Just In
- 11 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 12 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 23 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 1 day ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
காங்கிரசுக்கு அன்று அண்ணா! திமுகவுக்கு இன்று அண்ணாமலை! ஆட்சி மாற்றம் உறுதி! நயினார் பேச்சு!
- Movies
விக்ரம் படத்தில் சூர்யா மட்டுமில்லங்க.. கார்த்தியும் "வந்திருக்கார்.." எத்தனை பேர் கவனிச்சீங்க?
- Sports
ஒரே இன்னிங்ஸில் 2 முறை பேட்டிங்.. ஜடேஜா- ஸ்ரேயாஸ்க்கு வந்த வாய்ப்பு.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்
- Finance
Elon Musk-ஐ புலம்பவிட்ட Tesla, SpaceX, Twitter ஊழியர்கள்..! - வீடியோ
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் இக்கட்டான நிலைமையில் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருவது ஹூண்டாய். மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் திகழ்கிறது. ஆனால் சமீப காலமாக ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குடைச்சல் கொடுத்து வருகிறது.

இதற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று உண்மையிலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இரண்டாவது, செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவு காரணமாக, விற்பனையும் குறைந்து, இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் மல்லுக்கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஹூண்டாய் தள்ளப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி குறைந்திருப்பதை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

ஹூண்டாய் நிறுவனம் நடப்பு காலாண்டர் ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது 2022ம் ஆண்டின் ஜனவரி - மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1.76 லட்சம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.05 லட்சம் கார்களை உற்பத்தி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது உற்பத்தியில் ஏற்பட்டுள்ள 13 சதவீத சரிவாகும். ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி - மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 15 மாடல்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜனவரி - மார்ச் இடையிலான காலகட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் 11 மாடல்களை மட்டுமே உற்பத்தி செய்தது.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்த கார்களின் பட்டியலில் க்ரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் 42,658 க்ரெட்டா எஸ்யூவி கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது வெனியூ. இதுவும் எஸ்யூவி கார்தான். ஆனால் இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இதனை 'பேபி க்ரெட்டா' என்று சொல்லலாம். நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 39,201 வெனியூ கார்களை உற்பத்தி செய்திருக்கிறது.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தாலும் கூட, ஏற்றுமதி சற்றே உயர்ந்துள்ளது. ஆனால் இது சிறிய அளவிலான வளர்ச்சிதான். நடப்பாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 41,401 ஆகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹூண்டாய் நிறுவனம் 40,522 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.

இதன்படி பார்த்தால் ஹூண்டாய் நிறுவனம் 879 கார்களை அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வரும் மாதங்களில் பல்வேறு கார்களை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி வெனியூ, க்ரெட்டா மற்றும் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களை ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில்தான் ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவியின் நைட் எடிசன் என்ற புதிய வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து க்ரெட்டா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. இதேபோல் வெனியூ மற்றும் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களும், ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்களை பெறவுள்ளன.

இதன் மூலம் அதிகரித்து கொண்டே வரும் போட்டியை சமாளித்து, விற்பனை எண்ணிக்கையை உயர்த்த முடியும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் எலெக்ட்ரிக் எஸ்யூவி என அனைத்து செக்மெண்ட்களிலும் தற்போது போட்டி கடுமையாகி கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எந்த அளவிற்கு பாதுகாப்பான கார் கியா கேரன்ஸ்? உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனை முடிவுகள் வெளியீடு!!
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
-
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம், ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் -ஐ தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ்!