புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா... இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க...

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் செய்தால் 3 மாத காத்திருப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்...

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

இந்தியாவில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஹூண்டாய். தென்கொரியாவை மையமாக கொண்ட இந்நிறுவனம் இந்தியாவிலும் பெரிய அளவில் கார் உற்பத்தியைச் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் விற்பனை செய்துவரும் ஹூண்டாய் காரின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹூண்டாய் வென்யூ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகமானது. இந்நிலையில் இந்த காரில் பல புதிய மாற்றங்களுடன் விற்பனைக்கு அறிமுகமானது. இந்நிலையில் இந்த கார் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

சமீபத்தில் இந்த கார் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அந்நிறுவனத்தின் விற்பனை, மார்கெட்டிங் மற்றும் சேவை பிரிவு இயக்குநர் தருண் கார்க் இந்த புதிய ஹூண்டாய் வென்யூ காருக்கு முதல் நாளே சுமார் 15 ஆயிரம் புக்கிங்கள் வந்து குவிந்துள்ளதாகக் கூறினார். இத்துடன் சேர்ந்து மொத்தம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு மொத்தம் 1,35,000 வாகனங்கள் புக்கிங்கில் இருப்பதாக கூறினார்.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

தற்போது உலகம் முழுவதும் நிலவி வரும் செமி கண்டெக்டர் தட்டுப்பாட்டால் உற்பத்தி மந்தமாகியுள்ளதாகக் கூறினார். மேலும் தற்போது புதிதாக ஹூண்டாய் கார்களுக்கு வந்த புக்கிங்கில் பெரும்பாலான புக்கிங்கள் ஹூண்டாய் வென்யூவின் பழைய காருக்கான புக்கிங்கை வாடிக்கையாளர்கள் புதிய காருக்கான புக்கிங்காக மாற்றியுள்ளதாகக் கூறினார்.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

இதன் காரணமாக தற்போது ஹூண்டாய் நிறுவனத்திடம் பழைய மாடல் ஹூண்டாய் வென்யூ சுமார் 25 ஆயிரம் கார்கள் தற்போது விற்காமல் இருப்பதாகவும், அதை விற்று முடித்தபின்பே புதிய காருக்கான டெலிவரி துவங்கும் என்றும் கூறியுள்ளார். இதற்காக

புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தற்போது காத்திருப்பு காலத்தை அறிவித்துள்ளது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

புதிதாக ஹூண்டாய் வென்யூ காரை புக் செய்தால் குறைந்தபட்சம் 3 மாதகாலமாவது காத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதற்கிடைப்பட்ட காலத்தில் தற்போது ஸ்டாக்கில் இருக்கும் ஃபேஸ்லிஃப்ட் அல்லாத வென்யூ காரை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

கடந்த வியாழக்கிழமை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரை எக்ஸ் ஷோரூம்விலையாக ரூ7.53 லட்சம் முதல் அறிமுகமாகிறது. இந்த கார் மொத்தம் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

1.2 எம்பிஐ பெட்ரோல், கப்பா 1.0 டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் யூ2 1.5 சிஆர்டிஐ டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. பழைய வென்யூ மாடலை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட டிசைனில் மட்டும் 40 மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த கார் 1 டூயல் டோன் கலர் ஆப்ஷனுடன் சேர்ந்து மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

முக்கியமாக இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் பின்பக்க சீட்டில் கார் வைக்க போதுமான இடவசதி கொண்ட சீட் பொருத்தப்படுகிறது. இதுமட்டுமல்ல பின்பக்கம் உள்ள சீட்களில் சாய்வு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல காரில் அம்பியன்ஸ் சத்தத்தில் இயற்கை சத்தம், 12 மொழி தேர்வுகள், காற்று சுத்திகரிப்பான், 60 ப்ளு லிங்க் கனெக்டெட் தொழிற்நுட்பம் எனப் பலவசதிகள் வழங்கப்படுகிறது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு தனது வென்யூ எஸ்யூவி காரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. 4 மீட்டருக்கும் குறைவான சப் காம்பேக்ட் எஸ்யூவி காராக இதை அறிமுகப்படுத்தியது. இந்த கார் நேரடியாக மாருதி சுஸூகி விட்டாரா பிரஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சோனட் , ரெனாலட் கைகர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

கடந்த 6 மாத்தில் 2 முறை டாப் 10 கார் விற்பனை பட்டியலில் 2 இடத்திலிருந்த ஹூண்டாய் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டாடா நிறுவனம் பலமான விற்பனையைப் பெற்று வருகிறது. இதற்கு அந்நிறுவனத்தின் பல கார்கள் மக்கள் மத்தியில் புகழ்பெற்று வருகிறது.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை புக் பண்ண போகிறீர்களா . . . இந்த விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க . . .

இதற்குப் பதிலளித்த அந்நிறுவனத்தின் இயக்குநர் கார்க் "ஓரிரு மாத விற்பனையை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. நாங்கள் தொடர்ந்து நீண்ட காலமாகச் சிறப்பான விற்பனையைச் செய்து வருகிறோம். தொடர்ந்து அதைச் செய்வோம். எவ்வளவு எண்ணிக்கையில் விற்பனை செய்கிறோம் என்பதை விடத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதில்தான் உறுதியாக இருக்கிறோம்" எனக் கூறினார்.

Most Read Articles
English summary
Hyundai announces waiting period of 3 months for new venue facelift cars
Story first published: Saturday, June 18, 2022, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X