டெஸ்லாவை தூக்கி சாப்பிடும் இந்திய எலெக்ட்ரிக் கார்... எப்படி தயாரிச்சாங்கன்னு தெரியாம உலகமே மண்டைய சொறியிது!

ப்ராவெயிக் டெஃபி (Pravaig Defy) என்ற புத்தம் புதிய கார் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அத்துடன் ப்ராவெயிக் டெஃபி எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

ஒரு 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் கார் இந்த அளவிற்கு சிறப்பாக இருக்குமா? என அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். ப்ராவெயிக் டெஃபி எலெக்ட்ரிக் காரில், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 90.2 kWh பேட்டரி தொகுப்பும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்லாவை தூக்கி சாப்பிடும் இந்திய எலெக்ட்ரிக் கார்... எப்படி தயாரிச்சாங்கன்னு தெரியாம உலகமே மண்டைய சொறியிது!

இந்த பவர்ட்ரெயின் அதிகபட்சமாக 402 பிஹெச்பி பவரையும் மற்றும் 620 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்ல உதவி செய்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம் பயணம் செய்ய முடியும் என ப்ராவெயிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் நமக்கு எள் அளவும் சந்தேகமில்லை.

ப்ராவெயிக் டெஃபி காரின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கும் சப்போர்ட் செய்யும். ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். மேலும் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது, 2.50 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு உழைக்கும் என ப்ராவெயிக் நிறுவனம் கூறியுள்ளதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் செயல்திறனினும் இந்த எலெக்ட்ரிக் கார் அசத்துகிறது.

டெஸ்லாவை தூக்கி சாப்பிடும் இந்திய எலெக்ட்ரிக் கார்... எப்படி தயாரிச்சாங்கன்னு தெரியாம உலகமே மண்டைய சொறியிது!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பரிமாணங்களை பொறுத்தவரையில், ப்ராவெயிக் டெஃபி காரின் நீளம் 4.96 மீட்டர்களாக உள்ளது. எனவே இந்த காரின் உட்புறத்தில் பயணிகளுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 234 மிமீ-ஆக உள்ளது. எனவே இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

மேலும் டெஃபி எலெக்ட்ரிக் காரில் சொகுசான வசதிகளுக்கும் பஞ்சமில்லை. பெரிய பனரோமிக் மூன் ரூஃப், 15.6 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான பெரிய டிஸ்ப்ளே என ஏராளமான வசதிகளை இந்த காரில் ப்ராவெயிக் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. டிசைனை பொறுத்தவரையில், முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய பம்பரும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த காரின் ஆரம்ப விலை 39.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டெஸ்லாவை தூக்கி சாப்பிடும் இந்திய எலெக்ட்ரிக் கார்... எப்படி தயாரிச்சாங்கன்னு தெரியாம உலகமே மண்டைய சொறியிது!

டெஃபி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ப்ராவெயிக் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. எனவே விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கான தொகை 51 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெஃபி எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ப்ராவெயிக் நிறுவனம் 2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2023ம் ஆண்டின் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே டெலிவரி பணிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அடுத்த ஆண்டு இறுதிக்குள் ப்ராவெயிக் டெஃபி எலெக்ட்ரிக் காரை நாம் இந்திய சாலைகளில் காண முடியும்.

ப்ராவெயிக் டெஃபி போன்ற ஒரு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான். வரும் காலங்களில் இதே போன்று இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கர்வ் எலெக்ட்ரிக் கார் (Tata Curvv EV) மற்றும் அவின்யா எலெக்ட்ரிக் கார் (Tata Avinya EV) ஆகியவை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் கான்செப்ட் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.

வரும் ஆண்டுகளில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு நிலை வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் சந்தையில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருப்பதால், இந்த 2 கான்செப்ட் மாடல்களும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே தென்படுகின்றன. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ்தான் இந்திய சந்தையின் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Here s everything you need to know about pravaig defy electric car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X