சிட்டி உட்பட இரு பிரபல கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

ஹோண்டா (Honda) நிறுவனம் நான்காம் தலைமுறை சிட்டி (4th generation City) செடான் ரக கார் உட்பட மேலும் இரு கார் மாடல்களை இந்திய சந்தையை விட்டு வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

பிரபல ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda)) அதன் பிரபல கார் மாடல்களான நான்காம் தலைமுறை சிட்டி (4th generation City), ஜாஸ் (Jazz) மற்றும் டபிள்யூஆர்-வி (WR-V) ஆகிய கார் மாடல்களை இந்திய சந்தையை விட்டு வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் ஹோண்டா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

அதேவேலையில், வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என நம்பகமான தகவல்கள் தெரிவித்திருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்டு தகவல் வெளியிட்டிருக்கின்றது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக குறிப்பிட்ட அந்த மூன்று கார் மாடல்களையும் அது வெளியேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

தற்போது இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் அமேஸ், நான்காம் தலைமுறை சிட்டி, ஐந்தாம் தலைமுறை சிட்டி, சிட்டி இ:எச்இவி, டபிள்யூஆர்-வி மற்றும் ஜாஸ் ஆகிய ஆறு கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் அமேஸ், ஐந்தாம் தலைமுறை சிட்டி மற்றும் சிட்டி இ:எச்இவி ஆகிய மூன்று கார் மாடல்களை மட்டும் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக வணிகத்தில் வைத்திருக்க ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

ஏற்கனவே, இந்நிறுவனம் வரவேற்புக் குறைவாக இருப்பதாக கூறி சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய இரு பிரபல கார் மாடல்களை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியது. வெளியேற்றத்தைத் தொடர்ந்து இக்கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்து பணிகளையும் நிறுத்தியது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

2020 டிசம்பரிலேயே இந்த அதிரடி நடவடிக்கையை ஹோண்டா மேற்கொண்டது. மேலும், நொய்டாவில் இயங்கி வந்த ஆலையையும் அது மூடியது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை இந்தியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் விரைவில் நான்காம் தலைமுறை சிட்டி, ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி ஆகிய கார் மாடல்களை விற்பனையில் இருந்து அகற்ற இருக்கின்றது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

ஹோண்டா நிறுவனம் மூன்று கார் மாடல்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து சில புதுமுக கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை தன் வசம் ஈர்க்கும் வகையிலேயே நிறுவனத்தின் புதுமுக கார்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. ஆம், நிறுவனம் விரைவில் எஸ்யூவி ரக கார்களையே இந்திய சந்தையில் களமிறக்க இருக்கின்றன.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

கார் வெளியேற்றம் முடிவுகுறித்து நிறுவனத்திடம் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என பிசினஸ் ஸ்டாண்டர்டு தெரிவித்துள்ளது. அதேவேலையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் ஹோண்டா நிறுவனம் அடுத்து வரும் வருடத்தில் இந்தியாவில் புதுமுக எஸ்யூவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

ஆகையால், கூடிய விரைவில் இந்தியாவிற்கான புதிய கார்களை அது பொதுப் பார்வைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நான்காம் தலைமுறை சிட்டி, ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி ஆகிய கார்களின் வெளியேற்றம் குறித்த தகவலையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

ஹோண்டா (Honda) மற்றும் சோனி (Sony) இணைந்து மின்சார காரை உருவாக்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக சந்தைக்கான எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவே இரு நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. ஏற்கனவே சோனி நிறுவனம், விஷன் 01 (செடான்) மற்றும் விஷன் 02 (எஸ்யூவி) மின்சார காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் கார் உருவாக்கத்திற்காக இரு நிறுவனங்களும் அண்மையில் இணைந்தன. கூட்டணியின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த மின்சார கார் வரும் 2025ம் ஆண்டிற்குள் வெளியீட்டைப் பெற்றுவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டாவின் மின்சார கார் தயாரிப்பு ஆலையில் வைத்தே மின்சார கார் உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி கார் மாடல்களுக்கு என்ட் கார்டு போட ஹோண்டா திட்டம்?.. எல்லாமே சூப்பரான கார் மாடலாச்சே!

வாகன உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப பகிர்மானம் போன்ற முக்கிய செயல்களுக்காகவே இரு நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. எலக்ட்ரானிக்ஸ் உலகின் ஜாம்பவான் சோனி மற்றும் வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் ஹோண்டா மின்வாகன உற்பத்திக்காக இணைந்திருப்பது ஒட்டுமொத்த வாகன பிரியர்களையும் கவரும் அமைந்துள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்து உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Honda to discontinue 4th generation city and 2 more cars from india
Story first published: Friday, July 29, 2022, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X