டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் 3 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

அறிவித்தபடியே டாடா மோட்டார்ஸ் அதன் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வந்த டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை நேற்று (செப்டம்பர் 28) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே, டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி என இரு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வந்த நிலையில் மூன்றாவது தயாரிப்பாக டியாகோ இவியை அது களமிறக்கியிருக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய சுவாரஷ்ய மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் டியாகோ இவி, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகியவற்றின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் ரேஞ்ஜ் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் செல்லும் திறன்) உள்ளிட்டவற்றை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.v

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

முதலில் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் காராக விளங்கிக் கொண்டிருக்கும் நெக்ஸான் இவி பற்றி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் முதன் முதலில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த கார் மாடலையே இரு மாடல்களாக டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், பிரைம் மாடலைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக மேக்ஸ் இருக்கின்றது. இதற்காக பெரிய பேட்டரி பேக்கே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இந்த இரு மாடல்கள் பற்றிய விரிவான விபரங்கள் கீழ் வருமாறு பார்க்கலாம்.

நெக்ஸான் இவி பிரைம்:

வேரியண்ட் விபரம்:

நெக்ஸான் இவி பிரைம் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஆகிய மூன்று முதன்மையான விதமான தேர்வுகளிலேயே பிரைம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

விலை விபரம்:

இதில், எக்ஸ்எம் வேரியண்ட் ரூ. 14,99,000க்கும், எக்ஸ்இசட் பிளஸ் வேரியண்ட் ரூ. 16,30,000க்கும், எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் வேரியண்ட் ரூ. 17,30,000க்கும் விற்கப்படுகின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

நெக்ஸான் பிரைம் காரின் சிறப்பம்சம் மற்றும் ரேஞ்ஜ் விபரங்கள்:

மல்டி மோட் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஐ-டிபிஎம்எஸ், ஸ்மார்ட் இணைப்பு, ஐபி67 சான்று பெற்ற பேட்டரி மற்றும் மோட்டார், ஓவர் சார்ஜ் புரடெக்சன், ஷாக் புரடெக்சன், 35க்கும் மேற்பட்ட கார் இணைப்பு அம்சம், ரிமோட் கமேண்ட் உள்ளிட்ட எக்கக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை நெக்ஸான் இவி பிரைம் காரில் டாடா வழங்கியிருக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

நெக்ஸான் இவி பிரைம் மாடலில் 30.2 kWh லித்தியம் அயன்-பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக்காகும். இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் 129 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

நெக்ஸான் இவி மேக்ஸ்:

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்:

நெக்ஸான் இவி பிரைம்மைக் காட்டிலும் பெரிய பேட்டரி பேக்கைக் கொண்டதே நெக்ஸான் இவி மேக்ஸ். அப்படி என்றால் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய மாடல் என்பது பொருள் ஆகும். இந்த திறனுக்காக இந்த மாடலில் 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 437 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

மின் மோட்டார் விபரம்:

இதுதவிர, அதிக பவர்ஃபுல்லான 105 kW திறன் கொண்ட மின் மோட்டார் நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. நெக்ஸான் இவி மேக்ஸ் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

வேரியண்ட் மற்றும் விலை விபரம்:

அவை, எக்ஸ்இசட் பிளஸ் (விலை ரூ. 18.34 லட்சம்), எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (விலை ரூ. 19.34 லட்சம்), எக்ஸ்இசட் பிளஸ் ஏசி எஃப்சி டபிள்யுஎம்யூ (விலை ரூ. 18.84 லட்சம்) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஏசி எஃப்சி டபிள்யுஎம்யூ (விலை ரூ. 19.84 லட்சம்) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். விலைகள் அனைத்கும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

நெக்ஸான் இவி-யை டாடா மோட்டார்ஸ் ஜெட் எடிசன் மற்றும் டார்க் எடிசன் எனும் இரு சிறப்பு தேர்வுகளிலும் விற்பனைக்கு வழங்குகின்றது. இதில் ஜெட் எடிசன் ரூ. 17.50 லட்சம் தொடங்கி ரூ. 20.4 லட்சம் வரையிலும், டார்க் எடிசன் ரூ. 16.49 லட்சம் தொடங்கி ரூ. 17.50 லட்சம் வரையிலும் விற்கப்படுகின்றது. இந்த சிறப்பு பதிப்புகள் வழக்கமான பதிப்புகளைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப கருவிகள், சிறப்பு வசதிகள் மற்றும் அலங்கார அம்சங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

டாடா டிகோர் இவி:

டாடாவின் முந்தைய மலிவு விலை எலெக்ட்ரிக் காரே டிகோர் இவி. மேலும், இந்தியாவிலேயே குறைவான விலையில் கிடைக்கும் மின்சார காராகவும் டிகோர் இருந்தது. தற்போது இதன் இடத்தையே டியாகோ இவி பிடித்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் டிடி ஆகியவையே அவை ஆகும். இதன் தொடக்க நிலை வேரியண்டாக எக்ஸ்இ காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 12.49 லட்சம் ஆகும். அதேவேலையில், இதன் உச்ச நிலை வேரியண்டான எக்ஸ்இசட் பிளஸ் டிடி ரூ. 13.64 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இந்த மின்சார காரில் காரில் 26 kWh IP 67 தர பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார் 74 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே இதிலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 80 சதவீதத்தை வெறும் 60 நிமிடங்களிலேயே எட்டிவிடும். அதேவேலையில், ஃபாஸ்ட் சார்ஜ் அல்லாத பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 8.5 மணி நேரங்கள் வரை முழு சார்ஜை எட்டை எடுத்துக் கொள்ளும். பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பின் பக்கத்தில் பார்க்கிங் கேமிரா மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

டாடா டியாகோ இவி:

டாடா மோட்டார்ஸ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த காரை யாரும் எதிர்பார்த்திராத மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ரூ. 8.49 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையிலேயே டியாகோ இவி களமிறக்கப்பட்டிருக்கின்றது.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இக்காரின் முழு விலை விபரம் இதோ:

Tata Tiago EV Price
Battery Pack Charging Option Variant Price
19.2 kWh 3.3 kW AC XE ₹8.49 Lakh
XT ₹9.09 Lakh
24 kWh 3.3 kW AC XT ₹9.99 Lakh
XZ+ ₹10.79 Lakh
XZ+ Tech LUX ₹11.29 Lakh
7.2 kW AC XZ+ ₹11.29 Lakh
XZ+ Tech LUX ₹11.79 Lakh
டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

பேட்டரி பேக் தேர்வு:

டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் இரு விதமான பேட்டரி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். 24 kWh மற்றும் 19.2 kWh ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே டியாகோ இவியில் வழங்கப்படுகின்றது. இதில், 24 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 315 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் 19.2 kWh பேட்டரி பேக் தேர்வானது ஓர் முழு சார்ஜில் 250 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

15 A சார்ஜிங் பாயிண்ட், 3.3 kW AC சார்ஜிங் பாயிண்ட், 7.2 kW AC வீட்டு சார்ஜிங் பாயிண்ட் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் ஆகிய நான்கு விதமான சார்ஜிங் ஆப்ஷன்களில் டியாகோ எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாகவே வைப் செய்யும் வைப்பர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் மல்டி-மோட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் டியாகோ இவியில் கொடுக்கப்பட்டுள்ளன.

டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி... டாடாவின் இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகமாக இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், டியாகோ எலெக்ட்ரிக் காரில் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இன்னும் சில பாதுகாப்பு கருவிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
How many electric cars does tata sell in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X