இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ரசிகர்கள் தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) எஸ்யூவி கார் வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. முந்தைய தலைமுறை ஸ்கார்பியோ கார்தான், தற்போது ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரில் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பெயரை மட்டும் மாற்றாமல், ஸ்கார்பியோ காரிலும் மஹிந்திரா நிறுவனம் நிறைய மாற்றங்களை செய்துள்ளது.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் முன் பகுதியில், புதிய க்ரில் அமைப்பு, மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ, புதிய கிடைமட்டமான எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் புதிய பனி விளக்குகள் அறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய 17 இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்களை, புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் பெற்றுள்ளது.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

உட்புறத்தை பொறுத்தவரை, ஆப்பிள் கார்பியே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் புதிய பெரிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை மஹிந்திரா வழங்கியுள்ளது. மேலும் ரியர் ஏசி வெண்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பவர் விண்டோஸ் ஆகிய வசதிகளும், புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் மாடல்களில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கிடைக்கும். செயல்திறனை பொறுத்தவரை, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி காரில், 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்மில் 130 பிஹெச்பி பவரையும், 1,600-2,800 ஆர்பிஎம்மில் 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரை மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யவுள்ளது. அவை 'S' மற்றும் 'S11' ஆகும். மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் காரை இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

அதாவது ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் இந்த கார் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தாலும் ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விரைவில் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

அதற்கு நாம் வரும் ஆகஸ்ட் 20ம் (August 20) தேதி வரை காத்திருக்க வேண்டும். அன்றைய தினம்தான் மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரை இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் நீளம் 4,456 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,820 மிமீ ஆகவும், உயரம் 1,995 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 2,580 மிமீ ஆகவும் உள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற கார்களுடன், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் போட்டியிடும்.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

அத்துடன் எம்ஜி ஹெக்டர் (MG Hector) மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) போன்ற கார்களுக்கும் இது விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், புதிய ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

இதன்படி தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அருகில் உள்ள நாடுகளான இலங்கை, பூடான், நேபாளம் போன்ற நாடுகளுக்கு ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை ஏற்றுமதி செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு சில நாடுகளுக்கும், ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?

தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரியவந்து விட்டன. விலைகள் மட்டும்தான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதுவும் நமக்கு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தெரிய வந்து விடும். அந்த நாளுக்காக ஸ்கார்பியோ ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Here s everything you need to know about 2022 mahindra scorpio classic
Story first published: Wednesday, August 17, 2022, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X