பழைய காரை நசுக்கித் தூக்கி எறிந்தால் நிறையப் பணம்! ஹோண்டா- மாருதி- டொயோட்டா கூட்டுத் திட்டம்

ஹோண்டா கார் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் காரை ஸ்கிராப் செய்ய விரும்பினால் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டா நிறுவனம் இணைந்த MSTI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஹோண்டா வாடிக்கையாளர்கள் தங்கள் காரை ஸ்கிராப் செய்தால் நல்ல விலை கிடைக்கும்.

மாருதி நிறுவனமும், டொயோட்டா நிறுவனமும் இணைந்த இஎல்வி என்ற பழைய கார்களை ஸ்கிராப்பிங் மற்றும் ரீ சைக்கிளிங் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இங்குப் பயன்படுத்த முடியாத நிலை மற்றும் காலாவதியான கார்கள் மற்றும் வாகனங்களை கிராப் செய்து மறு பயன்பாட்டிற்காக அனுப்பப்படும். இதனால் வாகன கழிவுகளில் இந்த பூமிக்கு ஏற்படும் மாசு குறையும். இதற்காக நாடு முழுவதும் ஸ்கிராப் மையங்களை உருவாக்கி அங்கு வாகனங்களை கிராப் செய்து வருகின்றனர்.

பழைய காரை நசுக்கித் தூக்கி எறிந்தால் நிறையப் பணம்! ஹோண்டா- மாருதி- டொயோட்டா கூட்டுத் திட்டம்

இந்நிலையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திடம் புதிதாக கார் வாங்க வருபவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் கார் காலாவதியாகிவிட்டது. அல்லது பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது என்றால் அவர்கள் தங்கள் காரை ஸ்கிராப் செய்ய விரும்பினால் அதற்கு ஹோண்டா நிறுவனமே உதவி செய்யும் விதமாக மாருதி, டொயோட்டா நிறுவனம் இணைந்து நடந்தும் கிராப் மையத்தில் அந்த காரை ஸ்கிராப் செய்ய உதவி செய்வார்கள். அதன் பின்னர் குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஹோண்டா நிறுவனத்தின் காரை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தம் மூலம் தங்கள் காரை ஸ்கிராப் செய்ய ஒருவர் விண்ணப்பித்தால் அவர் கார் முதலில் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் இந்த கார் ஸ்கிராப்பிற்கு தகுதியாக இருந்தால் அதை ஸ்கிராப் செய்வது மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற கோட்டேஷன் அவருக்குக் கிடைக்கும். அவருக்கு அவர் சம்மதம் தெரிவித்தால் ஸ்கிராப் மைய ஊழியர்களே வந்து வாகனத்தை மையத்திற்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.

பின்னர் இந்த கிராப் மையத்தில் வாகனம் தனித்தனி பாகங்களாகக் கழட்டப்பட்டு மொத்தமாக ஸ்கிராப் செய்யப்பட்டு ரீ சைக்கிள் செய்யக்கூடிய பொருட்கள் அதற்கான பணிக்குச் சென்றுவிடும். கார் உரிமையாளருக்கு அவரது கார் முழுவதுமாக ஸ்கிராப் செய்யப்பட்டு விட்டது என்பதற்கான சான்று கிடைத்துவிடும். இந்த சான்று மூலம் அரசின் ஸ்கிராப்பேஜ் பாலிசியின் கீழ் உள்ள பலன்களை பெற முடியும். மேலும் எதிர்காலத்தில் அவரது வாகனம் முறைகேடான செயலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதையும் உறுதி செய்ய முடியும்.

மத்திய அரசு காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகப் பழைய வாகனங்கள் பயன்பாட்டின் போது அளவிற்கு அதிகமான மாசுகளை வெளியிடுகிறது. இப்படியாக வாகனங்கள் மூலம் வெளியிடும் மாசுவை குறைக்கச் சாலையில் ஓடும் பழைய வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இதற்காகப் பழைய வாகனங்களை அழிக்கும் நபர்களுக்கு புதிய கார்களை வாங்கும் போது மானியங்களை வழங்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போக்குவரத்துத் துறை இந்திய அரசிடம் உள்ள 15 ஆண்டுகளுக்குப் பழமையான வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட உத்தரவிட்டது. மேலும் மாநில அரசுகளுக்கும் இதே கொள்கையைப் பின்பற்றக் கடிதம் எழுதியுள்ளது. இதற்காக வரும் 2023 ஏப்ரல் மாதத்திற்கும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.

இப்படிப் பார்த்தால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் ஏராளமான பழைய படாதி பஸ்கள் எல்லாம் இருக்கின்றன. இது எல்லாம் ஸ்கிராப் செய்யப்பட்டு புதிய பஸ்கள் வருமா என்று பலருக்கு கேள்வி உள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Honda join hand with maruti toyotsu JV To provide car scrapping service
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X