ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

கடந்த 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

கடந்த 2022 மே மாதத்தில் பயணிகள் கார்கள் விற்பனையில் 3வது இடத்திற்கு சரிந்திருந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனையில் மீண்டும் தனது பழைய 2வது இடத்தை பிடித்துள்ளது. தென்கொரியாவை சேர்ந்த இந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை முந்தி தனது 2வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

கடந்த மாதத்தில் மொத்தம் 49,001 பயணிகள் கார்கள் ஹூண்டாய் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் 40,496 ஹூண்டாய் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்தியாவில் ஹூண்டாய் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 21% உயர்ந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

இதற்கு ஹூண்டாயின் சமீபத்திய அறிமுகமான வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காம்பெக்ட் எஸ்யூவியை முதன்மையான காரணமாக கூறலாம். இ, எஸ், எஸ்(ஆப்ஷ்னல்), எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(ஆப்ஷ்னல்) என 5 விதமான வேரியண்ட்களில் கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.53 லட்சத்தில் இருந்து ரூ.12.72 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

இருப்பினும் கடந்த மாத ஹூண்டாய் கார்கள் விற்பனையை பொறுத்தவரையில் க்ரெட்டா மாடலே முதலிடத்தை தொடர்கிறது. ஹூண்டாய் மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி காரான இது கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 13,790 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட க்ரெட்டா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 38.72% அதிகமாகும்.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

ஏனெனில் அந்த மாதத்தில் 9,941 க்ரெட்டா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் கடந்த மாத மொத்த ஹூண்டாய் கார்கள் விற்பனையில் க்ரெட்டாவின் பங்கு மட்டுமே 28.14% ஆகும். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூ 10,321 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 4,865 வென்யூ கார்களையே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

இந்த வகையில் வென்யூ கார்களின் விற்பனை சுமார் 112.15% அதிகரித்துள்ளது. இவ்வாறு வென்யூ கார்களின் விற்பனை குறைய துவங்கியதை அடுத்தே இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தும் பணியில் ஹூண்டாய் இறங்கியது. இந்த இரு எஸ்யூவி கார்களுக்கு அடுத்து 3வது இடத்தில் ஹூண்டாயின் மலிவான ஹேட்ச்பேக் காரான நியோஸும், 4வது இடத்தில் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரான ஐ20-யும் உள்ளன.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?

இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 8,992 மற்றும் 7,921 ஆகும். இவை இரண்டின் விற்பனையும் 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, ஐ20 மற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு கடும் போட்டி மாடலாக விளங்கி வருகிறது. 5வது இடத்தில் ஹூண்டாய் செடான் மாடலான அவ்ரா உள்ளது. இந்தியாவில் பலரால் தேர்வு செய்யப்படுகின்ற செடான் கார்களுள் ஒன்றான அவ்ரா கடந்த மாதத்தில் 4,102 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ கார்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்குது!! எல்லாம் எதனால் தெரியுமா?
Rank Hyundai Jun-22 Jun-21 Growth (%) YoY
1 Creta 13,790 9,941 38.72
2 Venue 10,321 4,865 112.15
3 NIOS 8,992 8,787 2.33
4 i20 7,921 6,333 25.08
5 Aura 4,102 3,126 31.22
6 Alcazar 1,986 3,103 -36.00
7 Verna 1,703 2,181 -21.92
8 Kona EV 179 7 2457.14
9 Santro 7 2,039 -99.66
10 Tucson 0 85 -100.00
11 Elantra 0 29 -100.00

6வது மற்றும் 7வது இடங்களை முறையே அல்கஸார் மற்றும் வெர்னா மாடல்கள் பிடித்துள்ளன. ஹூண்டாயின் சற்று விலைமிக்க பிரீமியம் தர கார்களான இவை இரண்டின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,986 மற்றும் 1,703 ஆகும். தற்போதைக்கு ஹூண்டாயின் ஒரே எலக்ட்ரிக் காராக விளங்கும் கோனா கடந்த மாதத்தில் 179 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரே காலத்தில் பலரது ஃபேவரட் காராக விளங்கிய சாண்ட்ரோவின் விற்பனையை ஏற்கனவே ஹூண்டாய் நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai motor india model wise sales june 2022 creta i10 i20 venue details
Story first published: Friday, July 15, 2022, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X