புதிய ஹோண்டா சிட்டி இ:எச்இவி காரை தாரளமா வாங்கலாம்!.. ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

புதிதாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் (Honda City e:HEV Hybrid) தாராளமாக வாங்கலாம் என கூறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகள் அக்காரில் வழங்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது பற்றிய தகவலையேக் கீழே உள்ள பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்து காணலாம்.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV Hybrid) இந்திய சந்தையில் நேற்றைய (மே 5) தினம் விற்பனைக்கு அறிமுகமானது. அறிமுக விலையாக இக்காருக்கு ரூ. 19.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை ஆகும்.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

ஹோண்டா சிட்டி இ:எச்இவி காருக்கு அதிகபட்ச விலை நிர்ணயிப்பதற்கு அக்காரில் இடம் பெற்றிருக்கும் மிக உயரிய மற்றும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளும், பிரீமியம் அம்சங்கள் மட்டுமே காரணமாக அமைந்துள்ளன. ஆமாங்க, வழக்கமான சிட்டி கார் மாடலைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வசதிகளை தாங்கிய வாகனமாக சிட்டி இ:எச்இவி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இந்த அம்சங்களே இக்காரை என்ன விலையில் இருந்தாலும் வாங்கலாம் என கார் ஆர்வலர்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அப்படி என்னென்ன அம்சங்களை புதிய ஹோண்டா சிட்டி இ:எச்இவி கார் பெற்றிருக்கின்றது, குறிப்பாக, இக்காரை மிக தாரளமாக இந்த விலைக் கொடுத்து வாங்கலாம் என கூறுமளவில் என்ன மாதிரியான அம்சங்களை ஹோண்டா வழங்கியுள்ளது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

ஹோண்டா சிட்டி இ:எச்இவி காரில் பிரத்யேக ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை முழு அல்லது ப்யூர் ஹைபிரிட் சிஸ்டம் என கூறலாம். இவ்வாறு கூறுவதற்கு காரில் இரு மின் மோட்டார்களும், அவற்றிற்கான மின்சார திறனை வழங்க ஓர் பேட்டரி வழங்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. இந்த பேட்டரி ரீஜெனரேஷன் பிரேக் தொழில்நுட்பம் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளும். நகர்ந்துக் கொண்டிருக்கும் வாகனத்தின் இயக்கத்தை வைத்து சார்ஜ் செய்து கொள்வதே ரீஜெனரேஷன் பிரேக் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இந்த அம்சத்தையே புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி இக்காரில் புதிய ஹோண்டா சென்சிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஓர் உயர் பயன்பாட்டு வசதிக் கொண்ட கேமிரா காரின் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இது பரந்த பார்வை திறன் கொண்டது. இந்த பார்வை திறன் வாயிலாக சாலையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அது கண்டறியும். அவ்வாறு அது சாலையில் நிகழ்வைக் காணும்போது ஏதேனும் இடையூறை அளிக்கும் வகையில் சம்பவம் அரங்கேறும் எனில் அதுகுறித்த எச்சரிக்கையை நொடிப்பொழுதில் டிரைவருக்கு வழங்கும். ஆகையால், விபத்து போன்ற அசம்பாவிதங்களை உடனுக்குடன் தவிர்த்துக் கொள்ள முடியும்.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இதுமட்டுமின்றி, சிஎம்பிஎஸ் எனப்படும் கொல்லிசன் மிடிகேஷன் பிரேக்கிங் சிஸ்டம் (Collision Mitigation Braking System), அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் (Adaptive Cruise Control), ரோட் டிபார்ச்சர் மிடிகேஷன் (Road Departure Mitigation), லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் (Lane Keeping Assist System) மற்றும் தானாகவே உயர் பீமிற்கு மாறும் ஹெட்லைட் ( Auto High-Beam) உள்ளிட்ட அம்சங்களும் புதிய சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 37 வகையான ஹோண்டா கன்னெக்ட் அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

சிட்டி இ:எச்இவி காரில் இரு மின் மோட்டார்கள் வழங்கப்பட்டிருப்பதாக மேலே கூறியிருந்தோம். அதில், ஒன்று ஐஎஸ்ஜி (integrated starter generator) கருவியாக செயல்படும். மற்றொன்று முன் பக்க வீலுக்கு இயக்க திறனை வழங்கும். இத்துடன், சேர்த்து 1.5 லிட்டர், 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் அட்கின்சன் சைக்கிள் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இந்த அனைத்து மோட்டார்களும் இணைந்து காருக்கு 126 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.5 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த அம்சங்கள்தான் ஹோண்டாவின் இப்புதி சிட்டி இ:எச்இவி காரை மிக தாரளமாக ரூ. 19.50 லட்சத்திற்கு வாங்கலாம் என கூறும் வகையில் அமைந்துள்ளன. அதேவேலையில், தற்போது விற்பனையில் இருக்கும் இசட்எக்ஸ் சிவிடி வேரியண்டைக் காட்டிலும் ரூ. 4.50 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இதுமட்டுமின்றி ஹோண்டா சிட்டி இ:எச்இவி அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராகவும் காட்சியளிக்கின்றது. 6 ஏர் பேக்குகள், பன்முக பார்வை திறன் கொண்ட ரியர் கேமிரா, வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இதுமட்டுமா தொழில்நுட்ப வசதியிலும் இக்கார் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. அமேசான் அலெக்ஸா வாயிலாக இயங்கக் கூடிய குரல் கட்டளை வசதி, கூகுள் அசிஸ்டண்ட், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் திரை, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ பிரேக் ஹோல்ட் ஆகிய அம்சங்களும் இ:எச்இவி சிட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன.

உயரிய தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி... இந்த காரை ஏன் வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் இதோ!

இவற்றை பார்த்த பின்னரும் இக்காரை வாங்க இருக்க முடியுமா என ஹோண்டா சிட்டி பிரியர்களும், சொகுசு கார் விரும்பிகளும் கூற தொடங்கியிருக்கின்றனர். இவர்களைக் கூடுதலாக கவரும் வகையில் நிறுவனம் சில சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதாவது, மூன்று ஆண்டுகள் எல்லையில்லா கிலோமீட்டர் வாரண்டி காருக்கும், லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிமீ வாரண்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் ஹோண்டா அறிவித்துள்ளது.

குறிப்பு: ஹோண்டா சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் காரை என்ன மாதிரியான காரணங்களுக்காக வாங்கலாம் என்பதையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதை வாங்கலாமா?, வேண்டாமா? என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda #honda city
English summary
Here some important details about honda city e hev hybrid
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X