கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார் பற்றிய டாப் 10 முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வாகன மாடல்களில் கியா நிறுவனத்தின் இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரும் ஒன்று. இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களே அண்மையில் இணையத்தின் வாயிலாக கசிந்தன. வெகு விரைவில் அறிமுகத்தைப் பெற இருக்கின்றநிலையில் காரின் ப்ராச்சர் படங்கள் வெளியாகியது. இந்த படத்தின் வாயிலாகவே கார் பற்றிய பல முக்கிய தகவல்கள் நமக்கு தெரிய வந்தன. இவற்றில் டாப் 10 தகவல்களைப் பற்றியே இந்த பதவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

டிசைன்:

மாடர்ன் லுக்கில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. க்ராஸோவர் தோற்றமே காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இத்தோற்றம் உதவியாக இருக்கும். குறிப்பாக, அதிக ரேஞ்ஜை வழங்கவும் இந்த தோற்றம் சற்று துணையாக செயல்படும். இதுமட்டுமின்றி காரின் கவர்ச்சிக்காக மெல்லிய இழை போன்ற எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட பம்பர் முன் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இளம் தலைமுறையினர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

சிறப்பம்சங்கள்:

கியா இவி6 எலெக்ட்ரிக் க்ராஸோவர் ரக காரில் பன் முக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், எல்இடி ஹெட்லைட்டுகள், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் மின் விளக்கு, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், மல்டிபிள் டிரைவிங் மோட்கள், 12.3 அங்குல டிரைவர்கள் திரை, எல்இடி டெயில் லைட் என பல்வேறு அம்சங்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

வேரியண்டுகள்:

கியா இவி 6 எலெக்ட்ரிக்க கார் ஒற்றை ட்ரிம்மில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் உயர்நிலை தேர்வான ஜிடி லைன் ட்ரிம்மில் மட்டுமே இவி6 விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே இக்காரின் பிற ஆரம்ப நிலை வேரியண்டுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

மின் மோட்டார்:

கியா இவி6 எலெக்ட்ரிக் க்ராஸோவர் பின் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் என்ற இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகிய ப்ராச்சர் தெரிவிக்கின்றது. பின் வீல் இயக்கம் கொண்ட தேர்வு 229 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கையு, அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வு 325 பிஎஸ் மற்றும் 605 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதுமாதிரியான பவர்ஃபுல்லான காராகவே இவி6 வரவிருக்கின்றது.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

பேட்டரி பேக்:

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் 77.4 kWh மற்றும் 58kWh ஆகிய இருவிதமான பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள் ஆகும். இதில், பெரிய பேட்டரி பேக்கான 77.4 kW-இனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது தற்போது விற்பனையில் இருக்கும் பிற எலெக்ட்ரிக் கார் மாடல்களைக் காட்டிலும் மிக மிக அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

சார்ஜிங் திறன்:

கியா இவி6 எலெக்ட்ரிக் காரை வெறும் 4.5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணிக்கின்ற அளவிற்கு சார்ஜேற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதற்கு 150kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மையம் தேவைப்படுகின்றது. இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் போது 20 நிமிடங்களுக்கு உள்ளாகவே 80 முதல் 90 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால், 50kW சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது முழுமையாக சார்ஜ் செய்ய 73 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

பெர்ஃபார்மென்ஸ்:

கியா இவி6 மணிக்கு 260 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதேவேலையில், இக்கார் வெறும் 3.5 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை மிக அசால்டாக பூஜ்ஜியத்தில் இருந்து தொட்டுவிடும். இது ஜிடி லைன் எனும் தேர்வில் கிடைக்கும் இவி6 திறன் பற்றிய விபரம் ஆகும். வழக்கமான இவி6 இன் டாப் ஸ்பீடு மணிக்கு 185 கிமீ ஆகும். இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட 8 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

பாதுகாப்பு அம்சங்கள்:

இந்த எலெக்ட்ரிக் காரில் பன்முக பாதுகாப்பு அம்சங்களை கியா நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. அவற்றில் முக்கியமான சில, 8 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மல்டி கொல்லிசன் பிரேக் அசிஸ்ட், அடாஸ் மற்றும் இன்னும் பல சிறப்பம்சங்கள் இவி6 வழங்கப்பட்டிருக்கின்றன.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

இவி6 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருப்பதிலேயே மிக சூப்பரான அம்சம் எது வென்றால், அது, அடாஸ் தொழில்நுட்பம்தான். இதன் வாயிலாக லேன் கீப்பிங் அசிஸ்டன்ஸ், பிளைன்ட் ஸ்பாட் அலர்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பல சிறப்புகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

இவி6 உற்பத்தி:

கியா நிறுவனம் இக்காரை சிபியூ வாயிலாகவே நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது. மேலும், முதலில் 100 யூனிட்டுகளையே நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே அடுத்த லாட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் கியா களமிறங்கும். மேலும், நிறுவனத்திற்கு சொந்தமான ஆந்திராவில் உள்ள கார் உற்பத்தி ஆலையில் இக்காரை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்.

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் இந்த பத்து விஷயங்கள் தெரிஞ்சா நீங்களே இந்த காரை வாங்க ஆசப்படுவீங்க!..

விலை:

கியா இவி 6 எலெக்ட்ரிக் கார் ரூ. 40 லட்சம் தொடங்கி ரூ. 50 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் இக்காரை சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வருவதே இந்த அதிகபட்ச விலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஒரு வேலை இக்காரின் உற்பத்தி உள் நாட்டிலேயே தொடங்கப்படும் எனில் இதை விட பல மடங்கு குறைவான விலையில் இவி6 விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Here is top ten things about kia ev 6 electric crossover
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X