர்ந்து வரும் எலெக்ட்ரிக் காராக அல்ட்ராஸ் இவி இருக்கின்றது. ஆகையால், இந்த எலெக்ட்ரிக் காரை நடப்பாண்டின் இறுதிக்குள் நிறுவனம் வெளியீடு செய்தாலும் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4 மேட்டிக் பிளஸ் (Mercedes AMG EQS 53 4Matic+)

இந்தியாவில் அறிமுகமாக தயாராக இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4 மேட்டிக் பிளஸ்-ம் ஒன்று. இந்த காரின் அறிமுகம் இம்மாதம் 24 ஆம் தேதி அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். ஆகையால், மெர்சிடிஸ் சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் இக்காரின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

இக்காரில் இரண்டு மின்சார மோட்டார்களை மெர்சிடிஸ் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்ஸில்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டும் இணைந்து 658 பிஎஸ் மற்றும் 950 என்எம் டார்க்கை வெளியேற்றும். இக்கார்குறித்த முக்கிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அறிமுகத்தை முன்னிட்டு அது விரைவில் வெளியிடப்பட இருக்கின்ற

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai IONIQ 5)

ஹூண்டாய் நிறுவனம் அதன் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்காரை இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தை நிறுவனம் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. கியா இவி6 எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

ஆனால், கியா இவி6 எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் ஐயோனிக் 5 எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரின் உற்பத்தியை ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் வைத்து மேற்கொள்வதனால் அது குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. சிங்கிள் மோட்டார், டூ வீல் டிரைவ் மற்றும் ஒற்றை சார்ஜில் 384 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களில் எலெக்ட்ரிக் கார் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கோனா (Hyundai Kona Facelift)

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கோனா எலெக்ட்ரிக் காரை புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையும் இன்னும் சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

இந்த காரை முதன் முதலில் 2019ம் ஆண்டிலேயே இந்திய சந்தையில் ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, வெகு விரைவில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் அது விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. 39.2 kWh பேட்டரி பேக் மற்றும் 136 எச்பி மின் மோட்டார் ஆகிய திறன்களில் புதிய கோனா எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser Hyryder)

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஓர் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட காராகும். இந்த காரை ஸ்ட்ராங் மற்றும் மைல்டு என இரு விதமான ஹைபிரிட் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது டொயோட்டா நிறுவனம் இக்காருக்கு ஏற்கனவே இந்தியாவில் முன்பதிவு பணிகள் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரை மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையிலேயே டொயோட்டா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)

மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனத்திற்காக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல மாருதி சுஸுகிக்காக உருவாக்கப்பட்டிருப்பதே கிராண்ட் விட்டாரா ஆகும். இந்த காரும் மைல்டு மற்றும் ஸ்ட்ராங் என இரு விதமான ஹைபிரிட் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட தேர்வு ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும்.

இந்தியால களமிறங்குவதற்கு இத்தன எலெக்ட்ரிக், ஹைபிரிட் கார்கள் காத்திருக்கின்றதாம்... லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்குதேப்பா!

ஹூண்டாய் சிறிய மின்சார கார் (Hyundai's Small EV)

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் வெகு விரைவில் சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து ஐயோனிக் மின்சார கார்களையும் விற்பனைக்கு வழங்க அது திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் வைத்து மிகக் குறைவான எலெக்ட்ரிக் காரையும் தயாரித்து விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வருகை 2028ம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Here is list upcoming ev s and hybrid cars list
Story first published: Thursday, August 4, 2022, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X