இ-கார் உற்பத்திக்காக மஹிந்திரா தயார் செய்திருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்காக இங்ளோ (INGLO) எனும் புதிய பிளாட்பாரத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தின் வாயிலாக என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட கார்களை எல்லாம் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஒட்டுமொத்தமாக ஐந்து பது எலெக்ட்ரிக் கார்களை நேற்றைய தினம் (ஆகஸ்டு 15) அறிமுகம் செய்தது. அனைத்து எலெக்ட்ரிக் கார்களும் எஸ்யூவி ரக வாகனங்களாகும். இந்த ரக வாகன தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக மஹிந்திரா விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தான் ஒரு சிறந்த எஸ்யூவி வாகன உற்பத்தியாளர் என்பதை கூறும் விதமாக அந்நிறுவனம் 5 புதுமுக எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை உருவாக்கியிருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

இந்த எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து மின் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக தயார் செய்யப்பட்டிருக்கும் இங்ளோ (INGLO) எனும் பிளாட்பாரத்தை நிறுவனம் வெளியீடு செய்தது. இந்த ஓர் மிக சிறந்த பிளாட்பாரம் ஆகும். இதன் வாயிலாக நவீன மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க முடியும். இதுமட்டுமின்றி, தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாற்ற நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்இபி கட்டமைப்பையும் பயன்படுத்த இருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் மின்சார வாகனங்களை தயாரிக்க கட்டமைத்திருக்கும் பிளாட்பாரம் ஆகும். ஆகையால், புதிய இங்ளோ பிளாட்பாரத்தின்கீழ் தயாரிக்கப்பட இருக்கும் மஹிந்திரா மின்சார கார்கள்மீதான எதிர்பார்ப்பு தற்போது இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. இதற்கேற்பவே மஹிந்திரா இங்ளோ பிளாட்பாரத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்த தளம் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே தொடர்ந்து பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

எந்த மாதிரியான அளவுள்ள வாகனங்களை இந்த பிளாட்பாரத்தில் உருவாக்க முடியும்:

இங்ளோ வெறும் எஸ்யூவி ரக கார் வாகன உற்பத்திக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும் தளம் ஆகும். இதன் வாயிலாக 4,368 மிமீ முதல் 4,735 மிமீ வரையிலான வாகனங்களை உருவாக்க முடியும். இதேபோல், 2,762 மிமீ முதல் 2,775 மிமீ வரையிலான வீல் பேஸ் கொண்ட வாகனங்களையும் இந்த பிளாட்பாரத்தில் உருவாக்க முடியும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அதிக இட வசதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பிரமாண்ட தோற்றம் கொண்ட வாகனங்களை இந்த தளத்தின் வாயிலாக மஹிந்திரா நிறுவனம் உருவாக்க இருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

பேட்டரி பேக் விபரம்:

இந்த தளத்தில் வைத்து உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களில் பெரிய அளவுள்ள பேட்டரி பேக்குகளே இடம் பெற இருக்கின்றன. செல்-டூ-பேக் எனும் வழக்கமான தொழில்நுட்பம் கொண்ட பேட்டரி பேக்கே இந்த தளத்தில் உருவாக்கப்பட உள்ள எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. பிளேட் மற்றும் ப்ரிஸ்மேடிக் செல் இந்த ரக பேட்டரி பேக்குகளே பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஆனால், இவை அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

அதேவேலையில், அவை அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. சமீப காலமாக மின்சார வாகன தீ விபத்து சம்பவம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு பேட்டரி பேக்கில் ஏற்படும் அதிக வெப்பநிலையே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான ஓர் அவலத்தை தவிர்க்கும் பேட்டரி பேக்கே வரவிருக்கும் மஹிந்திரா கார்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி அதிக வேகத்தில் சார்ஜாகுதல், 450 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜ் திறன் ஆகிய திறன்கள் கொண்ட எலெக்ட்ரிக் கார்களே இந்த பிளாட்பாரத்தில் வைத்துக் கட்டமைக்கப்பட உள்ளன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

மோட்டார் திறன்:

அதிக பேட்டரி திறன் கொண்ட வாகனங்கள் மட்டுமில்லைங்க. அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் கார்களும் இந்த பிளாட்பாரத்தில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி, பின் பக்க வீல் இயக்கம் கொண்ட வாகனம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் கொண்ட வாகனம் என சிறப்பு வசதிகள் கொண்ட வாகனங்களும் இந்த பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட இருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

109 எச்பி முதல் 340 எச்பி வரையிலான திறனை வெளியேற்றக் கூடிய மின்சார கார்களே இங்ளோ பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட இருக்கின்றன. அனைத்து வீல்கள் இயக்கம் வசதிக் கொண்ட மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களே அதி-திறனை வெளியேற்றக் கூடியதாக உருவாக உள்ளன. இதுமட்டுமின்றி, வெறும் 5 முதல் 6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட வாகனங்களும் இந்த தளத்தில் உருவாக்கப்பட இருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

பாதுகாப்பு:

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பிற்கு பெயர்போனவையாக இருக்கின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணமே எக்ஸ்யூவி300. இதுமட்டுமின்றி, தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மாடல்களும் அதிக பாதுகாப்பானவை என்ற மகுடத்தைச் சூடியிருக்கின்றன. இதுமாதிரியான ஓர் தயாரிப்பையே மஹிந்திரா நிறுவனம் புதிய இங்ளோ பிளாட்பாரத்தில் வைத்து தயாரிக்க இருக்கின்றது. அந்தவகையில், பேட்டரி பாதுகாப்பு சிஸ்டம், ஸ்ட்ரென்தான போரோன் ஸ்டீல், அடாஸ் அம்சம் மற்றும் மிக சூப்பரான பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

சிறப்பம்சங்கள்:

தற்போதைய புதுமுக கார்களில் இடம் பெறுவதைப் போன்று நவீன கால அம்சங்கள் பல வரவிருக்கும் மஹிந்திரா கார்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்காகவே நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்இபி தளத்தையும் பயன்படுத்த இருக்கின்றது. ஆகையால், இதுவரை நிறுவனத்தின் தயாரிப்புகளில் நாம் கண்டிராத அம்சங்கள் பல வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அதிக பிரீமியம் அம்சங்கள் கேபின், பிள்ளர்-டூ-பிள்ளர் ஸ்கிரீன்கள், ஹெட்ஸ்-அப் திரை, நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

புதிய பிராண்ட்:

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி மற்றும் புதுமுக பிஇ ஆகிய பிராண்டுகளின் கீழே விரைவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதில், பிஇ என்பது புத்தம் புதிய பிராண்டாகும். இதன் கீழ் மூன்று கார்களையும், எக்ஸ்யூவி பிராண்டின்கீழ் இரு கார்களையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவற்றையே நேற்றைய தினம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக மஹிந்திரா உருவாக்கியிருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!

இவற்றில் முதலில் எக்ஸ்யூவி.இ8 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் காரே முதலில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதன் வருகை டிசம்பர் 2024இல் அரங்கேறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே, நிறுவனத்தின் புதிய பிளாட்பாரம் இங்ளோவில் வைத்து தயாரிக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் காரும்கூட. இதைத்தொடர்ந்தே, அடுத்தடுத்த வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Most Read Articles
English summary
Here we explained about mahindra s new ev platform inglo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X