சிட்ரோன் சி3 காரை ரூ.60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்! மாத தவணை ரூ.11,993ல இருந்து ஸ்டார்ட்! முழு விபரம்!

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் சிட்ரோன் சி3 (Citroen C3) காருக்கு எவ்வளவு முன்தொகை கட்ட வேண்டும்?, என்ன மாதிரியான இஎம்ஐ திட்டத்தில் வாங்கலாம் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

இந்தியாவின் மலிவு விலை கார்களின் பட்டியலில் தன்னுடைய தயாரிப்பும் பங்களிக்கும் விதமாக பிரபல கார் உற்பத்தி நிறுவனம் சிட்ரோன் (Citroen), அதன் சி3 (C3) கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த கார் டெல்லியில் ரூ. 6,27,070 என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது ஆன்-ரோடு விலையாகும்.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

இத்தகைய விலைக் குறைவான காரின் பக்கமே மக்களை ஈர்க்கும் பணியில் சிட்ரோன் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் குறைவான முன் தொகை மற்றும் ஈசி இஎம்ஐ ஆகிய திட்டங்களை சிட்ரோன் அறிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக சிட்ரோன் சி3 காரை இந்திய சந்தையில் சக்சஸ்ஃபுல் வாகனமாக மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

ஒரு வேலை நீங்கள் இந்த சிட்ரோன் சி3 காரை வாங்கும் திட்டம் போட்டிருந்தால், எவ்வளவு முன்தொகை கட்ட வேண்டும்?, எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்? என்பதை நாங்கள் இங்கு சொல்லுகின்றோம். டெல்லி ஆன்-ரோடு விலையின் அடிப்படையிலேயே இந்த தகவலை நாங்கள் வெளியிடுகின்றோம் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

சிட்ரோன் சி3 கார் லைவ் மற்றும் ஃபீல் என இரு ட்ரிம்களிலும், 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பையர்டு மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் டர்போ மோட்டார் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், லைவ் ட்ரிம்மை வாங்க போகின்றீர்கள் என்றால் அதற்கு ரூ. 60 ஆயிரம் முன் தொகை செலுத்த வேண்டியிருக்கும். இது ஒட்டுமொத்த விலையில் இருந்து பத்து சதவீதம் ஆகும். இதையே முன்தொகையாக வசூலிக்கப்படுகின்றது.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

மாதத் தவணையாக ரூ. 11,993 செலுத்த வேண்டியிருக்கும். இது ஐந்தாண்டுகளுக்கான இஎம்ஐ திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு 9.8 சதவீதம் இன்டரஸ்ட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில், நீங்கள் வாங்கவிருக்கும் லைவ் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வு கொண்ட சி3 காரின் ஆன்-ரோடு விலை ரூ. 6,27,070 ஆகும்.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

இதுபோலவே அடுத்தடுத்த தேர்வுகளுக்கும் காரின் விலையில் இருந்து பத்து சதவீதம் முன்தொகையாக பெறப்பட்டு, இஎம்ஐ-யில் வழங்கப்படுகின்றது. இதுகுறித்த விபரத்தைப் பட்டியலில் பார்க்கலாம்.

வேரியண்ட்

ஆன்-ரோடு விலை

(டெல்லி)

வட்டி விகிதம் (estimated) தவணை ஆண்டு காலம் முன்தொகை EMI
1.2-litre NA Petrol MT
Live ₹6,27,070 9.8% 5 years ₹60,000 ₹11,993
Feel ₹7,46,011 9.8% 5 years ₹75,000 ₹14,191
1.2-litre Turbo Petrol MT
Feel ₹9,04,339 9.8% 5 years ₹90,000 ₹17,222
சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

சிட்ரோன் சி3 ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் விலை குறைவான வாகனமாக விற்பனைக்கு வந்திருந்தாலும் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. எனவேதான் இக்கார் டாடா பஞ்ச், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்றவற்றிற்கு சிறந்த போட்டியாளனாகப் பார்க்கப்படுகின்றது.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

சிட்ரோன் நிறுவனம் இக்காரை 90 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு பாகங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே நிறுவனத்தால் யாரும் எதிர்பார்த்திராத மலிவு விலையில் விற்பனைக்கு வழங்க முடிந்திருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ.5.70 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

சிட்ரோன் சி3 காரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒயர் லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே சப்ஃபோர்ட் உடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை வாயிலாக எக்கசக்க சிறப்பு வசதிகளை சி3 பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், மற்ற கார்களில் இருந்து இந்த சி3 காரை மாறுபட்டுக் காட்சியளிக்க வைக்கும் விதமாக இக்காரின் ஜன்னல்களை திறக்கும் பவர் பட்டன்கள் கியர் லிவருக்கு பின்னால் வழங்கப்பட்டிருக்கின்றது.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

பொதுவாக, இந்த பட்டன்கள் கதவுகளில் வழங்கப்படும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாக சி3 விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் இரண்டு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் சி3 விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஆரம்ப நிலை வேரியண்டில் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பையர்டு, 3 சிலிண்டர், ப்யூர்டெக் 82 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த மோட்டார் வழங்கப்படுகின்றது.

சிட்ரோன் சி3 காரை ரூ. 60 ஆயிரம் டவுண்பேமென்டிலேயே வாங்கலாம்... மாத தவணை ரூ. 11,993ல இருந்து ஸ்டார்ட்... முழு விபரம்!

இதற்கு அடுத்தபடியாக டர்போ மோட்டார் தேர்வு உயர்நிலை சி3 தேர்வில் வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜினின் ப்யூர்டெக் 110 ரக மோட்டாராகும். அதிக பவரை வெளியேற்றும் வகையில் இந்த மோட்டார் ட்யூன் அப் செய்யப்பட்டிருக்கும். இது 108.4 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
v
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Here we explained citroen c3 loan emi down payment details
Story first published: Wednesday, July 27, 2022, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X