சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா

ஹோண்டா கார் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 7,834 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து நடப்பாண்டு ஜூன் மாதம் 2,502 கார்களை ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ஹோண்டா நிறுவனம் வெறும் 4,767 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 7,834 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விற்பனையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 64 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரண்டு மடங்காக மாறியுள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெறும் 1,241 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 2,502 ஆக உயர்ந்துள்ளது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் ஜாஸ் (Honda Jazz), அமேஸ் (Honda Amaze), டபிள்யூஆர்-வி (Honda WR-V) மற்றும் சிட்டி (Honda City) போன்ற கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சிட்டி காரின் ஹைப்ரிட் (Honda City Hybrid) மாடலை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி (Honda City e:HEV) என்ற பெயரில், இந்த ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைந்து செயல்படும்.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

இவை ஒருங்கிணைந்து, அதிகபட்சமாக 125 பிஹெச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார், ஒரு லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹைப்ரிட் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். அப்போது இந்த காரின் பல்வேறு அம்சங்கள் எங்களை ஈர்த்தன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரியும் கூட சமீபத்தில் புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

இந்தியாவில் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாகவே ஊக்கப்படுத்தி கொண்டுள்ளார்.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

அவரது அமைச்சரகம் எடுத்து வரும் பல்வேறு தீவிர முயற்சிகளின் காரணமாக இந்தியாவில் தற்போது மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியுடன், காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா?

மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை பிரபலமாக்குவதுடன், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்புகளை அதிகரிப்பதற்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக குளோபல் என்சிஏபி அமைப்பை போல், கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்குவதற்கு, பாரத் என்சிஏபி என்ற அமைப்பிற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda cars india registers 64 per cent growth in domestic sales in june 2022
Story first published: Tuesday, July 5, 2022, 20:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X