இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா?

சென்ற 2021ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி (SUV) கார் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக க்ரெட்டா (Creta) எஸ்யூவி இருக்கின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் இதுவாகும். இந்த காரே கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட காராகவும் இருக்கின்றது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 32,799 யூனிட் க்ரெட்டா எஸ்யூவி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. இதுவே முந்தைய 2020ம் ஆண்டில் பார்த்தோமேயானால் இக்கார் ஒட்டுமொத்தமாகவே 25,995 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. இதைக் காட்டிலும் 26.17 சதவீதம் வளர்ச்சியை சென்ற 2021ம் ஆண்டில் க்ரெட்டா ஏற்றுமதியில் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

ஒட்டுமொத்தமாக ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து 42,238 யூனிட் எஸ்யூவி கார்களை ஏற்றுமதி செய்திருக்கின்றது. அதில், 7,698 வென்யூ கார்களும், 1,741 யூனிட் அல்கஸார் கார்களும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கின்றது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

ஐரோப்பிய நாடுகள், வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கே இந்தியாவில் இருந்து கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்கின்றது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் எஸ்யூவி கார்களை இந்தியாவில் ஏற்றுமதி செய்த நிறுனவனமாக மாருதி சுசுகி இருக்கின்றது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

ஆனால், இந்நிறுவனத்தின் துள்ளியமான ஏற்றுமதி பற்றிய விபரம் வெளியாகவில்லை. மிக விரைவில் இதுகுறித்த அனைத்து தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராகும். 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.5 லட்சம் யூனிட் விற்பனையாகி இருக்கின்றன. இக்கார் ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பைரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7-ஸ்பீடு டிசிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட எஸ்யூவி கார் எது தெரியுமா? நம் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரும் இதுதாங்க!

இதுமட்டுமின்றி 10.25 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், ஸ்டியரிங் வீலில் பெடல் ஷிஃப்டர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பின்பக்கத்திற்கான ஏசி வெண்டுகள் போன்ற அம்சங்களும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Hyundai creta suv is the most exported car in india in 2021
Story first published: Tuesday, January 25, 2022, 20:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X