எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது! பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஐ4 (BMW i4) எலெக்ட்ரிக் காரின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களைக் காட்டிலும் மிக சிறப்பான வசதிகள் கொண்ட மின்சார காராக பிஎம்டபிள்யூ ஐ4 விற்பனைக்கு வந்திருக்கின்றது. மிக சமீபத்திலேயே இக்காரை இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

ஏற்கனவே அந்நிறுவனம் ஐஎக்ஸ் எனும் விலையுயர்ந்த சொகுசு எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தனது இரண்டாவது தயாரிப்பாக ஐ4 மாடலையும் கடந்த மே 26 அன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதுமுகத்திற்கு சற்று குறைவான விலையையே பிஎம்டபிள்யூ நிர்ணயித்துள்ளது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் 1.16 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதைக் காட்டிலும் பல மடங்கு குறைவான விலையிலேயே ஐ4 மாடல் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு ரூ. 69.90 லட்சம் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சிறப்பு வசதிகளில் மற்றும் ரேஞ்ஜை தருவதில் ஐஎக்ஸ் மாடலைக் காட்டிலும் பல சிறந்த எலெக்ட்ரிக் காராக ஐ4 காட்சியளிக்கின்றது. அப்படி என்னென்ன சிறப்பு வசதிகளை அது கொண்டுள்ளது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். குறிப்பாக, ஐஎக்ஸ்-ஐக் காட்டிலும் ஐ4 எந்த வகையில் சிறந்தது என்பதையும் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

இந்தியாவின் முதல் லக்சூரி செடான் ரக எலெக்ட்ரிக் கார்:

ஆமாங்க, இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் சொகுசு வசதிகள் நிறைந்த செடான் எலெக்ட்ரிக் காரே இந்த ஐ4. ஆடம்பரம் மற்றும் நவீன தொழில்நுட்பம் என அனைத்தாலும் இக்கார் நிரப்பட்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம், இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான ஐஎக்ஸ் ஓர் முழுமையான சார்ஜில் 425 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்கும். இதுமாதிரியான மிகப்பெரிய வித்தியாசங்களுடனேயே புதிய ஐ4 சொகுசு கார் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

ஐ4 பேட்டரி மற்றும் சார்ஜ் திறன்:

பிஎம்டபிள்யூ ஐ4 எலெக்ட்ரிக் காரில் பெரிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஐஎக்ஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டிலும் அது பெரியதாகக் காட்சியளிக்கின்றது. 80.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், அதிக விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஐஎக்ஸ் மாடலில் 76.6 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

பெரிய பேக்கை மட்டுமில்லைங்க அதிக வேகத்தில் சார்ஜாகம் திறனும் ஐ4 காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, 210 kw டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஐ4 இல் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 11 kWh வீட்டு சார்ஜர் பாயிண்டில் வைத்து கூட சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதில் வைத்து சார்ஜ் செய்தால் 8.30 மணி நேரம் வரை 10-80 சதவீதம் சார்ஜேற்ற செலவிட வேண்டியிருக்கும்.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

அதுவே, 50 kW அதிவேக மையத்தில் சார்ஜ் செய்தோம் எனில் அதே 10-80 சதவீதத்தை வெறும் 83 நிமிடங்களிலேயே ஏற்றிவிட முடியும். மேலும், இந்த சார்ஜிங் பாயிண்டில் வைத்து வெறும் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் ஏற்கனவே கூறியதைப் போல் 590 கிமீ தூரம் வரை ஐ4 எலெக்ட்ரிக் காரில் பயணிக்க முடியும். இதனை இயக்கத்தை பொருத்து ஏற்றி பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, அதிக வேகம், தேவையற்ற மின்சாதன பொருட்களை ஆஃப் செய்வதன் வாயிலாக கணிசமான அளவு ரேஞ்ஜை ஏற்றிக் கொள்ள முடியுமாம்.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

மின் மோட்டாரின் திறன்:

பிஎம்டபிள்யூ ஐ4 எலெக்ட்ரிக் காரில் 340 எச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 190 கிமீ ஆகும். அதேநேரத்தில் வெறும் 5.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து அது மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

சிறப்பம்சங்கள்:

சிறப்பசங்களின் லோடால் நிரப்பப்பட்ட வாகனமாக பிஎம்டபிள்யூ ஐ4 காட்சியளிக்கின்றது. இக்காரில், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 14.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், லேட்டஸ்ட் தொழில்நுட்பமான ஐ-டிரைவ்8 யுஐ-ம் வழங்கப்பட்டுள்ளது.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஓடிஏ அப்டேட்டுகளைப் பெற இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். மேலும், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், பவர் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் (முன்பக்கத்தில்), ஆம்பியன்ட் கேபின் லைட்டுகள், 360 டிகிரி கார் பார்க்கிங் கேமிரா, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், கார் இணைப்பு தொழில்நுட்பம் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எல்லா மின்சார கார்களை காட்டிலும் இது மிக சூப்பரானது... பிஎம்டபிள்யூ ஐ4 காரின் முக்கிய அம்சங்களை விளக்கும் பதிவு!

நிற தேர்வு:

மினரல் வெள்ளை (Mineral White), பிளாக் சஃபையர் (Black Sapphire) மற்றும் ஸ்கைஸ்கிராபர் கிரே (Skyscraper Grey) ஆகிய மூன்று அட்டகாசமான நிற தேர்வுகளிலேயே ஐ4 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். அதேநேரத்தில் இருக்கைகளில் மாற்று நிறங்களாக கேன்பெர்ரா பீஜ் மற்றும் கோக்னக் ஆகிய கலர் ஸ்கீம்கள் வழங்கப்படும்.

Most Read Articles
English summary
Here is top things to know about bmw i4 e car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X