விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமலுக்கு வரவிருக்கும் நிலையில் தன்னுடைய சிறிய கார்களை விற்பனையில் இருந்து வெளியேற்ற இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் சிறிய கார்களின் உற்பத்தியை கை விட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் கார் உற்பத்தி நிறுவனம், ஹூண்டாய் (Hyundai). இந்நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டு வரும் வர்த்தக பணிகளை மறு சீரமைப்புச் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தின் நடவடிக்கையால் அது தற்போது விற்பனைச் செய்து வரும் சிறிய கார்கள் சந்தையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

தற்போது இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களை வாங்குவோர் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றனர். ஆரம்பத்தில் இந்தியர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் கார்களுக்கே மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்து வந்தது. இதற்கு மிக சிறந்த உதாரணமே ஹூண்டாயின் சேன்ட்ரோ கார்தான். பலரின் விருப்பமான வாகனமாக காராக இது சில வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஆகையால், விற்பனையில் எப்போது உச்சத்தில் இக்கார் இருக்கும். ஆனால், தற்போது புதுமுகங்களின் வருகையால் விற்பனையில் சற்றே பின் தங்கிவிட்டது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

குறிப்பாக, புதுமுக எஸ்யூவி கார்களின் வருகை இக்காரை இருந்த இடம் தெரியாத அளவிற்கு பின்னோக்கி தள்ளிவிட்டது. நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான வென்யூவிற்குகூட தற்போது இந்திய சந்தையில் மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், உலகளவில் விற்கப்படும் ஒவ்வொரு 3 வென்யூ மாடல்களில் 2 இந்தியாவில் விற்கப்படுகின்றன. இதனை ஹூண்டாய் நிறுவனமே உறுதிப்படுத்தியிருக்கின்றது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

உலகளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஹூண்டாய் வென்யூ விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிலேயே இக்காருக்கு மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுமாதிரியான தரமான வரவேற்பையே இந்தியாவில் பிற எஸ்யூவி ரக கார்களும் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் ஹேட்ச்பேக் கார்களுக்கு தொடர்ச்சியாக டிமாண்ட் குறைந்த வண்ணம் இருக்கின்றது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

இந்த நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனம் அதன் இந்திய வர்த்தக பணிகளை மறு சீரமைப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், விலை குறைவான மற்றும் லாபத்தை குறைவாகக் வழங்கக் கூடிய சிறிய ரக கார்களை ஹூண்டாய் சந்தையைவிட்டு வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில் இதற்கான தகவல்கள் வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் விளங்கியது. ஆனால், இப்போது இல்லை. கடந்த மே மாத கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனைச் செய்து ஹூண்டாயை பின்னுக்கு தள்ளியது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

இத்தகைய கடும் போட்டி தற்போது சந்தையில் ஏற்பட தொடங்கியிருப்பதாலும், இந்தியர்கள் எஸ்யூவி மற்றும் செடான் ரக கார்களை அதிகம் விரும்புபவர்களாக மாறியிருப்பதுவுமே சேன்ட்ரோ போன்ற மலிவு விலை ஹேட்ச்பேக் கார்களின் உற்பத்தியில் இருந்து விளகும் முடிவை ஹூண்டாய் எடுக்க காரணமாக உள்ளது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

1998 ஆம் ஆண்டிலேயே இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. அறிமுகத்திற்கு பின்னர் இந்தியாவின் பிரபலமான காராக அது மாறியது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 41 சதவீதம் பங்கை பிடிக்குமளவிற்கு முன்னணி கார் மாடலாக அது இருந்தது. ஆனால், மிக பெரிய சரிவில் இக்காரின் விற்பனை உள்ளது.

விலை குறைவான சிறிய கார்களின் விற்பனையை கை விடுகிறதா ஹூண்டாய்?.. மாருதி சுஸுகியை தொடர்ந்து அதிரடி!

தற்போது நிறுவனத்தின் வென்யூ காருக்கு நல்ல வரவேற்பு இந்திய சந்தையில் கிடைத்துக் கொண்டிருப்பதனால், இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை மிக சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பன்முக மாற்றங்களுடன் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 7.53 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இவையே அந்த மூன்று விதமான மோட்டார் தேர்வுகள் ஆகும்.

Most Read Articles
English summary
Hyundai realigns business strategy in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X