Just In
- 22 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- Sports
புயலாய் வந்து காணாமல் போன தமிழக வீரர்.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.. விளையாடிய காதல்
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- News
ஆடித்தபசு விழா கோலாகலம்.. கோமதி அம்மனுக்கு காட்சி அளித்த சங்கரநாரயணர்..பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
- Finance
சீனாவிடம் யாரும் கடன் வாங்காதீங்க.... எச்சரிக்கை விடும் வங்கதேச அமைச்சர்!
- Technology
பாச மலர்களுக்கு அன்பு பரிசு: Slim ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
கம்மி பட்ஜெட்ல எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர துடிக்கும் ஹூண்டாய், 2028ம் ஆண்டிற்குள் 6 புதிய கார்கள் அறிமுகம்
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளில் 6 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தென்கொரியாவை மையமாகக் கொண்ட நிறுவனம் ஹூண்டாய் மோட்டார்ஸ், இந்நிறுவனம் இந்தியாவில் தனியாகத் தொழிற்சாலை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

தற்போது ஹூண்டாய் நிறுவனத்தைப் பொருத்தவரை பெட்ரோல்/டீசல் இன்ஜின் கார்களை அதிகம் தயாரித்து வந்தாலும் அந்நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது ஒரு கண் இருக்கிறது. ஏற்கனவே அந்நிறுவனம் கோனா என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தினர்.

ஆனால் கோனா கார் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை. இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது அதன் விலை தான் எலெக்டரிக் கார்கள் மிக அதிகமாக விலையில் இருப்பதால் அதை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது உள்ள மார்கெட் நிலைமையில் டாடா டிகோர் தான் குறைந்த விலை எலெக்டரிக் காராகும்.

தற்போது இந்திய மார்கெட்டில் எலெக்டரிக் வாகன விற்பனை ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது ஒட்டு மொத்த வாகன விற்பனையில் எலெக்டரிக் வாகனம் வெறும் ஒரு சதவீதம் தான் இருக்கிறது. ஆனால் இந்திய அரசு எலெக்ட்ரிக் வாகன விற்பனையை வரும் 2030ம் ஆண்டிற்கும் 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டுவருகிறது.

சுற்றுச்சூழல் மாசு மற்றும் கச்சா எண்ணெய் தேவை ஆகியவற்றைக் குறைக்க இந்த திட்டத்தை முன்னிறுத்தி வருகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் பெட்ரோல், டீசல் கார்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கிவிட்டன.

விரைவில் இந்தியாவில் அந்நிறுவனம் ஐயானிக்5 என்ற காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந் கார் ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகமாகி பயங்கரமாக ஹிட்டாகியுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 480 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரும் இந்தியாவில் பிரிமியர் எலெக்டரிக் காராக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் சிறப்பான எதிர்காலம் இருப்பதாகக் கருதும் ஹூண்டாய் நிறுவனம் அந்த வாகன தயாரிப்பிற்காக தற்போது 40 பில்லியன் ரூபாய் அமெரிக்க டாலர் மதிப்பில் 512 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை எலெக்ரிக் வாகனங்களைத் தயாரிக்க முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் 2028ம் ஆண்டிற்குள் மொத்தம் 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் குறைந்த விலை கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை துறை இயக்குநர் கார்க் தெரிவித்துள்ளார்.

மேலும் கோனா மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து இந்நிறுவனம் அடுத்தடுத்து கார்களை இந்தியாவில் ஹிட்டாக்கும் நோக்கில் களமிறக்கவுள்ளதாகவும், குறைந்த விலை எலெக்டரிக் கார்களாக இதைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் புதிதாக ஒரு பாலிசியையும் கையில் எடுத்துள்ளது.

அதன்படி தற்போது அந்நிறுவனம் விற்பனை செய்யும் பெட்ரோல்/டீசல் கார்களை மேம்படுத்தி விலையை அதிகரிக்கவும், எலக்டரிக் வாகனங்களின் விலையைக் குறைக்கவும், இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்க்கலாம்
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
விபத்து நடந்தா காசு மட்டும் கொடுத்து ஏமாறாதீங்க... என்ன செய்யனும்னு இங்க பாருங்க...
-
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!