கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Venue Facelift) காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் கடந்த ஜூன் 3ம் தேதி தொடங்கப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த ஜூன் 16ம் தேதி ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடல் முறைப்படி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வெனியூ காரின் இந்த புதிய மாடலுக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை (Over 21,000 Bookings) பெற்றுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ஹூண்டாய் வெனியூ ஏற்கனவே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

இதில் பல்வேறு அப்டேட்களை செய்து, ஹூண்டாய் நிறுவனம் தற்போது ஃபேஸ்லிஃப்ட் மாடலாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பழைய மாடலை விட இந்த புதிய மாடல் பல்வேறு விதங்களிலும் மேம்பட்டதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு எண்ணிக்கை இதனை நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் கார் மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 998 சிசி டர்போ பெட்ரோல் (1.0 லிட்டர் இன்ஜின்) ஒன்றாகும். இதுதவிர 82 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படுகிறது.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூன்றாவது மற்றும் கடைசி இன்ஜின் தேர்வாகும். ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் காரில் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் நிலையில், ஒட்டுமொத்தமாக 4 கியர் பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

அவை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகும். அதேபோல் ஏராளமான வசதிகளையும் ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது. இதில், அப்டேட் செய்யப்பட்ட 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் ப்யூரிஃபையர், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 7.53 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.72 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்கள் ஹூண்டாய் வெனியூ காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றவை.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் தற்போது ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் காரை பரிசாக வென்றுள்ளார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்ததை தொடர்ந்து, அவருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே விற்பனையில் உள்ள இன்னும் பல்வேறு கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் போன்ற புதிய மாடல்கள் அடுத்ததாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன.

Most Read Articles

English summary
Hyundai venue facelift receives over 21000 bookings in india
Story first published: Thursday, June 23, 2022, 13:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X