ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்சத்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் ஒன்று ஹூண்டாய் டூஸான். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இக்காரை அதிக பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது ஹூண்டாய். மேலும், இக்காருக்கு அறிமுக விலையாக அது ரூ. 27.7 லட்சம் நிர்ணயித்துள்ளது.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

அடாஸ் போன்ற எக்கசக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நான்காம் தலைமுறை டூஸான் ஆகும். இது இந்தியாவில் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

லாங் வீல் பேஸுடன் இக்கார் இந்தியா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதில் ஷார்ட் வீல் பேஸ் வெர்ஷனும் உலகளவில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் இப்போதைய புதிய தலைமுறை அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் அதிக இட வசதி, அதிக அலங்கார அம்சங்கள் ஆகியவற்றையும் டூஸான் கொண்டிருக்கின்றது.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

சிறப்பு அலங்கார அமைப்பாக பெரிய டார்க் குரோம் பூச்சிலான க்ரில், பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய எல்இடி லைட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மெயின் ஹெட்லைட் முன் பக்க பம்பரில் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்திற்காக கட்டுமஸ்தான லைன்கள், ஃபிளார்டு வீல் ஆர்சுகள் மற்றும் பாடி கிளாடிங்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

18 அங்குல அலாய் வீல்களே டூஸான் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. முந்தைய தலைமுறையைவிட டூஸான் 85 மிமீ நீளமானது ஆகும். ஆகையால், அதிக இட வசதியைக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது. எனவே பயணிகள் மிக தாராளமான பயணத்தை அனுபவிக்க முடியும். காரின் பின் பக்கத்தில் டைமண்ட் பேட்டர்னிலான ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

தொடர்ந்து, இதே பின்பக்கத்தில் கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக டி-வடிவ எல்இடி லைட் பார் பொருத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து ரூஃப் ஸ்பாய்லர், ரியர் பகுதியில் வாஷர் மற்றும் வைப்பர் ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. வெளிப்பக்கத்தைப் போலவே உட்பகுதியிலும் அதிக சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

முந்தைய தலைமுறை டூஸான் காரில் டேஷ்போர்டை பெரும்பாலும் பொத்தான்களே ஆளும் வகையில் இருந்து. ஆனால், இப்போதைய வெர்ஷனில் டச் சென்சிடிவ் கன்ட்ரோல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது டேஷ்போர்டு பயன்பாட்டை கூடுதல் சுவாரஷ்யமாக்கும் வகையில் உள்ளது. இதேபோல், அதிக கன்ட்ரோல்கள் கொண்ட 4 ஸ்போக் ஸ்டியரிங் வீலும் டூஸானில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

இதற்கு அடுத்தபடியாக பயணிகளுக்கு கூடுதல் சுவாரஷ்யமான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் கூடுதலாக ஃப்ரீ ஸ்டாண்டிங் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது நமக்கான தீமை காருக்குள் பர்சனலைஸ் செய்யவும், டர்ன்-பை-டர்ன் நேவிகஷேன் பற்றிய தகவலை அறியவும் உதவியாக இருக்கும்.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

எச்ஏவிசி கன்ட்ரோல்கள் ஸ்கிரீனுக்கு கீழே வழங்கப்பட்டுள்ளது. இதுவும் பொத்தான்களுக்கு பதிலாக டச் சென்சிடீவுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ட்யூவல் ஜோன் க்ளைமைட் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் அட்ஜெஸ்ட்மென்ட் வசதிக் கொண்ட இருக்கை, ரெயின் சென்சிங் வைப்பர், ரெக்லைனிங் ரியர் இருக்கைகள், கார் இணைப்பு அம்சம், குரல் கட்டளை அம்சம், அலக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகிய அம்சங்களும் டூஸான் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

மேலும், மிக முக்கியமான அம்சமாக ஹூண்டாய் டூஸான் காரில் அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சத்தை ஐயோனிக் 5, க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய வெர்னா ஆகிய கார்களில் மட்டுமே பெற்றிருந்தநிலையில் தற்போது டூஸான் காரிலும் ஹூண்டாய் வழங்கியிருக்கின்றது. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக ஃபார்வார்டு கொள்ளிசன், பிளைன்ட் ஸ்பாட் ஸ்பாட் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட்ஸ், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் என எக்கச்சக்க வசதிகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

இதுதவிர கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக ஆறு ஏர் பேக்குகள், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், இஎஸ்சி, ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கின்றது. எஞ்ஜினை பொருத்தவரை இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றது. 2.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே டூஸான் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ. 27.7 லட்சத்திற்கு அடாஸ் தொழில்நுட்பத்துடன் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!

இதில், பெட்ரோல் மோட்டார் 156 எச்பி பவர் மற்றும் 192 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. டீசல் மோட்டார் 186 எச்பி பவரையும், 416 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதுதவிர ஹூண்டாய் அல்கஸார் காரில் வழங்கப்படுவதைப் போல 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் டூஸான் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai launched tucson suv in india at rs 27 7 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X