இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் Maruti XL6-ம் ஒன்னு.. ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எக்ஸ்எல்6 எம்பிவி கார் ஏன் இந்தியாவின் சூப்பரான எம்பிவி காராக காட்சியளிக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான எம்பிவி ரக கார்களில் எக்ஸ்எல்6 (XL6)-ம் ஒன்று. இந்த காரை 2019-ம் ஆண்டிலேயே முதல் முறையாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. தற்போது, இக்கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

அதிக தொழில்நுட்ப வசதி, மிக தாராளமான இடவசதி என பலவற்றிற்கு பெயர்போன எம்பிவி காராக இது காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல காரணங்களுக்காக இந்த கார் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவை, என்னென்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஓர் 6 சீட்டர் காராகும். சில எக்ஸ்எல்6 கார் பயன்பாட்டாளர்கள் இந்த காரை ஏழு அல்லது எட்டு போர் வரை செல்லும் காராக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு சற்றே இட வசதியைக் கொண்ட வகனமாக எக்ஸ்எல்6 காட்சியளிக்கின்றது. இவ்வாறு ஓர் பெரிய குடும்பத்தினர் பயணிப்பதற்கு ஏதுவான வாகனமாக எக்ஸ்எல்6 இருக்கின்ற காரணத்திற்காவே இந்தியாவில் இவ்வாகனத்திற்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

மாருதி நிறுவனம் இந்த காரை மிகவும் போல்டான தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றது. இதன் போல்டான தோற்றத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே உடல்கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய கிரில், கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை காரின் முகப்பு பகுதிக்கு அதிக கவர்ச்சியை சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

இதேபோல், பக்கவாட்டு பகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் 16 அங்குல டூயல் டோன் நிற அலாய் வீல்கள், கட்டுமஸ்தான பக்கவாட்டு பாடி பேனல்கள், அழகிய சைடு மிர்ரர் மற்றும் கார் கை பிடி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று எக்கசக்க அம்சங்களை காரின் வெளிப்புறத்தை அழகுப்படுத்தும் வகையில் மாருதி பயன்படுத்தியிருக்கின்றது. இதைபோலவே காரின் உட்பக்கத்தையும் மிகவும் நேர்த்தியாக மாருதி வடிவமைத்திருக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அதிகம் பிரீமியம் அம்சங்களுடன் இந்த காரை மாருதி உருவாக்கியிருக்கின்றது. ஸ்மார்ட் பிளே ப்ரோ வசதிக் கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஸ்மார்ட் பிளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடனேயே 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

இந்த கேமிராவைக் கொண்டு பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் ஆகியவற்றை செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, இந்த திரையில் சுஸுகி இணைப்பு வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மிக சிறந்த கார் இணைப்பு அனுபவத்தை வழங்க உதவும். இந்த இணைப்பு வசதியின் வாயிலாக பன்முக அம்சங்களை ரிமோட் வாயிலாக கன்ட்ரோல் செய்ய முடியும். தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பற்பல சிறப்பம்சங்கள் எக்ஸ்எல்6 காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

அந்தவகையில், ஹெட்ஸ்-அப் திரை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஹெட்ஸ்-அப் திரை வாயிலாக கண்ணாடி திரையில், நேவிகேஷன், வேகம், எஞ்ஜின் ஆர்பிஎம் போன்ற முக்கிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சத்தை 2022 பலேனோ காரிலும் மாருதி சுஸுகி வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தனது பிற தயாரிப்புகளில் இந்த அம்சத்தை நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

எக்ஸ்எல்6 காரில், 1.5 லிட்டர் கே15சி டூயல்-ஜெட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் எக்ஸ்எல்6 காரில் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் விற்கப்படும் சூப்பரான எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6-ம் ஒன்னு... ஏன் என்பதற்கான பதிலை பார்க்கலாமா?..

2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலை ரூ. 11.29 லட்சம் ஆகும். அதேவேலையில் இதன் டாப் நிலை வேரியண்ட்டிற்கு ரூ. 14.55 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த காரில் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக 4 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், சென்சார்களுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சங்களாக எக்ஸ்எல்6-இன் அனைத்து வேரியண்டுகளிலும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Here s why maruti xl6 is one of the super mpv cars sold in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X