3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் ஹோண்டா அதன் சமீபத்திய அறிமுகமான சிட்டி இ:எச்இவி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

பெரிதும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் பிரபலமான செடான் மாடலான சிட்டியின் ஹைப்ரீட் வெர்சனை இ:எச்இவி என்கிற பெயரில் வெளியீடு செய்துள்ளது. இந்த புதிய ஹைப்ரீட் வாகனம் அடுத்த 2022 மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ள புதிய சிட்டி ஹைப்ரீட் கார்களுக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்தொகையாக ரூ.21,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப காரை மாற்றியமைத்து கொள்ளலாம்.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

க்ரோம் உடன் கதவு விஸர், ஒளிரும் படிக்கட்டு விளக்குகள், ஜன்னல் க்ரோம் மோல்டிங், மேற்கூரை இறுதியில் விஸர் மற்றும் ஸ்மார்ட்போன் ஹோல்டர் உடன் வயர் இல்லா சார்ஜர் உள்ளிட்டவை இந்த ஆக்ஸஸரீகளில் அடங்குகின்றன. சிட்டி இ:எச்இவி காருக்கான ஆக்ஸஸரீகள் அடிப்படை தொகுப்பு, க்ரோம் தொகுப்பு மற்றும் அன்றாட பயன்பாட்டு தொகுப்பு என 3 பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளன.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

இதில் அடிப்படை தொகுப்பில் பக்கெட் மேட், ஃப்ளோர் மேட், குஷின்ஸ், கீ செயின், அவசர கால சுத்தியல் மற்றும் மைக்ரோஃபைபர் துணி உள்ளிட்டவை அடங்குகின்றன. அடுத்த க்ரோம் தொகுப்பில் முன்பக்க பம்பரின் பக்கவாட்டு கார்னிஷ், ட்ரங்க் கார்னிஷ், டெயில்லேம்ப் கார்னிஷ் மற்றும் கதவு அடிப்பகுதியில் கார்னிஷ் ஆகியவை உள்ளன.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

அதுவே அன்றாட பயன்பாட்டு தொகுப்பில் முன் & பின்பக்க பம்பருக்கான பாதுகாப்பான், கதவு கைப்பிடி பாதுகாப்பான், கதவு முனைகளில் கார்னிஷ், ட்ரங்க் கார்னிஷ், டெயில்லேம்ப் கார்னிஷ் மற்றும் கதவு கீழ்பகுதிக்கான கார்னிஷ் முதலியவை உள்ளன. இவை தவிர்த்து சிட்டி செடான் காருக்கு பாடி கவர், சிட்டி லோகோ பிரோஜெக்டர், லெக்ரூம் விளக்கு மற்றும் முன்பக்க பம்பர் மைய கார்னிஷ் உள்ளிட்ட ஆக்ஸஸரீ தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

புதிய சிட்டி இ:எச்இவி ஆக்ஸஸரீகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதே தவிர்த்து, ஆக்ஸஸரீகளுக்கான விலைகள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. அவற்றை காரின் அடுத்த 2022 மே மாத அறிமுகத்தின்போது எதிர்பார்க்கலாம். அதேபோல் சிட்டி ஹைப்ரீட் காருக்கான விலைகளும் இன்னமும் வெளியிடப்படவில்லை. அவற்றையும் காரின் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுகத்தின்போதே எதிர்பார்க்க முடியும்.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

எங்களுக்கு தெரிந்தவரையில் சிட்டி இ:எச்இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.18 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். வி & இசட்.எக்ஸ் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் இந்த ஹைப்ரீட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இரு மின் மோட்டார்கள் புதிய சிட்டி ஹைப்ரீடில் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று ஐஎஸ்ஜி-ஆக செயல்படும். ஆகையால் இந்த மோட்டார் பெட்ரோல் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

மற்றொரு மின் மோட்டார் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் முன் சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடியதாக பொருத்தப்பட்டுள்ளது. இவை பேட்டரி வாயிலாக மின்சாரத்தை பெறும். இதில் பேட்டரி தொகுப்பு ஆனது பிரேக் ரீஜெனரேஷன் மற்றும் பெட்ரோல் என்ஜின் வாயிலாக சார்ஜாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. புதிய சிட்டி ஹைப்ரீட் காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 97 பிஎச்பி & 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவற்றுடன் பல சிறப்பம்சங்களையும் சிட்டி இ:எச்இவி பெற்றுள்ளது. இதில் 8 அங்குல இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹோண்டா இணைப்பு வசதி, ஸ்மார்ட்போன் வாட்ச் இணைப்பு, எட்டு ஸ்பீக்கர்கள், டிரைவருக்கான டிஜிட்டல் திரை மற்றும் ஆட்டோ லாக் உள்ளிட்டவை அடங்குகின்றன.

3 விதமான தொகுப்புகளில், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!!

பயணிகள் மற்றும் வாகன பாதுகாப்பிற்கு ஹோண்டா உணர் தொழிற்நுட்பம், ஆட்டோ ஹை பீம், தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், ஒரே பாதையை கடைப்பிடிப்பதற்கான உதவி, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், ஹில் ஹோல்ட் உதவி, பார்க்கிங் ஹோல்ட், பாதையை கண்காணிக்க கேமிரா மற்றும் பல-கோண ரியர்வியூ கேமிரா முதலியவை இந்த புதிய ஹைப்ரீட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda unveiled accessory list for upcoming city hybrid sedan ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X