ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை தேர்வு இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic SUV) காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் எப்படி இருக்கும் என்பது பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic SUV) கார் மாடலை இந்திய சந்தையில் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியது. இக்காரை வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த நிகழ்வு வரும் 20ஆம் தேதி அரங்கேற இருப்பதாக ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அறிமுகத்தின்போது மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

இந்த நிலையிலேயே யுட்யூப் சேனல் ஒன்றின் வாயிலாக எடுக்கப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் காரின் வால்கரவுண்ட் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடி நிலை வேரியண்டையே அந்த யுட்யூப் சேனல் வால்கரவுண்ட் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் இக்காரை கிளாசிக் எஸ் (Classic S) மற்றும் கிளாசிக் எஸ் 11 (Classic S 11) ஆகிய இரு விதமான ட்ரிம்களிலேயே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

இதில் எஸ் என்பதே ஆரம்ப நிலை ட்ரிம் ஆகும். இந்த ட்ரிம்மே தற்போது வால்கரவுண்ட் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ட்ரிம்மில் பெரியளவில் குரோம் பூச்சு அலங்காரப் பொருட்கள் இடம் பெறவில்லை. தெளிவாகக் கூற வேண்டுமானால் குரோம் அலங்காரப் பொருட்களே இல்லாத நிலையில் கிளாசிக் எஸ் ட்ரிம் காட்சியளிக்கின்றது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரில் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட க்ரில்லே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த க்ரில்லிற்கே கவர்ச்சி சேர்க்கு விதமாக மஹிந்திரா நிறுவனம் குரோம் பூச்சு அணிகலனை வழங்கியிருக்கின்றது. ஆனால், உயர்நிலை தேர்வான எஸ்11-இல் மட்டுமே அது வழங்கப்பட்டிருக்கின்றது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

தொடர்ந்து, ஹெட்லைட்டில் எந்த எல்இடி டிஆர்எல்களும் சேர்க்கப்படவில்லை. அங்கு ஹாலோஜன் புரஜெக்டர்களே இடம் பெற்றிருக்கின்றன. பம்பர் மற்றும் பாடி கிளாடிங் ஆகியவை உடல் நிறத்திற்கு ஏற்ற வண்ணத்தில் வழங்கப்படவில்லை. அவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல், பம்பரில் பனி மின் விளக்குகள் இடம் பெறாததையும் நம்மால் வீடியோ வாயிலாகக் காண முடிகின்றது.

அதேவேலையில், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய சின்னம், வீல் கேப்ஸ்கள் அல்லாத 17 அங்குல ஸ்டீல் ரிம், ஃபெண்டரில் டர்ன் இன்டிகேட்டர், கிளாஸ் கருப்பு நிறத்திலான ஓஆர்விஎம்-கள் உள்ளிட்டவற்றை கிளாசிஸ் எஸ் வேரியண்ட் பெற்றிருக்கின்றது. ஆனால், இந்த வேரியண்டில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படவில்லை. காரின் பின் பக்கத்தை பொருத்தவரை, மிகவும் ஹைலைட்டான அம்சமாக 'கிளாசிக்' எனும் பேட்ஜ் பயன்படுத்தப்பட்டிருப்பது இருக்கின்றது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

அடுத்தபடியாக பின் பக்க பிள்ளரில் லேம்ப் பொருத்தப்பட்டிருக்கின்றது. வழக்கமான ஸ்கார்பியோவில் இது இடம் பெற்றிருக்காது. வெளிப்புறத்தைப் போலவே அடிநிலை ஸ்கார்பியோ கிளாசிக் காரின் உட்பக்கம் மிகவும் பேசிக்கான முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியளவில் சிறப்பு வசதிகள் இடம் பெறாத நிலையையே இங்கும் காண முடிகின்றது. ஸ்டியரிங் வீலில் ஒரு கன்ட்ரோல் பட்டனைக்கூட காண முடியவில்லை.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரிலும் மிகப் பெரிய வித்தியாசத்தைக் காண முடிகின்றது. உயர்நிலை தேர்வில் பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாகவும், அடி நிலை தேர்வில் மிக மிக குறைவான அம்சங்களைக் கொண்டதாகவும் அது இருக்கின்றது. இருக்கைகள் ஃபேப்ரிக்கால் உருவாக்கப்பட்டதே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசியை பொருத்தவரை மேனுவலாக கன்ட்ரோல் செய்யும் வகையிலேயே அடிநிலை ஸ்கார்பியோ கிளாசிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

பவர் விண்டோவின் கன்ட்ரோல்கள் சென்டர் கன்சோல் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, கியர் லிவரும் மிக மிக பேஸிக்கான ஸ்டைலிலேயே வழங்கப்பட்டிருக்கின்றது. இம்மாதிரியான அம்சங்களுடனேயே மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறைவான விலையில் இந்த காரை வாங்க விரும்புவோர்களுக்காகவே இவ்வளவு குறைவான அம்சங்களுடன் இந்த வேரியண்ட் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், பெரியளவில் ஆடம்பர வசதிகள் இந்த ஆரம்ப நிலை வேரியண்டில் வழங்கப்படவில்லை என்றாலும், அது பார்ப்பதற்கு அமர்க்களமாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

ஸ்கார்பியோ கிளாசிக் காரின் அடிநிலை வேரியண்ட் இப்படிதான் இருக்கும்! ஆடம்பரமே இல்ல, இருந்தாலும் அமர்க்களமா இருக்கு!

மஹிந்திரா நிறுவனம் மிக சமீபத்திலேயே ஸ்கார்பியோ என் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் வருகை வழக்கமான ஸ்கார்பியோவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அது கூறியிருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஸ்கார்பியோவை, ஸ்கார்பியோ கிளாசிக் எனும் புதிய பெயரில் அது அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய பெயர் மட்டுமில்லைங்க புதிய அவதாரமும் இக்காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இக்காரின் அதிகாரப்பூர்வ வருகை வரும் 12 ஆகஸ்டில் அமைய இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Here is walkaround video of mahindra scorpio classic base model
Story first published: Saturday, August 13, 2022, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X