ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 Nios) காரில் புதிய சிஎன்ஜி (CNG) தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இத்தேர்வு குறித்து அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 Nios) கார் மாடலில் புதிய சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதிய தேர்வு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஆஸ்தா சிஎன்ஜி (Hyundai Grand i10 Nios Asta CNG) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 8.45 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

பெட்ரோல் மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைக்கும் வேரியண்டைக் காட்டிலும் இது ரூ. 92 ஆயிரம் அதிக விலை ஆகும். முன்னதாக, கிராண்ட் ஐ10 கார் மாடலின் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு ட்ரிம்களில் மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கி வந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆப்ஷனை வழங்கும் விதமாக புதிய சிஎன்ஜி தேர்வை ஆஸ்தாவில் வழங்கியிருக்கின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

ஹூண்டாய் நிறுவனம் மேக்னா சிஎன்ஜி தேர்வை 7 லட்சத்து 16 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி தேர்வை 7 லட்சத்து 69 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரு சிஎன்ஜி தேர்வுகளைக் காட்டிலும் காஸ்ட்லியான தேர்வாக புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் ஆஸ்தா சிஎன்ஜி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

இந்த தேர்வில் சிறப்பு வசதிகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் குரோம் கார்னிஷ் மற்றும் ரியர் வாஷர் மற்றும் வைப்பர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் புதிய சிஎன்ஜி தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் அதன் விலை பிற சிஎன்ஜி தேர்வுகளைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

கூடுதல் சிறப்பு வசதியாக எல்இடி டிஆர்எல்கள், எலெக்ட்ரிக் ஃபோல்டபிள் வசதிக் கொண்ட ஓஆர்விஎம்கள், ரூஃப் ரெயில்கள், கருப்பு நிறத்திலான பில்லர்கள் மற்றும் சுறா மீனின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா ஆகிய அம்சங்களும் புதிய சிஎன்ஜி தேர்வில் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

இதேபோல் காரின் உட்பகுதியிலும் பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல், அட்ஜெஸ்டபிள் ரியர் இருக்கை ஹெட்ரெஸ்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிக் கொம்ட ஸ்மார்ட் கீ, ஒயர்லெஸ் சார்ஜர், யுஎஸ்பி போர்ட் மற்றும் கூல்டு குளோவ் பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் புதிய ஆஸ்தா சிஎன்ஜி தேர்வில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வாய்ஸ் ரெகாக்னிசன் அம்சம் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றது. 8 அங்குல தொடுதிரையுடன் சேர்த்து 5.3 அங்குல நடுத்தர டிஜிட்டல் மல்டி இன்ஃபர்மேஷன் திரை ஒன்றும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஆஸ்தா சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 68 எச்பி பவரையும், 95.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறன் பெட்ரோல் மோட்டார் வெளியேற்றுவதைக் காட்டிலும் குறைவாகும். 14 எச்பி மற்றும் 19 என்எம் டார்க் குறைவான திறனையே இந்த சிஎன்ஜி மோட்டார் வெளியேற்றுகின்றது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வே இக்காரில் வழங்கப்படுகின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் புதிய சிஎன்ஜி தேர்வு அறிமுகம்... ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ மைலேஜ் தரும்!

ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் டூஸான் எனும் பிரீமியம் தர எஸ்யூவி ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரின் வருகை வரும் ஆகஸ்டு 4ம் தேதி அரங்கேற இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு தற்போது புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் ப்ரீ புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே கிராண்ட் ஐ10 காரில் புதிய சிஎன்ஜி தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய சிஎன்ஜி தேர்வு குறைந்தபட்சம் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28 கிமீ வரை மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai launches new grand i10 nios asta cng in india at inr 8 45 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X