ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப கார்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை வழங்க உள்ளது. இந்த நிலையில் புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் உள்ள டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளன.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

Source: Rushlane

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்லேன் செய்தித்தளம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை தான் இங்கே காண்கிறீர்கள். இந்த படங்களில், பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் காட்சித்தரும் புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் அட்டகாசமான வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தை காண முடிகிறது.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின் மூலம் திருத்தப்பட்ட க்ரோம் உள்ளீடுகளுடன் ரேடியேட்டர் க்ரில் மற்றும் புதிய முன்பக்க பம்பர் உடன் மாற்றியமைக்கப்பட்ட முன்பக்கத்தை 2022 வென்யூ கொண்டுள்ளதை காண முடிகிறது. ஆனால் பிளவுப்பட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் அப்படியே தொடரப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில் பெரியதாக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

அதிகப்பட்சமாக அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்படலாம். முன்பக்கம் மட்டுமின்றி வென்யூ காரின் பின்பகுதியும் குறிப்பிடத்தக்க அளவில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன்படி புதிய L-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப் க்ளஸ்ட்டர்கள் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் காரின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. டெயில்லைட்களை எல்இடி விளக்கு பார் ஒன்று இணைக்கிறது.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

உட்புறத்தில் புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார் க்ரெட்டாவின் 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ளது. இதன் டேஸ்போர்டு இரு விதமான நிறங்களில் காட்சித்தர, அதே ட்யூல்-டோன் நிறங்களில் இருக்கைகளும் காட்சி தருகின்றன. புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட்டின் மற்ற சிறப்பம்சங்களாக அலெக்ஸா உடனான 'ஹோம் டூ கார்', கூகுள் குரல் உதவி மற்றும் 2-நிலை சரியக்கூடிய பின் இருக்கைகளை கூறலாம்.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

மற்றப்படி இயந்திர பாகங்களில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது. இதனால், தற்போதைய வென்யூவின் அதே 998சிசி டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்கிற 3 என்ஜின் தேர்வுகளில்தான் 2022 வென்யூவும் களமிறக்கப்படும். இதில் 998சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி & 172 என்எம் டார்க் திறனையும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி & 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக விளங்குகின்றன.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

டீசல் என்ஜின் 99 பிஎச்பி & 240 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவற்றுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக, 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் என 4 விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் படங்கள் மூலமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளிக்காட்டி இருந்தது.

ஷோரூம்களை வந்தடைய துவங்கிய புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார்கள்!! புக்கிங் ஆல்ரெடி ஸ்டார்ட்!

மேலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற ஜூன் 16ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதையும் அறிவித்திருந்தது. ஆதலால் வரும் 16ஆம் தேதிக்கு பிறகே புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பதையும், வேரியண்ட்களின் விபரங்களையும் அறிய முடியும். தற்சமயம் வென்யூ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.11 லட்சத்தில் இருந்து ரூ.11.84 லட்சம் வரையில் உள்ளன.

இதற்கான முன்தொகையாக ரூ.21 ஆயிரம் பெறப்படுகிறது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் 2022 வென்யூ காரை நாடு முழுவதுமுள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இணையத்தளம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். இதனை தொடர்ந்து தற்போது கார்கள் டீலர்ஷிப்களை வந்தடைய ஆரம்பித்துள்ளன. டெலிவிரிகள் இந்த ஜூன் மாத இறுதியில் இருந்து துவங்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai venue facelift reaches dealerships
Story first published: Saturday, June 4, 2022, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X