இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஹோண்டா காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

இந்தியாவில் ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி ஹைப்ரிட் (Honda City e:HEV Hybrid) காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டபுகரா பகுதியில், ஹோண்டா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குதான் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

முன்னதாக ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. தற்போது முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாப் மாடலான ZX வேரியண்ட்டில் இந்த கார் கிடைக்கும். ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும்.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

அத்துடன் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஒன்-டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும். மேலும் ஹோண்டா ஹைப்ரிட் காரில், லேன் கீப் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹை பீம், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில்-ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படும்.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

அதே நேரத்தில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டிருக்கும். இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 124 பிஹெச்பி மற்றும் 253 என்எம் டார்க் ஆகும். இந்த இன்ஜினுடன், சிவிடி கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

அத்துடன் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில், எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் பெட்ரோல் என 3 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. மே மாத தொடக்கத்தில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரக கார்களில் ஹோண்டா சிட்டியும் ஒன்று.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

மாருதி சுஸுகி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா போன்ற கார்களுடன் ஹோண்டா சிட்டி செடான் போட்டியிட்டு வருகிறது. இதில், ஸ்கோடா ஸ்லாவியா இந்த செக்மெண்ட்டிற்கு புதுவரவாகும். அடுத்ததாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. போட்டி அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனம் தடுமாறி கொண்டுள்ளது என்பதுதான் உண்மை. அந்த நிறுவனத்தின் கார்கள் பெரிய அளவில் விற்பனையாவது கிடையாது. ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதேபோல் ஹோண்டாவும் இந்தியாவை விட்டு வெளியேறவுள்ளதாக தொடர்ச்சியாக யூகங்கள் வெளியாகி வந்தன.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

ஆனால் அதனை ஹோண்டா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் கார்களில் ஒன்றாக சிட்டி செடான் இருக்கிறது.

இந்தியர்கள் காத்து கிடக்கும் காரின் உற்பத்தியை தொடங்கியது ஹோண்டா... இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

இந்த சூழலில் சிட்டி ஹைப்ரிட் காரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதன் காரணமாக சிட்டி காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என ஹோண்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஆனால் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் சிட்டி ஹைப்ரிட் காரின் அதிகாரப்பூர்வமான விலையை ஹோண்டா நிறுவனம் அறிவிக்கும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda city hybrid production begins in india here are all the details
Story first published: Tuesday, April 19, 2022, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X