இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்கு தான் வரும்... அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல்

இந்தியாவில் அதிகமான காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் இந்த தீபாவளிக்குக் காரை புக் செய்தால் 2024 தீபாவளிக்குத் தான் டெலிவரியாகும் வகையிலான கார்கள் கூட இருக்கின்றன. இது குறித்து விரிவாக காணலாம்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

இந்தியாவில் தினமும் ஏராளமான கார்கள் விற்பனையாகி வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் கார் வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. இந்த கனவை நினைவாக்க அவன் சிறுக சிறுக பணத்தைப் பணத்தை சேமித்து கார்களை வாங்குகிறான். ஏராளமான கார்கள் மார்கெட்டில் இருந்தாலும் சில குறிப்பிட்ட கார்களுக்கு தான் மக்கள் மத்தியில் டிமாண்ட் அதிகம். இந்த கார்களை வாங்க வேண்டும் என்றால் மக்களுக்குப் பணம் மட்டும் இருந்தால் போதாது, மாறாகப் பொறுமையும் மிக அவசியம்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

சில குறிப்பிட்ட நிறுவனங்களில் குறிப்பிட்ட கார்களை இன்று புக் செய்தாலும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளி காலம் என்பதால் பலர் இந்த நேரத்தில் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் இந்த மாதங்களில் விற்பனை மிகவும் அமோகமாக இருக்கும். இந்த பதிவில் நாம் இந்த தீபாவளிக்கு எந்த கார்களை எல்லாம் புக் பண்ணா நினைத்தால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என இந்த அக்டோபர் மாத அதிக கால காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

இந்த பட்டியலில் 10 இடத்தில் 3 கார்கள் இருக்கின்றன. மாருதி கிராண்ட் விட்டாரா, மாருதி பலேனோ, டொயோட்டா ஹைரைடர், இதில் மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹை ரைடர் இந்த இரு கார்களும் மாருதி மற்றும் டொயோட்டா சேர்ந்து உருவாக்கிய இன்ஜினை கொண்டு இயங்குகிறது. மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச் பேக் காராக விற்பனையாகிறது. இந்த மூன்று கார்களையும் வாங்க வேண்டும் என்றால் இன்று புக் செய்தாலும் 5-5.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

அடுத்த இடத்தில் மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா தார் ஆகிய கார்கள் இருக்கின்றனர். மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி காராக இருக்கிறது. மஹிந்திரா தார் கார் ஆஃப் ரோடிங்கான காராக இருக்கிறது. இந்த இரண்டு கார்களும் வேறு வேறு செக்மெண்டில் இருக்கின்றன. இருந்தாலும் இந்த இரண்டு காருக்கும் 6 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இதில் எர்டிகா காரின் சிஎன்ஜின வேரியன்ட் காருக்கு மட்டும் 10 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

அடுத்தாக இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார். இந்த கார் பல தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஹூண்டாய் நிறுவனத்தின் காராக இருக்கிறது. இந்த காரின் காத்திருப்பு காலம் என்பது 7 மாதம் ஆகும். சமீபத்தில் தான் இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்ததால் இந்த காருக்கான புக்கிங் குவிந்துள்ளது. அதனால் அவர்களுக்கு டெலிவரி செய்ய ஹூண்டாய் இந்த காரின் தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

அடுத்த இடத்திலும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கார் தான் இருக்கிறது. இந்த கார் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் கார். ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார் தான் இது. இந்த காரை இன்று புக் செய்தால் 9 மாதம் வரை இந்த காருக்காக காத்திருக்க வேண்டியது வரும். இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் பலர் இந்த காரை தொடர்ந்து புக் செய்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

அடுத்தாக இந்த இருப்பது கியா நிறுவனத்தின் சோனட் கார். இந்நிறுவனம் இந்தியாவிற்குள் வந்து சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த கியா சோனட் காரை இன்று புக் செய்தால் 11 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியது உள்ளது. அதாவது, இந்த தீபாவளிக்கு இந்த காரை புக் செய்தால் அடுத்த தீபாவளிக்குத் தான் இந்த கார் கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய தகவல்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

அடுத்தாக மஹிந்திரா நிறுவனத்தின் கார் இருக்கிறது. அதிக காத்திருப்பு காலத்திற்குப் பெயர் போன நிறுவனம் மஹிந்திரா இந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் அதிக தொழிற்நுட்ப அம்சங்களும் அதிக மக்களால் விருப்பப்படும் கார். இந்த காரின் ரோடு பிரஸென்ஸூம் அருமையாக இருக்கிறது. இன்று இந்த காரை புக் செய்தால் 16 மாதங்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும். இந்த தீபாவளிக்கு புக் செய்தால் அடுத்த தீபாவளியைத் தாண்டி 2024 பொங்கலுக்கு இந்த காரை வாங்க முடியும்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

கியா நிறுவனத்தின் மற்றொரு கார் தான் அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பிலேயே அதிக மக்களால் விருப்பப்படும் கார் என்றால் கியா கேரன்ஸ் கார் தான். இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாகியுள்ளது. குடும்பத்துடன் செல்ல ஏற்ற கார் என்பதால் பலர் இந்த காரை வாங்க விரும்புகின்றனர். இதனால் புக்கிங்கும் குவிகிறது. இந்த காருக்கான காத்திருப்பு காலம் 20 மாதமாகும்.

இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்குத் தான் வரும் . . . அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களின் பட்டியல் இதோ . . .

கடைசியாக மீண்டும் மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு கார் தான் இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஸ்கார்பியோ என் கார் தான் இது. இந்நிறுவனம் பழைய ஸ்கார்பியோ காரின் பெயரை ஸ்கார்பியோ கிளாசிக் என்ற மாற்றிவிட்டு இந்த காரை ஸ்கார்பியோ என் என்ற தனிப் பெயரில் விற்பனை செய்கிறது. இந்த காரில் பல புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்திருப்பதால், ஸ்கார்பியோ ரசிகர்களின் பார்வை எல்லாம் இந்த காரின் மீது சென்று விட்டது. இந்த காருக்கு தற்போது 21 மாதங்கள் வரை சென்றுவிட்டது. அதாவது இந்த தீபாவளிக்கு புக் செய்தால் 2024 தீபாவளிக்குள் இந்த கார் வந்துவிடும் எனச் சொல்லலாம்.

Most Read Articles
English summary
Highest car waiting period list in october 2022
Story first published: Wednesday, October 5, 2022, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X