கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

உங்க காருல எலி தொல்லை அதிகமா இருக்கா?, இத மட்டும் செஞ்சீங்க உங்க காரு பக்கம் ஒரு எலிகூட வராது. எலியை காரிடம் இருந்து விளக்கி வைப்பதற்கான டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

ஒரு நாள் ராத்திரி வண்டிய விட்டுட்டு போனா போதும் குடும்பத்தோட வந்து கும்மியடிச்சுடுங்க இந்த எலி கூட்டம். குடும்பத்தோட வந்து வசிச்சிட்டு மட்டும் அவங்க போக மாட்டாங்க. வாகனங்களின் முக்கிய இணைப்புகள், பாகங்களை தங்களுக்கு இரையாக அவர்கள் ஆக்கிவிடுவார்கள். ஒயர், பிளாஸ்டிக் பேனல், முக்கிய பைப் லைன் என எதையும் விட்டு வைக்காம சேதப்படுத்திட்டு போவாங்க.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

இதனாலதான் ஒரு சிலர் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தில் வரும் வடிவேலுவைப் போல் எலியை தங்களின் மிகப்பெரிய விரோதியாக பாவிக்கின்றனர். ஆனால், இதுனால ஒரு பலனும் இல்ல. இதற்கு பதிலாக எலி போன்ற பிற விலங்கினங்களை நம்முடைய வாகனங்களில் இருந்து விளக்கி வைப்பதற்கான செயலில் நாம் ஈடுபடலாம்.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

"எங்கேங்க... என்ன செஞ்சாலும் இந்த எலி மறுபடியும் மறுபடியும் வண்டிக்குள்ள புகுந்து ஒரு வழி பண்ணீட்டு போய்டுதுங்க" என கூறுகிறீர்களா. இந்த பிரச்னை தீர்வளிக்கும் வழிமுறைகளையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 1

வாகனங்களை பாதுகாப்பான பார்க்கிங்கில் நிறுத்துங்கள்.

பொதுவாகவே வாகங்களை வெளியில் நிறுத்தும்போதே இந்த பிரச்னை ஏற்படுகின்றது. எலி மட்டுமல்ல சில நேரங்களில் பாம்புகள், அணில்கள்கூட காருக்குள் புகுந்துவிடுகின்றன. இவற்றை தவிர்க்க வேண்டுமானால், பாதுகாப்பா வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தினால் மட்டுமே முடியும்.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 2

காரின் ஜன்னல் மற்றும் சன் ரூஃபை மூட தவற வேண்டாம்.

சில நேரங்களில் காரின் கேபினுக்குள் அழையா விருந்தாளிகளான எலி, பாம்பு, அணில் உள்ளிட்டவை நுழைகின்றன. அஜாக்ரதையாக, காரின் விண்டோ, சன்ரூஃப் மற்றும் கதவுகளை திறந்தவாறு வெளியே செல்வதனாலேயே இவை எளிதில் காருக்குள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு உள் நுழைந்தவற்றை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. எனவேதான் முன்னெச்சரிக்கையாக காரின் அனைத்து திறக்கும் பகுதிகளையும் முழுமையாக மூடி வைக்க அறிவுறுத்தப்படுகின்றது.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 3

குப்பை, உணவு பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

காருக்குள் குப்பைகள் மற்றும் உணவு பொருட்கள் சிதறிக் கிடக்கும் எனில் அவற்றை உடனடியாக அகற்றிவிடுங்கள். ஏனெனில், இவையே எலி உள்ளிட்டவை காருக்குள் நுழைய அழைப்பிதழாக மாறுகின்றன. எலி மட்டுமல்ல எரும்பு போன்ற ஊர்வனவற்றின் தொல்லையும் இதனால் அதிகரிக்கும். இதனால்தான் காருக்குள் இருக்கும் உணவு பொருட்களை உடனக்குடன் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 4

வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள்:

சந்தையில் எலி, கரையான் போன்றவற்றை விளக்கி வைக்கும் வகையில் வாசனை திரவியங்கள், ஆயில்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை உங்களால் வாங்க முடியவில்லை எனில் தற்சமயம் உங்கள் கை வசம் இருக்கும் பெப்பர் அல்லது கிராம்பு ஆயில்களைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். இதன் வாயிலாக இந்த கொறித்துண்ணிகளை விளக்கி வைக்க முடியும்.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

நீண்ட நேரம் இந்த வாசனை ஆயில் வேலை செய்ய வேண்டும் எனில், பருத்தி உருண்டையை அந்த ஆயிலில் நன்கு ஊற வைத்து அவற்றை காரின் கேபின் மற்றும் பிற பகுதிகளில் வைத்து விடலாம். குறிப்பாக, எலி நுழைய ஏதுவாக இருக்கும் பகுதிகளில் வைத்து விடலாம். இவை வாரக் கணக்கில் கொறித்துண்ணிகளை வாகனத்தை விட்டு விளைக்கும். மிளகு மற்றும் கிராம்பின் வாசனை அவற்றிற்கு பிடிக்காதவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 5

வாகனத்தை சுற்றிலும் மரத் தூள்களை கொட்டலாம்:

வாகனத்தை சுற்றிலும் மரத்தூள்களைக் கொட்டலாம். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவற்றின் மீது பெனாயில், டெட்டாயில் போன்றவற்றை தெளிக்கலாம். இதன் மூலம் எலியை மட்டுமல்ல, கொசு, ஈ, கரப்பான் பூச்சி, விஷப் பாம்புகள் உள்ளிட்டவற்றைக் கூட தடுக்க முடியும்.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 6

எலியை தடுக்கும் டேப்:

தற்போது சந்தையில் எலியை தடுக்கும் வகையில் பசை டேப்புகள் விற்கப்படுகின்றன. இவற்றை காரை சுற்றி ஒட்டுவதனால் எலிகள் காருக்குள் நுழைவதை தடுக்க முடியும். எலி மட்டுமின்றி அணில் மற்றும் பாம்பு போன்ற விலங்குகளையும் இதன் வாயிலாக தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 7

ஒலி கருவி:

எலி மற்றும் கொசுக்களை விரட்டும் வகையில் சத்தத்தை வெளியேற்றும் கருவி தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கருவிகளில் இருந்து வெளியேறும் ஒலி எலி போன்றவற்றை விரட்டுவதில் சிறப்பாக பணியாற்றுவதாக கூறப்படுகின்றது. ஆகையால், இதனையும் வாகனங்களுக்கு அருகில் பயன்படுத்தலாம் என தெரிகின்றது.

கார்களில் எலி தொல்லையா?.. இத மட்டும் செஞ்சு பாருங்க.. எலி மட்டுமல்ல வேற எதுவும் காருக்குள்ள நுழையாது!

வழி 8

எலி பொறி:

இது மிக பழைய வழியாக தென்படலாம். ஆனால், எலியை பிடிக்க பழங்காலந்தொட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருக்கும் சிறந்த வழிமுறைகளில் எலி பொறியும் ஒன்று. இதன் வாயிலாக எலியை சுலபமாக பிடித்துவிடும். மேலும், நம்முடைய வாகனங்களையும் நம்மால் காப்பாற்ற முடியும்.

குறிப்பு: மேற்கண்ட அனைத்த வழிகாட்டுதல்களையும் பாதுகாப்பான முறையிலும், கவனமான முறையிலும் கையாளுவது அவசியம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to keep rats out of your car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X