புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

புதியதாக அடிக்கடி காரை மாற்றி கொண்டிருப்பவர்களுக்கு, மற்றவர்களை விட வேறுப்பட்ட தோற்றம் கொண்ட காரை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சிலர் காரை மாடிஃபை செய்து பயன்படுத்துவர். ஆனால் ஒரு சிலரோ தயாரிப்பு நிறுவனங்களினால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்பெஷல் எடிசன்களை வாங்க முயற்சிப்பர்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

இதில் 2வது இரகத்தை சேர்ந்தவர்களுக்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி மாடலில் புதிய நைட் எடிசனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கும், விற்பனையில் போட்டியாக உள்ள கியா செல்டோஸ் எக்ஸ் லைன் எடிசன் காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

வெளிப்புற தோற்றம்

க்ரெட்டா நைட் எடிசன் ஆனது வழக்கமான க்ரெட்டா மாடலில் க்ரோம் நீக்கப்பட்ட வெர்சனாக விளங்குகிறது. முற்றிலுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் க்ரெட்டா காரில் முன்பக்க க்ரில், மேற்கூரை கம்பிகள், பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள், டெயில்லேம்ப்கள், முன் & பின்பக்க சறுக்கு தட்டுகள் மற்றும் C-பில்லர் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளன. அடர் உலோக ஃபினிஷிங்கில் வழங்கப்பட்டுள்ள 17-இன்ச் அலாய் சக்கரங்களில் முன் பிரேக் காலிபர்கள் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

கியா செல்டோஸ் எக்ஸ் லைனை பொறுத்தவரையில், இது கடந்த 2021 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராஃபைட் மேட் ஷேடில் வழங்கப்படும் இந்த ஸ்பெஷல் எடிசன் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே மேட் ஃபினிஷிங்கில் கிடைக்கக்கூடிய ஒரே மாடலாக விளங்குகிறது. இந்த ஸ்பெஷல் செல்டோஸ் காரின் வெளிப்புறத்தை சுற்றிலும் ஆரஞ்ச் நிற தொடுதல்களும் வழங்கப்படுகின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

உட்புற தோற்றம்

வெளிப்புறத்திற்கு ஏற்ப க்ரெட்டா நைட் எடிசனின் உட்புற கேபினும் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் உட்புறத்தில் இருக்கைகளில், ஸ்டேரிங் சக்கரத்தில் மற்றும் முன் & பின்பக்க ஏசி துளைகளில் சிவப்பு நிறத்தில் ஹைலைட்கள் பளிச்சிடுக்கின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

மறுப்பக்கம் கியா செல்டோஸ் எக்ஸ் லைனிற்கு வந்தோமேயானால், இதன் உட்புற கேபின் புதிய ஷேடில் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் இருக்கைகள் மற்றும் கதவு பேட்கள் உள்ளிட்டவை க்ரே நிற தையல்களுடன் இண்டிகோ பெரா நிறத்தில் கொடுக்கப்படுகின்றன. டாப் ஜிடி லைன் ட்ரிம் நிலையின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவதால், 360-டிகிரி கேமிரா, வயர் இல்லா சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் போஸ் ஸ்டேரியோ அமைப்பு உள்ளிட்டவற்றை செல்டோஸ் எக்ஸ்-லைன் பெறுகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

என்ஜின் & டிரான்ஸ்மிஷன்

க்ரெட்டா நைட் எடிசனானது அதன் எஸ்+ மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட்களில் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவதில்லை. மற்ற 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளை பெறலாம். இவை இரண்டுடனும் நிலையான தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட, கூடுதல் தேர்வாக பெட்ரோல் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸும், டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

செல்டோஸ் எக்ஸ்-லைன் வெறும் 2 வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இவை இரண்டிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு கிடைப்பதில்லை. 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுடனும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனும் கிடைக்கின்றன. அதாவது செல்டோஸ் எக்ஸ்-லைன் காரை மேனுவல் தேர்வில் பெற முடியாது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

எக்ஸ்-ஷோரூம் விலைகள்

பெட்ரோல் என்ஜின்களுடனான க்ரெட்டா நைட் எடிசனின் விலை தற்சமயம் ரூ.13.51 லட்சத்தில் இருந்து ரூ.17.22 லட்சம் வரையில் உள்ளன. அதுவே டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனான டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் செல்டோஸ் எக்ஸ்-லைன் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.15 லட்சமாகும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் vs கியா செல்டோஸ் எக்ஸ் லைன்!! எந்த ஸ்பெஷல் எடிசன் காரை தேர்வு செய்யலாம்?

டீசல் என்ஜினுடனான க்ரெட்டா நைட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.47 லட்சத்தில் இருந்து ரூ.18.18 லட்சம் வரையில் தற்போதைக்கு உள்ளன. இந்த விலைகளில் மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் க்ரெட்டா நைட் எடிசன் கிடைக்கிறது. ஆனால் ஆட்டோமேட்டிக் தேர்வில் மட்டுமே கிடைக்கின்ற செல்டோஸ் எக்ஸ்-லைன் டீசல் காரின் விலை ரூ.18.45 லட்சம் ஆகும்.

Most Read Articles
English summary
Hyundai creta knight edition vs kia seltos x line
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X