சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் நான்காம் தலைமுறை டூஸான் (4th Gen Tucson) எஸ்யூவி ரக காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. எங்கு, எவ்வளவு முன்தொகையில் இக்காரை முன்பதிவு செய்வது என்பது பற்றிய விபரத்தையும், கார்குறித்த முக்கிய தகவலையும் இந்த பதவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான தகவலுக்குள் போகலாம்.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

அதி-நவீன தொழில்நுட்ப அம்சம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் ஆகியவற்றுடன் 2022 ஹூண்டாய் டூஸான் கார் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது 4ஆம் தலைமுறை வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக சமீபத்தில்தான் இக்காரை வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியிலும் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

இதன் அடிப்படையிலேயே இந்த காருக்கான புக்கிங் பணிகளையே ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இந்த பணிகள் நிறுவனத்தின் சிறப்பு டீலர்களான சிக்னேச்சர் டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களில் 246 சிக்னேச்சர் விற்பனையகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, ஆன்-லைன் வாயிலாகவும் புக்கிங்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. ஹூண்டாய் நிறுவனம் புதிய டூஸான் காரின் விலையை விரைவில் அறிவிக்க இருக்கின்றது. வரும் ஆகஸ்டு 4ம் தேதி கார் குறித்த அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே காருக்கான புக்கிங்குகள் தற்போது நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. புதிய ஹூண்டாய் டூஸான் சிக்னேச்சர் மற்றும் பிளாட்டின் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

இந்த புதிய காரின் வருகை டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் (Advanced Driver Assistant System) இக்காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டூஸான் காரில் இடம் பெற இருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

மோதலை தவிர்த்தல், எதிரில் வரும் வாகனங்களுக்கு ஏற்ப வேகத்தை கன்ட்ரோல் செய்தல், டிரைவரின் உதவியில்லாமல் லேனுக்குள்ளேயே செல்லுதல், பாதுகாப்பாக லேனை விட்டு வெளியேறுதல் மற்றும் தேவைக்கேற்ப ஹை-பீமை ஆக்டிவேட் செய்தல் என்பது பல்வேறு செயல்களை அடாஸ் தன்னாட்சி தொழில்நுட்பத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

இதுமட்டுமின்றி, பாதசாரிகள், சைக்கிளிஸ்ட்களின் குறுக்கீடுகளைக் குறித்து தகவல் அளித்தல், ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் ஸ்டாப் அண்ட் கோ வசதிகளையும் புதிய அடாஸ் அம்சத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். பயணிகளை பத்திரமாக வீடு சேர இந்த அம்சமே போதுமானதாக இருந்தாலும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்க ஹூண்டாய் தவறவில்லை.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி அம்சங்களுக்காக 45 வகையான நவீன கருவிகளை வழங்கியிருக்கின்றது. அவற்றில் 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ மிர்ரர் ஆகிய அம்சங்களை வழங்கியிருக்கின்றது.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

இதுமட்டுமின்றி பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இக்காரில் ஹூண்டாய் வாரி வழங்கியிருக்கின்றன. அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வாயிலாக இயங்கும் ஹோம்-டூ-கார் ஃபங்கசன், ஸ்மார்ட் கீ, மல்டி ஏர் மோட், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், டூர் பாக்கேட் லைட்டிங் மற்றும் பின் பயணிகளுக்கான வால்க்-இன் டிவைஸ் உள்ளிட்ட அம்சங்களும் 2022 டூஸான் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

எஞ்ஜினை பொருத்தவரை இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் டூஸான் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 2.0 லிட்டர் 4 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் விஜிடி டர்போ-டீசல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே டூஸான் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

சூப்பரான ஹூண்டாய் காருக்கு புக்கிங் தொடக்கம்... ஒவ்வொரு அம்சமும் கவர்ந்திழுக்குதேப்பா!

இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 156 பிஎஸ் மற்றும் 192 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதைவிட சர்று அதிக பவரை வெளியேற்றும் எஞ்ஜினாக டீசல் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் உச்சபட்சமாக 186 பிஎஸ் மற்றும் 416 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் இயக்கத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக ஸ்நோ, மட் மற்றும் சேண்ட் ஆகிய ரைடிங் மோட்களையும் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai opens bookings for tucson ahead of august launch
Story first published: Monday, July 18, 2022, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X