ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

கார் ஓட்டும்போது நிறைய பேர் ஒரு தவறை செய்து கொண்டுள்ளனர். அந்த தவறை ஏன் செய்ய கூடாது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Recommended Video

Toyota Urban Cruiser Hyryder Tamil Walkaround | ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், கியர் பாக்ஸ், வசதிகள்

கார் ஓட்டும்போது ஒரு கையை ஸ்டியரிங் வீல் மீதும், மற்றொரு கையை கியர் லிவர் மீதும் வைத்து கொண்டு பயணிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

இப்படி கார் ஓட்டுவது உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கலாம். ஆனால் இது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் மற்றும் தொலைதூர பயணங்களிலும் பலர் இவ்வாறு கார் ஓட்டுகின்றனர்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சாலைகளில் கியர்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். எனவே எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக கையை கியர் லிவர் மீதே வைத்து கொண்டிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதேபோல் தொலைதூர பயணங்களின்போது ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்பதற்காக கையை கியர் லிவர் மீது வைத்து கொள்வதாக கூறுகின்றனர்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

ஆனால் இது உங்களுக்கும், உங்களுடன் சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் நல்லதல்ல. காருக்குமே கூட இது நல்லது கிடையாதுதான். கார் ஓட்டுபவரின் 2 கைகளும், ஸ்டியரிங் வீலை பிடித்து கொண்டுதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்னைகள் குறித்துதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

ஒரு கையை கியர் பாக்ஸின் மீது வைத்து கொண்டே கார் ஓட்டும் பழக்கம் உங்களிடம் இருந்தால், உங்கள் காரின் கியர் பாக்ஸில் சேதம் ஏற்படும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் கியர் பாக்ஸ் எப்படி வேலை செய்கிறது? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கியர் பாக்ஸிற்கு உள்ளே, 'கியர் செலக்டர் ஃபோர்க்' (Gear Selector Fork) இருக்கும்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

கியர் ஷிஃப்ட்டை (Gear Shift) இதுதான் கியர் பாக்ஸின் மற்ற பகுதியுடன் இணைக்கிறது. நீங்கள் கியரை மாற்றும்போது, கியர் லிவர் மூலம் என்ன கியரை தேர்வு செய்தீர்களோ, அந்த கியர் விழுவதற்கு 'கியர் செலக்டர் ஃபோர்க்' உதவி செய்கிறது. நீங்கள் கியர் லிவர் மீது தேவையே இல்லாமல் கையை வைத்து கொண்டே இருந்தால், நீங்கள் கியரை மாற்றாத சமயங்களிலும், 'கியர் செலக்டர் ஃபோர்க்' எப்போதும் 'ரொட்டேட்டிங் காலர்' உடன் (Rotating Collar) தொடர்பில் இருக்கும் சூழ்நிலை உருவாகும்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

இதன் காரணமாக 'கியர் செலக்டர் ஃபோர்க்' மற்றும் 'ரொட்டேட்டிங் காலர்' என இரண்டுமே உரிய காலத்திற்கு முன்னரே சேதம் அடைந்து விடும். அதாவது பல வருடங்கள் உழைக்க வேண்டிய அவற்றில் மிகவும் குறுகிய காலத்திலேயே பிரச்னைகள் ஏற்படும். இந்த பிரச்னையை சரி செய்வதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு உருவாகும்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

எனவேதான் ஒரு கையை ஸ்டியரிங் வீல் மீதும், மற்றொரு கையை கியர் லிவர் மீதும் வைத்து கொண்டு கார் ஓட்டும் பழக்கம் இருந்தால், அதனை விட்டு விடுங்கள் என்கிறோம். கார் ஓட்டும்போது இரண்டு கைகளும் ஸ்டியரிங் வீல் மீது இருக்க வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் பாதுகாப்பு. நீங்கள் கார் ஓட்டி கொண்டிருக்கும்போது, சாலைகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

அதாவது உங்கள் கார் முன்னே திடீரென மற்றொரு காரோ அல்லது இரு சக்கர வாகனமோ வரலாம். திடீரென யாராவது சாலையை கடக்கலாம். எப்போது என்ன நடக்கும்? என சொல்ல முடியாது. எனவே 2 கைகளும் எப்போதும் ஸ்டியரிங் வீல் மீது இருந்தால்தான் பாதுகாப்பு. அப்போதுதான் உங்களால் காரை சரியாக கட்டுப்படுத்த முடியும்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

ஒரு சிலர் தங்களின் கார் ஓட்டும் திறன்கள் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளனர். என்ன நடந்தாலும் ஒரு கை மூலமே காரை கட்டுப்படுத்தி விட முடியும் என்பது அவர்களின் கருத்து. ஆனால் முன்னெச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வதுதான் பாதுகாப்பானது என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு கை மூலம் ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்துவது என்பது உங்களுக்கு மட்டுமல்ல, சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் ஆபத்தானதுதான்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

திடீரென சாலை விபத்து நிகழ்ந்தால், உங்களுடன் சேர்த்து, சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், 2 கைகளும் ஸ்டியரிங் வீலின் மீது இருந்தால் மட்டுமே, காரை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திருப்ப முடியும். ஒரு கை கியர் லிவரின் மீது இருக்கும்பட்சத்தில், உங்களால் உடனடியாக செயல்பட முடியாத சூழல் உருவாகலாம்.

ஒரு கையை ஸ்டியரிங் மீதும், இன்னொரு கையை கியர் லிவர் மீதும் வெச்சுகிட்டு கார் ஓட்றீங்களா? பர்ஸ் பழுக்க போகுது!

கார் ஓட்டும்போது ஒரு கையை கியர் லிவர் மீது வைத்து கொள்ளலாமா? என்பது நீண்ட காலமாக விவாதமாக இருந்து வருகிறது. ஒரு சிலர் இதனை ஆதரிக்கவே செய்கின்றனர். ஆனால் இந்த செய்தியை படித்த பின்னர், அவர்கள் தங்கள் கருத்தை மாற்றி கொள்வார்கள் என்று நம்புகிறோம். பாதுகாப்பை அதிகரித்து கொள்ள வேண்டும் என்றாலும், வீண் செலவை குறைக்க வேண்டும் என்றாலும், 2 கைகளையும் ஸ்டியரிங் வீல் மீது வைத்து கொண்டு காரை ஓட்டுங்கள்.

Most Read Articles
English summary
Here s why you shouldnt rest your hand on the gear lever
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X