எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

இந்தியா மட்டுமின்றி, உலகளவில் ஒரு காலத்தில் சாலைகளில் செடான் கார்களே உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று சாலைகளில் எஸ்யூவி & ஹேட்ச்பேக் கார்கள் அதிகளவில் தென்படுகின்றன. அதிலும் குறிப்பாக, எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் நல்ல அளவில் வளர்ந்துள்ளது.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

மைக்ரோ, சப்-காம்பெக்ட், காம்பெக்ட் மற்றும் முழு-அளவு என வெவ்வேறான அளவுகளில் எஸ்யூவி கார்களை நமது இந்திய வாடிக்கையாளர்கள் வாங்க எப்போதோ ஆரம்பித்துவிட்டனர். உலகளவில் அதிகளவில் எஸ்யூவி கார்கள் விற்பனையாகும் 8வது நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டிலும் ஏறக்குறைய 1 மில்லியன் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

இதற்கான கணக்கெடுப்பு இப்போது நடத்தப்பட்டது கிடையாது, கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு 2019இல் நடத்தப்பட்டது ஆகும். இந்த 3 வருடங்களில் இந்த எண்ணிக்கை சில லட்சங்கள் கூட அதிகரித்திருக்கலாம். செடானில் இருந்து மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு உயரம் அதிகம் கொண்ட கார்களின் பக்கம் சென்றது? இதற்கான பதிலை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

எங்களுக்கு தெரிந்தவரையில், இந்தியாவில் முதல் எஸ்யூவி மாடலாக ரெனால்ட் டஸ்டர் 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் இந்திய சந்தையில் வலுவாக கால்பதிக்க தற்போதுவரையிலும் போராடி கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் டஸ்டர் எஸ்யூவி சுமார் 10 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் உள்ளது. ஏனெனில் நம் நாட்டில் எஸ்யூவி கார்களுக்கான சந்தை விரிவடைய ஆரம்பித்ததற்கு டஸ்டர் மற்றும் அதன் ஸ்டைலிஷான தோற்றத்தினை முக்கிய காரணமாக சொல்லலாம்.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

அந்த சமயத்தில் டஸ்டரின் தோற்றத்தினை இந்தியர்கள் சற்று வித்தியாசமாக பார்த்தார்கள் என்பது உண்மையே. இதனை தொடர்ந்து, அடுத்த 2013ஆம் ஆண்டில் ஃபோர்டு அதன் பிரபலமான ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியது. இதுவும் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் வேகமாக பிரபலமாகியதற்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் மாடலில் டர்போ என்ஜின்களை அறிமுகப்படுத்தி அதன் பலத்தை மேலும் அதிகப்படுத்தியது.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

நன்மைகளை பொறுத்தவரையில், செடான், ஹேட்ச்பேக்குகளை காட்டிலும் எஸ்யூவி மாடல்கள் அளவில் பெரியது. இதனால் உட்புற கேபின், பெரும்பான்மையான எஸ்யூவி கார்களில் சவுகரியமானதாக விளங்குகிறது. தயாரிப்பு நிறுவனங்களாலும் எஸ்யூவி கார்களின் உட்புறத்தை விசாலமானதாக வடிவமைக்க முடிகிறது. இதனால் உட்புறத்தில் விருப்பத்திற்கேற்ப கூடுதல் வசதிகளையும் சேர்க்க முடிகிறது.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

மேலும் பயணத்தின்போது சாலையில் எஸ்யூவி கார்களின் நிலைப்பாடும் கம்பீரமானதாக உள்ளது. இது பலத்தரப்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு வெகுவாக பிடித்துள்ளது. அதிலிலும் பின் சக்கரத்தை கொண்ட ஈக்கோஸ்போர்ட்டின் நிலைப்பாடு இன்னும் சிறப்பானதாக உள்ளது. இதனால் தான் ஃபோர்டு இந்திய சந்தையை விட்டு வெளியேறினாலும், ஈக்கோஸ்போர்ட் மீண்டும் கொண்டுவரப்படாத என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

எஸ்யூவி மாடல்களில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் பெரிய அளவிலான நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின்கள் மற்றும் டர்போ என்ஜின்கள் மூலமாக ஆற்றல்மிக்கவைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய டர்போ கார்களில் பொருத்தமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளினால் போதுமான மைலேஜும் கிடைக்கிறது. உதாரணத்திற்கு, ஹூண்டாய் நிறுவனத்தின் ஐஎம்டி (iMT).

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

மேலும், எஸ்யூவிகளில் சிறந்த க்ரவுண்ட் க்ளியரென்ஸையும் தயாரிப்பு நிறுவனங்களால் வழங்க முடிகிறது. இது நம் இந்திய சாலைகளுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய விஷயமாகும். ஆக மொத்தத்தில், கூடுதல் ஸ்போர்டியான என்ஜினை பெறும் எஸ்யூவி கார்களில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியும் நன்கு பெரியதாக வழங்கப்பட்டால், தொலைத்தூர பயணங்களுக்கு தயாராகிவிடலாம்.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

அதேநேரம் அளவு பெரியதாகினால் உண்டாகும் கூடுதல் எடையையும் என்ஜின் தான் இழுத்து செல்ல வேண்டியதாக இருக்கும். இதன் விளைவாக காரின் மைலேஜ் குறையும். இதனாலேயே முழு-அளவு எஸ்யூவி கார்களை காட்டிலும் அளவில் சற்று சிறிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர். ஏனெனில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களிலேயே சிறந்த மைலேஜ், போதுமான இடவசதி என ஒரு கல்லில் இரு மாங்காகளை அடிக்க முடியும்.

எஸ்யூவி கார்களை பலர் தேர்வு செய்வதற்கு காரணம் இதுதானா!! வாடிக்கையாளர்களின் இரசனை எவ்வாறு மாறியது?

இதனாலேயே இந்தியாவில் குறைந்தது ஒரு காம்பெக்ட் எஸ்யூவி காரையாவது விற்பனையில் கொண்டிருக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விரும்புகின்றன. மேலும் விலையையும் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சங்களில் நிர்ணயிக்க முயற்சிக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பல எஸ்யூவி கார்கள் பாதுகாப்பில் சிறந்தவைகளாக உலகம் முழுவதிலும் பெயர் பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
Compact SUVS, How It All Started?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X