டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சிறிய எஸ்யூவி கார் ஒன்றை அடுத்த வரும் டாடா பஞ்சிற்குப் போட்டியாகக் களம் இறக்கத் தயாராகி வருகிறது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தியான ஹூண்டாய் நிறுவனம் சமீபகாலமாக மார்கெட்டில் தள்ளாடி வருகிறது. அந்நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை மக்கள் வாங்குவதைக் குறைத்து வருகின்றனர். இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை நாளுக்கு நாள் சரிந்து கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் ஐ10, ஐ20 ஆகிய கார்கள் மார்கெட்டில் நல்ல விற்பனையைப் பெற்றிருந்தாலும் சமீபமாகப் போட்டி நிறுவனங்கள் வெளியிட்ட கார்கள் ஹிட்டானதால் இந்த கார்களுக்கான மவுசும் குறைந்துவிட்டது.

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

தற்போது இந்நிறுவனத்தின் க்ரெட்டா கார் மார்கெட்டில் நல்ல விற்பனையிலிருந்தாலும் அதற்கும் போட்டியாக மற்ற நிறுவனங்கள் கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் ஹூண்டாய் நிறுவனம் மார்கெட்டில் தன் பங்கை நிலைத்து வைக்க அடுத்த கட்டமாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது.

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

இந்நிலையில் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் 2முறையாக அறிமுகம் செய்த சான்ட்ரோ காரையும் சமீபத்தில் நிறுத்தியதாகச் செய்திகள் வருகின்றன. இது குறித்து ஹூண்டாய் நிறுவனம் எந்த விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் செய்திகளில் அப்படியான விஷயம் வெளியாகியுள்ளது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

இதற்கு முக்கியமான காரணம் மக்கள் க்ராஸ் ஓவர் ரக கார்களை அதிகம் ரசிக்கத் துவங்கியது தான் தெரிகிறது. இந்நிறுவனத்தின் ஐ10, ஐ20 கார்கள் எல்லாம் ஹேட்ச்பேக் ரக கார்களாக உள்ளன.ஆனால் மக்கள் எஸ்யூவி ஸ்டைலை கலந்த ஹேட்ச் பேக் ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு உதாரணம் டாடா பஞ்ச் கார் தான்.

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

இந்த கார் குறைந்த விலையில் பல விதமான வசதிகளைக் கொண்டிருப்பதால் இந்த காரை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். இந்நிலையில் இதற்கிடையில் ஹூண்டாய் நிறுவனம் குறைந்த பட்ஜெட் கார்களை அதிகம் விற்பனை செய்து வந்த நிலையில் அரசு பயணிகள் கார்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் சில விதிமுறைகளை அமல் படுத்துவது குறைந்த பட்ஜெட் கார்களை தயாரிப்பவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

இந்த பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் குறைந்த பட்ஜெட்கார்களை பொருத்தினால் காரின் விலை எகிறும். அந்த விலையை ஒப்பிடும் போது மக்கள் மிடியம் பட்ஜெட் கார்களை வாங்கும் எண்ணத்திற்குச் சென்றுவிடுவார்கள். தற்போது குறைந்த பட்ஜெட்டில் சிறிய எஸ்யூவி காராக டாடா பஞ்ச் மார்கெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது. மாதம் 10 ஆயிரம் கார்கள் வரை விற்பனையாகின்றன.

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் அடுத்தாண்டு இந்த செக்மெண்டில் புதிய காரை மார்கெட்டில் இறக்கத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூண்டாய் மட்டும் அல்லாமல் மாருதி, மஹிந்திரா, போன்ற நிறுவனங்களும் டாடா பஞ்சிற்குப் போட்டியாக கார்களை உருவாக்கி வருகின்றனர்.

டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய் . . . அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை . . .

தற்போது ஹூண்டாய் நிறுவனமும் எக்ஸ்சென்ட் பிரைம், ஆரா, ஐ10 நியாஸ் டீசல் கார்களை அதிகமாக உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது மிடில் கிளாஸ் மக்கள் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பல நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட் கார்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ளது. அதில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் இணைந்துள்ளது. அடுத்த ஆண்டு என்ன நடக்கிறது என பொருத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Hyundai plans to launch all new small SUV next year to compete with tata punch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X