கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

இந்தியாவில் பயணிகள் கார்களை அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்கிவர, அதற்கு அடுத்த 2வது இடத்திற்கு கடந்த சில மாதங்களாக டாடா மோட்டார்ஸுக்கும், ஹூண்டாய் மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

கடந்த 2022 மே மாதத்திற்கு முன்பு வரையில் 2வது இடத்தை ஹூண்டாய் தான் பெரியதாக எந்தவொரு போட்டியும் இன்றி பெற்றுவந்தது. ஆனால் நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையினால் டாடா மோட்டார்ஸின் பயணிகள் கார்கள் விற்பனையும் அதிகரிக்க, கடந்த மே மாதத்தில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்து அசத்தியது.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

ஆனால் அதற்கடுத்த ஜூன் மாதத்திலேயே ஹூண்டாய் மீண்டும் 2வது இடத்தை தனதாக்கியது என்றாலும், இன்னமும் இந்த இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இடையே விற்பனை போட்டி வலுவாக இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் கூட ஹூண்டாய் மோட்டார்ஸ் மொத்தம் 49,510 பயணிகள் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ள நிலையில், ஹூண்டாயை மிகவும் நெருங்கியவாறு டாடா மோட்டார்ஸ் மொத்தம் 47,166 பயணிகள் கார்கள் விற்பனையுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 49,510 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ள ஹூண்டாய் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 46,866 கார்களையே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்திய சந்தையில் ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 5.64% அதிகரித்துள்ளது. அதுவே கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 50,500 ஹூண்டாய் கார்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை ஆனது 1.96% குறைவு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Hyundai Sales Aug 2022 Sales Vs Growth %
Aug-22 49,510 Jul 2021 (YoY) 5.64
Aug-21 46,866 Jun 2022 (MoM) -1.96
Jul-22 50,500 - -
கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

49,510 ஹூண்டாய் கார்கள் என்பது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 12,700 ஆகும். உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியிலும் 2021 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

ஏனெனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 12,202 ஆகும். இது கடந்த 2022 ஆகஸ்ட்டில் ஹூண்டாய் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 4.08% குறைவு. அதாவது கடந்த மாதத்தில் ஏறக்குறைய 500 கார்களை அதிகமாக வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஹூண்டாய் ஏற்றுமதி செய்துள்ளது.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!
Hyundai Aug-22 Aug-21 Growth %
Domestic 49,510 46,866 5.64
Exports 12,700 12,202 4.08
Cumulative 62,210 59,068 5.32

ஒட்டு மொத்தமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 62,210 கார்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாயின் இந்த ஒட்டுமொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 2021 ஆகஸ்ட்டில் 59 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால், இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும்.

கார்கள் விற்பனையில் டாடாவை மீண்டும் முந்திய ஹூண்டாய்!! ஏற்றுமதியும் அதிகரிப்பு!

அப்படியென்றால், ஹூண்டாயின் உள்நாட்டு விற்பனையும் புதிய உச்சத்தை தொடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் விற்பனை ஏற்கனவே 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துவிட்ட நிலையில், இந்த செப்டம்பரில் மேலும் 50 ஆயிரம் கார்களை நம் நாட்டில் ஹூண்டாய் விற்பனை செய்யும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Hyundai motors india sales aug 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X